No menu items!

விடாமுயற்சி ட்ராப்??

விடாமுயற்சி ட்ராப்??

ரஜினியின் ‘ஜெயிலர்’ வசூல் 400 கோடி, 500 கோடி ஏகப்பட்ட அப்டேட்கள், அடுத்து ரஜினி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கியதால் மீண்டும் ரஜினியை சுற்றி ஏகப்பட்ட பரபரப்பு ஒரு பக்கம், விஜயின் ’லியோ’ இண்டர்வெல் ப்ளாக்கில் 8 நிமிஷம் செம ஆக்‌ஷன் என்று இன்னொரு பக்கம் என சோஷியல் மீடியாவில் கமெண்ட்களின் கலவரமாகி இருக்கிறது நிலவரம்.

விஜய்யை பஞ்சாயத்திற்குள் இழுத்துவிட்ட நெட்டிசன்கள் இப்போது அஜித்தையும் புது தலைவலிக்குள் இழுத்துவிட்டிருக்கிறார்கள்.

முதலில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த படத்தில் இருந்து அவரை கழற்றிவிட்டுவிட்டார்கள். மகிழ்திருமேனி அஜித்தை இயக்கப் போகிறார்கள் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஷூட்டிங் தொடங்கவில்லை.

இதற்கு காரணம் அஜித்திற்கு கதை பிடிக்கவில்லை. அதனால் தனது பைக் பயணத்தை தொடர கிளம்பிவிட்டார். இதனால் அஜித் நடிக்கவிருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை தயாரிக்க இருக்கும் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் ட்ராப் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டது என ஏகப்பட்ட கிசுகிசுக்கள்.

விடாமுயற்சி ட்ராப்பா? உண்மை நிலவரம் என்ன??

விடாமுயற்சி படம் ட்ராப் இல்லை. விடாமுயற்சி பெரும் பட்ஜெட்டில், பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் தயாராக இருக்கிறது. இது பக்காவான ஆக்‌ஷன் கதை. அதேபோல் பல காட்சிகளுக்கு இதுவரை பார்த்திராத லொகேஷன்கள் இருந்தால் நன்றாக இருக்குமென இயக்குநர் மகிழ்திருமேனி எதிர்பார்க்கிறார். இதனால் லொகேஷன்களை தேடி கண்டுப்பிடிப்பதற்கே அதிக நாட்கள் பிடித்துவிட்டது. மேலும் நட்சத்திர தேர்வுக்கும் அதிக காலம் தேவைப்படுகிறது. இதனால் விடாமுயற்சியை உடனடியாக தொடங்கமுடியவில்லை. இந்த பணிகள் எல்லாம் செப்டெம்பர் முதல் வாரத்திற்குள் முடிந்துவிடும். அதனால் செப்டெம்பர் இரண்டாவது வாரம் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கிவிடும்

இதனால் குழப்பத்தில் இருக்கும் அஜித் ரசிகர்கள், இனி கொண்டாட்டத்திற்கு தயாராகலாம்.


இந்திய சினிமாவில் ஆகஸ்ட் புரட்சி!!

இந்திய சினிமாவில் இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் ஒரு மறுமலர்ச்சி மாதமாகி இருக்கிறது. கோவிட்டின் தாக்கத்திற்கு பிறகு பாக்ஸ் ஆபீஸில் பெரும் தொகையை வசூலாக கல்லா கட்டியிருப்பது சினிமா வட்டாரத்தில் உற்சாகத்தை உருவாக்கி இருக்கிறது.

இந்திய சுதந்திர தின விடுமுறை நாட்களில் வெளியான 4 படங்களில் 3 படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தூள் கிளப்பிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் உற்சாகமான விஷயம்.

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படம் இதுவரையில் 550 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறுகிறார்கள். இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், முதல் வார வசூலுக்குப் பிறகு இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனாலும் ஜெயிலர் வசூல் நன்றாகவே இருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

ஹிந்தியில் சன்னி தியோல் நடித்திருக்கும் ’கடர் 2’, யாரும் எதிர்பார்க்காத வகையில் வசூலைக் குவித்து வருகிறது. நீண்ட நாட்களாக மீடியா வெளிச்சத்தில் இல்லாமல் இருந்த சன்னி தியோலுக்கு இப்படியொரு வரவேற்பா என்று பாலிவுட் ஆச்சர்யத்தில் இருக்கிறது. ’கடர் 2 ‘ சுமார் 480 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளிவந்திருக்கின்றன.

மறுபக்கம் அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் ’ஒ மை காட் 2’ படமும் வசூலில் சோடைப் போகவில்லை. 165 கோடி வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த ‘போலா ஷங்கர்’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பெரும் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சிரஞ்சீவிக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. இப்படம் 45 கோடி வசூல் செய்திருக்கிறது என்கிறார்கள்.

இந்த நான்குப் படங்களின் வசூலை கூட்டிப் பார்த்தால் சுமார் 1300 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என்கிறார்கள் சினிமா புள்ளிகள். இந்த படங்கள் வெளியாகி வெறும் 12 நாட்களில் இத்தனை கோடி வசூல் செய்திருப்பதுதான் இந்திய சினிமாவின் உற்சாகத்திற்கு காரணம்.

இந்தப்படங்களுக்கு பிறகு அடுத்த மாதம், விஜய், ஷாரூக்கான், விஜய் தேவரகொண்டா, லாரன்ஸ், பிரபாஸ் உள்பட இன்னும் பிரபல ஹீரோக்களின் படங்கள் வெளியாக இருக்கின்றன. இதனால் செப்டெம்பர் மாதம் வசூல் ஆகஸ்ட் வசூலை முறியக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட்டுக்கு பிறகு இந்திய சினிமா வசூலைப் பார்க்க ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல அறிகுறியாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...