இன்னும் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிவடையாத நிலையில், இப்படத்திற்கான வியாபாரம் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
தமிழ் மற்றும் மலையாள விநியோக உரிமை பெரும் விலைக்குப் போயிருக்கும் சூழலில், ’லியோ’ தனது வியாபாரத்தில் மற்றுமொரு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
லேட்டஸ்டாக லியோவின் வெளிநாட்டு உரிமை அசர வைக்கும் வகையில் 60 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. ஃபார்ஸ் ஃப்லிம் நிறுவனம் இந்தளவிற்கு பெரும் விலை கொடுத்து வெளிநாட்டு உரிமையை வாங்கி இருக்கிறது.
தமிழ்ப்படங்களிலேயே முதல் முறையாக இந்தளவிற்கு அதிக விலை போன படம் என்ற பெருமையை விஜயின் ‘லியோ’ பெற்றிருக்கிறது. அதேபோல் தென்னிந்தியப்படங்களில் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரமான மூன்றாவது படம் என்ற சாதனையையும் ’லியோ’ படைத்திருக்கிறது.
இதற்கு முன்பு வெளிநாட்டு உரிமை அதிக விலைக்கு வியாபாரமான முதல் இரண்டுப் படங்கள் பட்டியலில் பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்த ‘சலார்’ படமும், இயக்குநர் ராஜமெளலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர். படமும் இடம்பிடித்திருக்கின்றன.
’லியோ’ படம் வெளியாகும் போது, வெளிநாடுகளில் இந்தியப்படங்கள் இதுவரை இப்படி வெளியானது இல்லை என்று சொல்லுமளவிற்கு ‘லியோ’ படத்தின் ரிலீஸை திட்டமிட்டு வருகிறதாம் ஃபர்ஸ் ஃப்லிம்.