எஸ்.பி.பி என்று செல்லமாய் அழைக்கப்படும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்து இன்றுடன் மூன்றாண்டுகள் ஆகின்றன. எத்தனையோ பாடகர்களை தமிழ்த் திரையுலகம் கண்டிருந்தாலும் எஸ்.பி.பி தனித்து நிற்பதற்கு முதன்மையான காரணம் அவரது குரல் மட்டுமல்ல, எல்லாவித பாடல்களையும் பாடக் கூடிய சகலகலா பாடகராக அவர் இருந்ததுதான். பாடல்களின் பன்முக கலைஞர் அவர்.
அவர் காதல் பாடல்களை பாடினால் நாம் காதலில் திளைத்தோம்
பனிவிழும் மலர்வனம்
ஜெர்மனியின் செந்தேன் மலரே
வளையோசை கலகலவென்று
அந்தி மழை பொழிகிறது
ஒ மானே மானே
வா வெண்ணிலா உன்னைதானே
செனொரீட்டா ஐ லவ் யு
என்று துள்ளலாகவும் காதல் செய்வார்.
அதே நேரம் உருகி உருகியும் காதல் செய்வார்
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
நிலவு தூங்கும் நேரம்
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும்
ஒரே நாள் உன்னை நான்
ராத்திரியில் பூத்திருக்கும்
சுந்தரி கண்ணால்
என்று காதலால் கசிந்து உருகுவார்.
காதல் தோல்விகளில் குரலை சோகத்தில் ஆழ்த்தி உள்ளங்களைத் தொடுவார். ஆறுதல்படுத்துவார்.
நான் பாடும் மௌன ராகம்
மலையோரம் வீசும் காற்று
வானுயர்ந்த சோலையிலே
மன்றம் வந்த தென்றலுக்கு
பாடி பறந்த கிளி
நாம் அதிக சோகத்துக்குள்ளாகிவிடக் கூடாது என்று உற்சாகப் பாடல்கள் பாடி நம் மனதை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்று விடுவார்
மடை திறந்து தாவும் நதியலை
தோளின் மேலே பாரம் இல்லே
வா வா பக்கம் வா
அப்பப்பா தித்திக்கும் உன் முத்தம்
மேகம் கொட்டட்டும்
பூப் போட்ட தாவணி
ஏய் ஏய் உன்னைத்தானே
ராக்கம்மா கையத் தட்டு
மேற்கத்திய பாணி உற்சாகம் போதாது என்று நம் மண்ணின் டப்பாங்குத்து உற்சாகத்தையும் எஸ்.பி.பி நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
மாமா உன் பொண்ணைக் கொடு
பொதுவார் பெண் பாடகிகளுடன் இணைந்து டூயட் பாடுவதுதான் தமிழ்த் திரையுலகின் வழக்கம். ஆனால் ஆண் பாடகர்களுடன் அவர் பாடிய டூயட் பாடல்களும் சூப்பர் ஹிட்டானவை
காட்டுக் குயிலு மனசுக்குள்ள (யேசுதாஸ்)
என்னம்மா கண்ணு (மலேசியா வாசுதேவன்)
வானம் என்ன கீழிருக்க (மலேசியா வாசுதேவன்)
எடுத்து நான் விடவா (இளையராஜா)
தென்மதுரை வைகை நதி (மலேசியா வாசுதேவன்)
தனது குரலை சட்டென்று மாற்றி மாற்றி பாடுவதிலும் பாலு வித்தகர்
இளமை இதோ இதோ
வாய்யா வாய்யா போய்யா போய்யா
ராத்திரி நேரத்து ராட்ச பேய் கதை (அஞ்சலி படம்)
இப்படிதான் எஸ்பிபி என்று அவரை யாரும் வரையறை செய்துவிட முடியாது. கர்நாடக சங்கீதம் அவர் முறையாக கற்றுக் கொள்ளாவிட்டாலும் அவரால் ஸ்வரங்களை சிறப்பாக பாட முடிந்தது.
வந்தாள் மகாலட்சுமி
வெள்ளி சலங்கைகள்
சங்கீத ஜாதி முல்லை
கர்நாடக இசை அடிப்படையில் அமைந்த பாடல்கள் மட்டுமில்லாமல் நாட்டுப்புற பாணியில் பாடிய பாடல்களும் அவரது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தின
மாங்குயிலே பூங்குயிலே
பச்சமலப் பூவு
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
சின்னக் கிளி வண்ணக் கிளி
ஆத்து மேட்டுல முத்தம் ஒண்ணு
காலங்கள் ஓடினாலும் மாறினாலும் அவர் குரலுக்காகவே தினம் தோறும் நாம் ரசித்துக் கொண்டே இருக்கும் பாடல்கள் ஏராளம்.
இளமை எனும் பூங்காற்று
பொன்மாலைப் பொழுது
பாடு நிலாவே தேன் கவிதை
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட
வெள்ளி நிலவே
என்னவென்று சொல்வதம்மா
இந்தப் பட்டியல் எஸ்.பி.பி.யின் பாடல்களுக்கு சில உதாரணங்கள்தாம்.