No menu items!

தமிழ்நாடு ஜப்பானுக்கு சமம்! – எப்படி? இப்படிதான்!

தமிழ்நாடு ஜப்பானுக்கு சமம்! – எப்படி? இப்படிதான்!

உலகளவில் புகழ்பெற்றது ஜப்பானிய கல்வி முறை. முக்கிய காரணம் அதன் ஆரம்பக் கல்வி. இந்தளவு உலகளாவிய ரீதியில் பாராட்டப்படும் ஜப்பான் கல்வி நிலையங்களுக்கு நிகரானது தமிழ்நாட்டின் கல்வி நிலையங்கள் என்று பாராட்டுகிறார், ஜப்பானின் இபராக்கியில் உள்ள தேசிய ஆராய்ச்சி பல்கலைக்கழகமான சுகுபாவில் விஞ்ஞானியாக பணியாற்றும் கணேசன் ஏழுமலை.

இது தொடர்பாக கணேசன் ஏழுமலை எழுதியுள்ள கட்டுரையில், “ஜப்பான் மக்கள் தொகை 12.5 கோடி; தமிழ்நாடு மக்கள் தொகை 7.71 கோடி. இந்தப் பின்னணியில் கல்வியில் தமிழ்நாடு vs. ஜப்பான் பங்களிப்பு எப்படியுள்ளது என்று ஒப்பீடுவோம்.

ஜப்பானில்
தேசிய பல்கலைக்கழகங்கள்: 86
மாகாண பல்கலைக்கழகங்கள்: 101
தனியார் பல்கலைக்கழகங்கள்: 620
இதில் தனியார் பங்களிப்பு 76%.

தமிழ்நாட்டில்
பல்கலைக்கழகங்ககள்: 22
ஒன்றிய பல்கலைக்கழகங்கள்: 2 (ஐஐடி, என்ஐடி இல்லாமல்)
தனியார் பல்கலைக்கழகங்கள: 32
அரசு பொறியியல் கல்லூரிகள்: 59
தனியார் பொறியியல் கல்லூரிகள்: 574
இதில் தனியார் பங்களிப்பு 88%

ஜப்பானில் பொறியியல் கல்லூரிகள் என்றில்லாமல் பல்கலைக்கழகங்கள் என்றே இயங்கும். எனவே, தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களோடு பொறியியல் கல்லூரிகளையும் சேர்த்தே கொடுத்துள்ளேன்.

மொத்தமாக தமிழ்நாட்டின் பல்கலை + பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை: 689. ஜப்பானில் 807. ஜப்பானைவிட தமிழ்நாடு சற்றே குறைவு. ஆனால், மக்கள் தொகையொடு ஒப்பிட்டால் தமிழ்நாடு சதவீதம் அதிகம்.

இனி பாலிடெக்னிக் கல்லூரிகள்…

ஜப்பானில்
தேசிய கல்லூரிகள்: 55
மாகாண கல்லூரிகள்: 5
தனியார்: 3

தமிழ்நாட்டில்
அரசுக் கல்லூரிகள்: 103
தனியார் கல்லூரிகள்: 406

தொழிற்நுட்பக்கல்விக் கூடங்கள் ஜப்பானை விட அதிகமாகவே தமிழ்நாட்டில் உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் தனியார் பங்களிப்பு 79.8%, ஜப்பானில் 87.3%

இனி கலை & அறிவியல் கல்லூரிகள்…

தமிழ்நாட்டில்
அரசுக் கல்லூரிகள்: 171
அரசு உதவி பெறும் கல்லூரிகள்: 162
தனியார் கல்லூரிகள்: 1249   

ஜப்பானில் (இந்தப் படிப்பை ஜூனியர் கல்லூரி என்பார்கள்)
மாகாண அரசுக் கல்லூரிகள்: 14
தனியார் கல்லூரிகள்: 295

கலை & அறிவியல் கல்லூரிகளில் தனியார் பங்களிப்பு; தமிழ்நாட்டில் 79%, ஜப்பானில் 95.5%

இனி மருத்துவம்…

தமிழ்நாட்டில்
அரசுக் கல்லூரிகள்: 38 (51.4%)
தனியார் கல்லூரிகள்: 36 (48.6%)

ஜப்பானில்
அரசுக் கல்லூரிகள்: 51 (63.7%)
தனியார் கல்லூரிகள்: 29 (36.3%)

செவிலியர் கல்லூரிகள்…

தமிழ்நாட்டில்
அரசுக் கல்லூரிகள்: 36
அரசு உதவிக் கல்லூரிகள்: 16
தனியார் கல்லூரிகள்: 197

ஜப்பானில்
மாகாண அரசுக் கல்லூரிகள்: 93
தனியார் கல்லூரிகள்: 607

செவிலியர் கல்லூரிகளில் தனியார் பங்களிப்பு: தமிழ்நாட்டில் 79%, ஜப்பானில் 86.7%

மக்கள் தொகை அடிப்படையில் கல்வி நிலையங்கள் எண்ணிக்கையை சதவிகித அடிப்படையில் பார்த்தால் கிட்டதட்ட ஜப்பானுக்கு சம அளவில் தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள் உள்ளன” என்கிறார் கணேசன் ஏழுமலை.

சரி, ஜப்பானுக்கு சம அளவில் இருந்தும் ஏன் உற்பத்தி துறையில் அந்தளவு தமிழ்நாடு முன்னேறவில்லை, பின்தாங்கி உள்ளது?

இதற்குக் காரணம், “கல்வி நிலையங்களில் முதலீடு செய்துள்ளது போல், Research and Developmentஇல் ‘தனியார்’ பங்களிப்பு தமிழ்நாட்டில் (இந்தியாவிலும்) இல்லை என்பதுதான்” என்கிறார் கணேசன் ஏழுமலை.

“தமிழ்நாட்டில் R&Dஇல் (Research and Development) தனியார் முதலீடுகள் ‘Negligible’ என்னும் அளவிலேயே உள்ளது. எனவே, R&D-க்கு அரசையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

ஜப்பான் கல்வி நிலையங்களில் Project Based Learning முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். பொறியியல் மாணவர்கள் கடைசி வருடம் முழுதும் அவர்கள் விரும்பும் துறையில் Research Project செய்யணும். இவர்கள் பொறியியல் சார்ந்த உற்பத்தித் துறையில் சிறந்து விளங்க Project Based Learning முறையே வெகுவாக கைக்கொடுக்கிறது.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் Project ஆறு மாதங்கள் என்றளவிலேயே உள்ளது. கலை அறிவியல் பிரிவுகளில் இதுவும் இல்லை” என்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கும் கணேசன் ஏழுமலை, “இயல்யியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட இளங்கலைப் பட்டப் படிப்புகளை நான்கு வருடங்களாக உயர்த்தி ஒரு வருடம் மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி ஆய்வுக் கட்டுரை எழுதவைத்து மதிப்பெண் வழங்கவேண்டும்.

இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கான Project period-ஐ ஒரு வருடமாக உயர்த்த வேண்டும்.

BA commerce, Commerce Economics, BCom, BBA மாணவர்களுக்கு Data Science, Data Analytics, Business Analytics பாடங்களை நான்காவது ஆண்டில் அறிமுகப்படுத்தி அறிவியல் மாணவர்களின் thesis போன்று Project சமர்பிக்க செய்யவேண்டும்” என்கிறார் கணேசன் ஏழுமலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...