மாளவிகா மோகனன் எப்படியாவது முன்னணி ஹீரோயின் ஆகிவிட வேண்டுமென்பதில் ரொம்பவே தீவிரமாக இருக்கிறார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள்தான் கிடைக்கவில்லை. இதனால் விக்ரமுடன் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தைதான் அதிகம் நம்பியிருக்கிறார்.
பட ஷூட்டிங்கில்தான் இவர் பிஸியாக இல்லையே தவிர, சமூக ஊடகங்களில் இவர் எப்பவும் பிஸிதான். காரில் இருந்து இறங்குவதை கூட ஒரு ரீல்ஸ் ஆக போடுவார். இதெல்லாம் கூடவா ரீல்ஸ் என்று நினைத்தால், அடுத்து கார் கதவை மூடுவதையும் கூட ரீல்ஸ் ஆக போடுவார். அந்தளவிற்கு இவர் ரொம்ப பிஸி.
இதன் அடுத்தக்கட்டமாக காதலர் தினத்தில் இளசுகளுக்கு உதவட்டுமே என்று காதல் டிப்ஸ் கொடுத்திருக்கிறார் மாளவிகா மோகனன். காதல் சிறக்க இந்த மூன்று விஷயமும் முக்கியம் என்கிறார்.
காதல் பாடம் 1
ஒரு பெண், தன்னுடைய எதிர்காலத்தை, கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ முடிகிற ஆண் யாரென்று பார்த்து தேர்ந்தெடுக்கவேண்டும். இப்படியொரு காதலர் கணவராவது முக்கியம். ஒரு வெற்றிகரமான பெண்ணுக்கு பின்னால் இப்படியொரு உதவும் ஆண் மிக மிக அவசியம்.
காதல் பாடம் 2
காதல் உறவில், மனநிம்மதி ரொம்ப ரொம்ப முக்கியம். வெறித்தனமாக காதலித்தாலும், மெச்சூர்டாக காதலித்தாலும், காதலிக்கிற பெண்ணுக்கு மனநிம்மதி முக்கியம். அதனால் உங்கள் காதலில் அந்த மனநிம்மதி இல்லையென்றால், கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த காதலை முறித்துவிட்டு வெளியே வாருங்கள்.
காதல் பாடம் 3
காதலில், ஆண்கள் எக்கச்சக்கமாக சத்தியம் செய்வார்கள். நிறைய வாக்குறுதி கொடுப்பார்கள். அப்படி சொல்கிற விஷயங்களை உண்மையிலேயே பின்பற்றுகிற ஆண்தான் நம்பிக்கைக்குரியவர் என்பதில் நீங்கள் தெளிவாக இருங்கள். வார்த்தைகளை விட செயல்கள்தான் முக்கியம். வாய் வார்த்தைகளால் மயக்குபவரைவிட, சொன்னதை செயலில் காட்டும் ஆண்கள்தான் முக்கியம்.