பிக் பாஸ் தமிழ் 7-வது சீசன் தொடங்கி ஒரு வாரமான நிலையில், முதல் வாரத்தின் முதல் எவிக்ஷன் நேற்று நடைபெற்றது. இதில் பிக் பாஸ் ஆட்டம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பே முதல் விக்கெட்டாக பலியாகி இருக்கிறார் அனன்யா.
25 வயதான அனன்யா, பிக் பாஸ் வாய்ப்புக்காக பல வருடங்கள் காத்திருந்தவர். அப்படி பல வருடம் காத்திருந்து கிடைத்த வாய்ப்பை ஒரே வாரத்தில் இழந்திருக்கிறார் அனன்யா.
முதல் வாரம் விளையாட்டை புரிந்துகொள்வதற்குள் எதிர்பாராத முதல் வார எவிக்ஷன் நடந்து முடிந்தது . வந்த முதல் நாளே தலைவரை தேர்ந்தெடுத்து, பிக் பாஸ் தலைவரான விஜய் வர்மாவை ஈர்காத ஆறு நபர்களை தேர்ந்தெடுத்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
ஒ !! இதுதான் கேமா? இப்படிதான் ஸ்மால் ஹவுஸ்க்கு தேர்ந்தெடுத்து அனுப்புவார்களா? என்று அனைவரும் புரிந்து கொள்வதற்குள் 7 நாட்கள் கடந்துவிட்டன. இதற்கு நடுவில், ஸ்மால் ஹவுஸில் இருப்பவர்கள்தான் சமைக்க வேண்டும் என்ற ரூல், பிக் பாஸ் வீட்டிலிருப்பவர்களுக்கும் ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்களுக்கும் நடத்தப்படும் டாஸ்கில் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தோற்றுவிட்டால், பிக் பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் பாத்துரூம் கிளினிங்கையும் அவர்கள்தான் செய்யவேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்றுதான்.
பிக் பாஸ் ஹவுஸ்மெட்ஸ் யாரும் இவர்களுக்கு உதவவும் கூடாது, அப்படி உதவினால் அவர்களும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதுதான் ரூல். அதுமட்டும் இல்லாமல், ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் பிக் பாஸ் நடத்தும் எந்த டாஸ்கிலும் பங்குபெற முடியாது. இந்த விதிமுறைகளை புரிந்துக்கொள்வதற்குள், இந்த ஒரே வாரதில் ஏகப்பட்ட பஞ்சாயத்து வேறு !
ஜோவிகா, விசித்தரா கல்வி தொடர்பான வாக்குவாதம், பவா கதை சொல்ல ஆரமித்து, அது ஒரு பிரச்சனையாக மாறி அதுவும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இந்த வாரம் பேசுபொருளாக இதுதான் இருந்தது. சோசியல் மீடியா முழுவதும் இவர்கள் தான் பேசுபொருளாகவும் இருந்தார்கள்.
கவனம் முழுக்க இவர்கள் பக்கம் இருந்ததால், பெரிதாக வீட்டிலிருக்கும் இன்னும் பல நபர்கள் மீது கவனம் ஈர்க்கபடவில்லை.
இந்த நிலையில் பாவம் ! ஸ்மால் ஹவுஸில் இருந்த அனன்யா இந்த வாரம் பலி ஆகிவிட்டாள்.
15 நபர்களுக்கும் மேல் வீட்டில் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவே ஒரு வாரம் தேவைப்படும்.
அவர்களைப் புரிந்துகொண்டு விளையாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், முதல் வாரத்தில் அனன்யா எலிமினெட் ஆனது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இன்னும் அனன்யா விளையாட ஆரமிக்கவேயில்லை. அவள் மட்டும் இல்லை… வீட்டில் இருக்கும் இன்னும் நிறைய பேரின் முகங்கள் பார்வையாளர்களுக்கு பழக்கமாகவில்லை. அனன்யா நாமினேஷன் லிஸ்டில் இருந்ததால் நேற்றைய நாள் அவளுடையதாக இல்லை.
விளையாடிவிட்டு தோற்றுபோய் வெளியே போனால் கூட பரவாயில்லை, விளையாடினோம் என்ற திருப்தியாவது இருக்கும். விளையாட ஆராமிக்காமலே நீ தோற்றுவிட்டாய் என்று சொல்வது என்ன நியாயம் ?
முதல் வாரமே ஏவிக்சன் தேவையா! இல்லாமலே இருந்திருக்கலாம். இதுதான் பிக் பாஸ் பார்வையாளர்களின் பலரது எண்ணமாக இருக்கிறது.