குவைத் தீவிபத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இங்கு வேலைக்காக கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்ற தொழிலாளர்களில் 40 பேர் இந்த தீ விபத்தில் உயிரழ்ந்திருக்கிறர்கள். குவைத் நகரில் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மங்காப் என்னும் இடத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பேர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள 6 மாடி கட்டிடத்தில் சுமார் 200 பேர் வசித்து வந்ததாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரழந்தவர்களில் 23 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள், 7 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள், இன்னும் சிலர் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வளைகுடா பகுதியில் பல்வேறு மருத்துவமனையகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களை மீட்க இந்திய தூதரக அதிகாரிகள் களத்தில் இறங்கினர். அரசுக்கு சொந்தமான விமானத்தின் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வந்தனர். இங்கு அவர்களின் சொந்த ஊரில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது.
தீ விபத்து நடந்த கட்டிடம் என்.பி.டி.சி. குழுமம் என்ற பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்த குழமம் கே.ஜி.ஆப்ரஹாம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்று சொல்லப்படுகிறது. இதில் அவர் பங்குதாரராகவும் இருக்கிறார் என்கிறார்கள். கே.ஜி.ஆப்ரஹாம் கேரளாவில் கே.ஜி.ஏ. குரூப் நிறுவனங்களுக்கு சொந்தக்காரராகவும், ஐந்து நட்சத்திர ஓட்டல் உரிமையாளராகவும் இருக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் கே.ஜி. ஆப்ரஹாம் மலையாளத்தில் திரைப்படங்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதே. சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படமான ஆடு ஜீவிதம் என்ற படத்தை இஅவர் தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் கதையே குவைத்தில் வேலைக்காக செல்வோர்கள் எப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள், அவர்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதையே காட்டியது. இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் கட்டிடத்தில் தங்கப்பட்டிருந்தோர் எண்ணிக்கை அளவு கடந்தது என்பதும் அதனால்தான் விபத்து ஏற்பட்டவுடன் உடனே யாரும் வெளியேற முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
இன்னொரு பக்கம் கே.ஜி.ஆபரஹாம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலருக்கும் பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார். இஅவர் உதவியால் பலரது குடும்பத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.