No menu items!

ஐபிஎல் டைரி: விடைபெறுகிறார் தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் டைரி: விடைபெறுகிறார் தினேஷ் கார்த்திக்

இந்த ஐபிஎல் தொடருடன் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விடைபெற தமிழக வீர்ர் தினேஷ் கார்த்திக் முடிவெடுத்துள்ளார். அவர் தற்போது ஆடிவரும் ஆர்சிபி அணியின் வட்டாரங்கள் இதை தெரிவிக்கின்றன..

38 வயதான தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 2008-ம் ஆண்டுமுதல் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் ஆடியிருக்கும் தினேஷ் கார்த்திக், முதலாவது ஐபிஎல் தொடரில் அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடினார். இப்போது ஆர்சிபி அணிக்காக அவர் ஆடி வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலக அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, முழுநேர வர்ணனையாளராக மாற தினேஷ் கார்த்திக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதிரனாவுக்கு காயம் – சிக்கலில் சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்கள்கூட முழுதாக இல்லை. அதற்கு முன்பே 2 முன்னணி வீர்ர்கள் காயம் அடைந்திருப்பது சிஎஸ்கே அணியை கவலைப்பட வைத்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கடந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்தவருமான டெவன் கான்வே காயத்தால் 2 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்னரே வேகப்பந்து வீச்சாளரான பதிரனாவும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையைச் சேர்ந்த பதிரனா, கடந்த தொடரில் சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தவர். குறைந்தபட்சம் 2 வாரங்களுக்காவது அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என்றும், அதன் பிறகு அவரது காயத்தின் தன்மையைப் பொறுத்து அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவார் என்றும் இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

முதல் 2 வாரங்களுக்கு பதிரனாவால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என்றால், 22-ம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அவரை பயன்படுத்த முடியாது. அதனால் அவருக்கு மாற்றாக யாரை பயன்படுத்துவது என்ற குழப்பத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.

வந்தார் பந்த் – மகிழ்ச்சியில் டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியை தேசிய கிரிக்கெட் அகாடமி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் இருந்து குணமான ரிஷப் பந்த், இந்த ஆண்டு ஐபிஎல்லில் ஆட முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதே அந்த செய்தி. இதன்மூலம் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் மீண்டும் ரிஷப் பந்த் ஆட வருகிறார்.

இதை வரவேற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “கடந்த ஆண்டில் ரிஷப் பந்த் ஆடாததால் மிகப்பெரிய இழப்பை சந்தித்தோம். அவர் திரும்ப வருவது எங்களுக்கு புதிய தெம்பை அளிக்கிறது. ரிஷப் பந்த் மீண்டும் ஆடவரும் பட்சத்தில் அவரே அணியின் கேப்டனாக இருப்பார். அவரால் முடியாதபட்சத்தில் மட்டுமே புதிய கேப்டனை தேர்ந்தெடுப்போம்” என்று கூறியுள்ளார்.

டெல்லி அணி தங்கள் முதலாவது ஐபிஎல் போட்டியை மார்ச் 24-ம் தேதி ஆடுகிறது. அப்போட்டியில் பஞ்சாப் கிங்ச் அணியை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் ஆடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...