No menu items!

கார்த்தியிடமிருந்து விலகிய பி.சி.ஸ்ரீராம்!

கார்த்தியிடமிருந்து விலகிய பி.சி.ஸ்ரீராம்!

கார்த்தி நடித்த ’ஜப்பான்’ வந்த வேகத்திலேயே வசூலை அள்ளாமால் மெளனமாகி விட்டது. அதேபோல் ’பருத்திவீரன்’ பட வெளியீட்டின் போது ஏற்பட்ட நிதிப்பிரச்சினை, அது தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டிகள் கோலிவுட்டில் கலவரத்தை உருவாக்கி இருக்கின்றன.

இந்நிலையில் கார்த்தி, ’96’ பட இயக்குநர் ப்ரேம் குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்ற இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் இதில் இப்போது ஒரு பெரிய மாற்றம். ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமான பி.சி. ஸ்ரீராம் என்னால் பணியாற்ற முடியாது என்று விலகிவிட்டாராம். இதனால் கடைசி நேரத்தில் ’96’ பட ஒளிப்பதிவாளரே இப்போது கார்த்தியின் 27-வது படத்தில் ஒளிப்பதிவு செய்கிறாராம்.

’பருத்திவீரன்’ பட பிரச்சினைதான் பி.சி.ஸ்ரீராம் விலகலுக்கு காரணமா அல்லது வேறு காரணமா என்று விசாரித்தால், பருத்துவீரன் பஞ்சாயத்திற்கும் பி.சி.ஸ்ரீராம் விலகலுக்கும் சம்பந்தம் இல்லை.

கார்த்தி 27 படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் 40 நாட்கள் வரை திட்டமிடப்பட்டுள்ளதாம். இதில் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பவைப் போல் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் இரவு முழுவதும் ஷூட்டிங் இருக்கும் என்பதால், அது ஓய்வில்லாமால் வேலைப் பார்க்கும் சூழலுக்குத் தள்ளிவிடலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதால்தான் பி.சி.ஸ்ரீராம் இப்படத்தில் இருந்து விலகியதாக தெரிய வந்திருக்கிறது.


நயன் பிறந்த நாளுக்கு 2.7 கோடி பரிசு!

நயன்தாராவுக்கு இப்போது 39 வயது.

ஒரு கதையைச் சொல்லி கால்ஷீட்டு கேடு போன விக்னேஷ் சிவன், பின்னர் அந்த ஹீரோயினை தனது வாழ்க்கையில் கூடவே இருக்கும் வகையில் ஒட்டுமொத்த குடும்ப கால்ஷீட்டையும் வாங்கியது வரலாறு.

எப்படியாவது மனம் கவர்ந்த பெண்ணை தன் பக்கம் ஈர்க்கவேண்டுமென ஆளாளுக்கு எப்படி எப்படியோ யோசிக்க, தனது கதையையும், பாட்டு வரிகளையும் வைத்தே நயன்தாராவை தன் பக்கம் செட்டிலாக வைத்த விக்னேஷ் சிவன், நயன்தாராவின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுத்திருப்பார்? இப்படியொரு கேள்விக்கு ஒரு காஸ்ட்லியான பதில் கிடைத்திருக்கிறது.

ஒரு புத்தம்புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்-க்ளாஸ் கார் ஒன்றை தன் காதல் மனைவிக்குப் பரிசாக கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இந்த சொகுசு காரின் விலை சுமார் 2.7 கோடிகள்.

இந்த மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் காரில் உட்கார்ந்து ஆக்ஸிலேட்டரை மிதித்தால், 4.5 விநாடியில் 100 கிமீ வேகத்தில் சீறிப்பாயும். காருக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் எக்ஸிக்யூட்டிவ் சீட்டுகள், செளகரியமாக உட்கார்ந்து கொண்டு போகவும், தூக்கம் வந்தால் நிம்மதியாக ஒரு குட்டித்தூக்கம் போடவும், நீண்ட தூரப் பயணத்திற்கு அலுப்பு தெரியாமல் பயணிக்கவும் பொருத்தமாக இருக்குமாம்.

விக்கியின் இந்த காஸ்ட்லியான பரிசைப் பார்த்த நயனுக்கு சந்தோஷத்தில் விக்கல் வந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...