இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த திரைப்படப்பாடல் உரிமை குறித்த வழக்கு பல வருடங்களாக சென்னை உயர் நீதி மன்றத்தில் நடந்து வருவது பலரும் அறிந்ததே. பல கட்ட வாத – பிரதிவாதங்கள் நடந்து வரும் நிலையில் நேற்று எக்கோ தரப்பில் வைக்கப்பட்ட வாதம் வெளியாகியிருக்கிறது. அதில் இளையராஜா தயாரிப்பாளர்களிடையே உரிய தொகை பெற்று விட்ட நிலையில் உரிமை கோர முடியாது. அதோடு தயாரிப்பாளரிகளிம் உரிமை குறித்த எந்த ஒப்பந்தத்தையும் எழுதி வாங்க வில்லை என்றும் வாதத்தை முன் வைத்திருக்கிறது. இதற்கு பதில் வாதத்தை இளையராஜா தரப்பிற்கு கொடுக்க நீதிமன்றம் அவகாசம் அளித்து வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது.
இந்த வாதத்தில் எக்கோ தரப்பில் கூறப்பட்டுள்ள வாதத்தில் ஏ,ஆர்.ரகுமான் தன் பாடலுக்கான உரிமை தனக்குத்தான் சொந்தம் என்பதை தயாரிப்பாளர்களிடம் சொல்லி அவர்கள் சம்மதித்தப் பிறகே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். அதனால் அவரது பாடல்களின் உரிமை அவருக்குத்தான் சொந்தம். தயாரிப்பாளர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு உண்மை வெளிவந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக பாடல்களை உரிமை எழுதிக் கொடுக்கும் போக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் ஏற்பட்டிருக்கிறது. அதற்கும் இளையராஜாவின் வழக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிறகுதான் இது போன்ற விஷயத்தில் பல இசைய்மைப்பாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இளையராஜா 1980 காலகட்டங்களில் பல படங்களுக்கு இரவு பகல் பாராமல் இசையமைத்துக் கொண்டிருந்ததால் அவர் இந்த விற்பனை விஷயங்களிலும், பாடல் உரிமை மற்றும் பணம் தொடர்பான விஷய்ங்களிலும் அதிகம் கவனம் செலுத்தவில்லை.
இதனால் தனது நண்பரான பார்த்தசாரதி என்பவரை பொறுப்பாக வைத்து எக்கோ என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் தனது பாடல்களை விற்பனை செய்யும் உரிமையை அவர்களுக்கு வழங்கினார். நம்பிக்கையின் அடிப்படையின் வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தம் மற்றும் விற்பனை உரிமை காலப்போக்கில் கருத்துவேறுபாடு ஏற்பட காரணமாகிறது. இதுவே முழு விற்பனை அதிகாரமாக மாறி் இன்று நீதி மன்றம் வரை வந்து நடக்கும் இடத்திற்கு வந்திருக்கிறது.
ஆனால், ஏ.ஆர்.ரகுமான் விஷயத்தில் அவர் நேரடியாகவே தயாரிப்பாளர்களிடம் பாடல் உரிமை தனக்குத்தான் என்பதை முதல் படத்திலேயே தெளிவாக எழுதுத்துப் பூர்வமாக எழுதி வாங்கியிருக்கிறார். இதையே இன்று இருக்கும் இளம் இசையமைப்பாளர்களும் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் அவர்கள் விஷயத்தில் பாடலுக்கான அனைத்து உரிமையும் அவர்களுக்குத்தான் சொந்தம் என்கிற சட்டம் செல்லும்.
இளையராஜாவின் கவனம் முழுவதும் படங்களுக்கு இசையமைப்பதில் இருந்ததால் இதில் கவனம் செலுத்தாமல் இருதததே அவருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் சூழல் வந்திருக்கிறது.