No menu items!

விஜய்க்கு நோ சொன்ன ஸ்ரீலீலா

விஜய்க்கு நோ சொன்ன ஸ்ரீலீலா

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்திம் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக முதலில் த்ரிஷாவைக் கேட்டதாகவும், பின்னர் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஸ்ரீலீலாவை படக்குழு அணுகியதாகவும் செய்தி பரவியது.

இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு சில காட்சிகளுடன், கவர்ச்சி தளும்பும் ஒரு பாடலும் இருக்கிறதாம். இதனால் விஜயுடன் ஸ்ரீலீலா ஆடினால் நன்றாக இருக்குமென முடிவானதாம்.

ஸ்ரீலீலாவின் புயல் வேக, ரப்பர் உடல் நடனம் பாட்டுக்கு ப்ளஸ் ஆக இருப்பதோடு, பாடலை எளிதில் ஹிட்டாக்கி விடலாம் என்ற எண்ணத்தோடுதான் இந்த முடிவை வெங்கட் பிரபு எடுத்திருந்தாராம்.

இதன் தொடர்ச்சியாக ஸ்ரீலீலாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளும் வகையில் பேசியவர், இப்போது என்னால் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆட முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

தமிழ் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு அதன் மூலம் நுழைய விரும்பவில்லை என்று ஸ்ரீலீலா தரப்பில் கூறப்பட்டதாம்.

பாடலுக்கு மட்டும் ஆட 1 கோடி வரை கொடுக்கிறோம் என்று ஆசை காட்டியும் பார்த்திருக்கிறார்களாம். ஆனால் ஸ்ரீலீலா அசைந்து கொடுக்கவே இல்லையாம்.


’வேட்டையன்’ ரஜினி படம் இல்லை

பஞ்ச் டயலாக், அதிரடி சண்டைக் காட்சிகள், கொஞ்சம் காமெடி, மூன்று பாடல்கள், ஃப்ளாஷ் பேக் பின்னணி இப்படி ஒரு பக்கா கமர்ஷியல் படத்திற்கான எல்லா அம்சங்களும் ரஜினியின் படங்களில் இருக்கும்.
ஆனால் இப்படி எதுவும் அதிகமில்லாமல் ஒரு ரஜினி படம் இருந்தால் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு பதில் ஆக ‘வேட்டையன்’ படம் இருக்குமாம்.

ரஜினியா இப்படியொரு பட த்தில் நடித்திருக்கிறார் என்று விமர்சனத்தில் சொல்லுமளவிற்கு ஒரு படமாக பேசப்படுமாம். இந்தப் படத்தின் இடம்பெறும் ட்ராமா பகுதி சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் நீதி, காவல்துறை, தொழில் அதிபர்களின் ராஜ்ஜியம் பற்றிய அம்சங்கள் கதையில் அதிகம் இடம்பெற்று இருகின்றனவாம். மேலும் இவற்றை பற்றிய ஒரு ஆழமான ஆய்வுக்குப் பிறகே புள்ளிவிவரங்கள் மற்றும் பின்னணி நிகழ்வுகளை வைத்து திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதனால்தான் அமிதாப் பச்சன், பஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரும் நட்சத்திர பட்டாளம் தேவைப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

அக்டோபரில் வெளியாக இருக்கும் இப்படம் ரஜினியின் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை தொடர உதவும் என்று இயக்குநர் த.செ. ஞானவேல் உறுதியளித்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.


விடாமுயற்சிக்கு என்னாச்சு

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் மீண்டும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘குட் பேட் அக்லி’ பட ஷூட்டிங் வெகுவிரைவில் தொடங்க இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மார்ச் 15-ம் தேதி விடாமுயற்சியின் அடுத்த ஷெட்யூல் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் இன்று வரை ஷூட்டிங் தொடங்கவில்லை. இதனால் ‘விடாமுயற்சி’ படம் தொடருமா இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அஜித்திற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் ஷூட்டிங்கை உடனே தொடங்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனால் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் ஒரு காரணம் கிசுகிசுக்கப்படுகிறது.

அதாவது அஜித்திற்கு பேசிய சம்பளத்தை ஒவ்வொரு தவணையாக கொடுக்க லைகா ஒப்புக்கொண்டதாம். அப்படி கொடுக்க வேண்டிய சம்பளத்தை அடுத்த தவணையாக லைகா கொடுக்கவில்லை. இதனால்தான் ஷூட்டிங் தடைப்பட்டு நிற்கிறது என்று ஒரு பேச்சு அடிப்படுகிறது.

ஆனால் லைகா தரப்போ, அஜித் ஷீட்டிங்கிற்கு வர மறுக்கவில்லை. படப்பிடிப்பை நட த்த திட்டமிட்ட இடங்களில் இப்போது பருவநிலை மாற்றம் இருப்பதால், அது சரியாகும் வரை காத்திருக்கிறோம் அவ்வளவுதான் என்று கூறுகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...