விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா, தீவிர உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீர்ர்களில் ஒருவரும், முன்னாள் கேட்பனுமான விராட் கோலி ஆடவில்லை. கடைசி 3 போட்டிகளில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், இப்போது குடும்பத்துடன் இருக்கவேண்டி உள்ளதாலும் இந்த தொடரில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும். இந்த நேரத்தில் மனைவியுடன் இருப்பதற்காக அவர் இந்த தொடரில் ஆடவில்லை என்றும் முதலில் கருதப்பட்டது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீர்ரும் விராட் கோலியின் நண்பருமான ஏ பி டிவில்லியர்ஸ் தனது யூ டியூப் சேனலில் இந்த தகவலை தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த கருத்தை அவர் வாபஸ் பெற்றார். உறுதி செய்யப்படாத ஒரு தகவலை வெளியிட்டதற்காக கோலியிடமும் அவரது ரசிகர்களிடம் டிவில்லியர்ஸ் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அதே நேரத்தில் மனைவி கர்ப்பமாக இருக்கும் காரணத்துக்காக இந்தியாவுக்கு முக்கிய தொடராக கருதப்படும் இங்கிலாந்து தொடரில் கோலி ஆடாமல் இருக்கலாமா என்ற விமர்சனமும் எழுந்தது. தன் சிறிய வயதில் தந்தை இறந்த நிலையிலும், அடுத்த நாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஆடிவிட்டு பிறகு அவருக்கு இறுதிக் கடன்களை செய்தவர் விராட் கோலி. அப்படிப்பட்ட மன உறுதியும், கடமை உணர்வும் கொண்ட வீர்ர், மனைவி கர்ப்பமாக இருப்பதற்காக ஒரு தொடரில் இருந்து விலகி இருப்பதா என்பது விளையாட்டு விமர்சகர்களின் கேள்வியாக இருந்தது.
இந்த சூழலில் விராட் கோலி ஆடாமல் இருப்பதற்கான காரணம் பற்றி புதிய தகவல் ஒன்று சமீபமாக வெளியாகியுள்ளது. விராட் கோலியின் மனைவி ஒரு தீவிர உடல்நலப் பிரச்சினையில் சிக்கி இருக்கிறார். அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சினையின்போது மனைவியுடன் இருப்பதற்காகத்தான் கோலி இந்தியா – இங்கிலாந்து தொடரில் ஆடவில்லை என்பதே அந்த செய்தி. கோலியின் நிலை நன்றாக தெரிந்ததால்தான் கிரிக்கெட் வாரியமும் அவரை வற்புறுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.