நடிகர் விஜய்யின் நீண்ட நாள் கனவு ஒன்று உண்டு. அது ரஜினிக்கு இணையாக தன் படங்களின் வசூலும் தனக்கான சம்பளமும் இருக்க வேண்டும் என்பது. இதில் ரஜினியின் படங்களுக்கு இணையாக விஜய்யின் படங்களும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றன. இந்த நேரத்தில்தான் அவரது சூப்பர் ஸ்டார் பட்ட விவகாரமும் எழுந்தது. இதனை மவுனமாக வேடிக்கை பார்த்தாரே தவிர விஜய் அது குறித்து வேறு எங்கும் கருத்து தெரிவிக்க வில்லை. ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்த பட்டம் குறித்து அவர் கடந்து சென்று விட்டார். அதே சமயம் சம்பளம் விஷயத்தில் கவனமாக இருந்து கோட் படத்தில் ரஜினிக்கு இணையாக வளர்ந்து நிற்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.
ரஜினிக்கும் விஜய்க்கும்தான் தற்போது சம்பளம் விஷயத்தில் போட்டி நிலவி வருகிறது. ரஜினி நூறு கோடியிலிருந்து இருநூறு கோடியாக மாறியிருக்கும் இந்த நேரத்தில் விஜய் கோட் படத்திற்கு வாங்கியிருக்கும் சமபளம் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெங்கட் பிரபு படம் தொடங்கியதிலிருந்தே விஜய்யின் சம்பளம் தொடர்பான சர்ச்சை ஓடிக்கொண்டிருந்தது. தற்போது விஜய்க்கு 210 கோடி சம்பளம் இந்த படத்திற்காக கொடுக்கப்பட்டிருப்[பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதன் மூலம் ரஜினியை விஜய் தாண்டி விட்டார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் ரஜினிக்கு வேட்டையன்படத்திலேயே இருநூறு கோடி கொடுக்கப்பட்டதாகவும். அடுத்து வர இருக்கும் கூலி படத்தில் 300 கோடியை தொட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. திரைக்குப் பின்னால் நடக்கும் இந்த சம்பள யுத்தாம் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இருவரும் மாறி மாறி இப்ப்டி சம்பளத்தை ஏற்றிக் கொண்டு போனால் திரைய்ரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இந்த பிரமாண்ட படங்கள் எப்படி லாபம் பார்க்க முடியும். தியேட்டர்கள் இப்போது இருக்கும் சூழலில் அதனை சமாளிக்க முடியாது என்கிறார்கள்.
இதற்காக அவசர கூட்டம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக சென்னையில் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதே போன்றதொரு சூழலில்தான் லிங்கா படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டது. கம்பெனி படத்தை ஒரு லாபம் வைத்து விற்க, ஆனால் அதை மீண்டும் ஒரு வியாபரத்திற்கு விற்பனை செய்து விட்டனர் இதனால் இருட்டிப்பு லாபத்தை தியேட்டரில் எடுக்க முடியாமல் வாங்கிவயர்கள் திணறினார்கள். அதே போன்றதொரு சூழல் தற்போதும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் உடனே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசி வருகிறார்கள். ஆனால் வியாபாரத்தில் அதிக லாபத்தை ஈட்டினால் அதனை வெளிப்படையாக அறிவிக்க தயரா என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.