நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூறும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டுள்ளார். இதன்மூலம் தற்போதுள்ள 1 ரூபாய் ,2 ரூபாய், 5 ரூபாய், 10ரூபாய் ,20 ரூபாய் நாயணங்களின் வரிசையில் 75 ரூபாய் நாணயமும் இணைந்துள்ளது.
இந்த செய்தியைப் படித்ததும் நாளை முதல் மற்ற நாணயங்களைப் போல் இந்த 75 ரூபாய் நாணயத்தையும் இனி அடிக்கடி பார்க்கலாம் என்று தவறாக நினைத்துவிட வேண்டாம். தாமிரம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களைக் கலந்து தயாரிக்கப்படுவதால், ஒரு 75 ரூபாய் நாணயத்தை உற்பத்தி செய்ய 1,300 ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தனை எளிதில் இந்த 75 ரூபாய் நாணயம் நம் கைகளுக்கு கிடைக்காது.
இதையும் மீறி 75 ரூபாய் நாணயத்தை வாங்கவேண்டும், அதை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், Printing and Minting Corporation of India Limited (SPMCIL) இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதுகூட இப்போது விண்ணப்பிக்க முடியாது. போதுமான அளவில் நானயங்களை அச்சடித்த பிறகுதான், அதற்காக விண்ணப்பிக்க தேவையான படிவங்கள் அந்த இணையதளத்தில் பதிவேற்றப்படும். அவை பதிவேற்றப்பட்ட பிறகுதான் அந்த நாணயத்தைப் பெற நாம் விண்ணப்பிக்க முடியும்.
இப்படி கிடைப்பதற்கு அரிதான அந்த 75 ரூபாய் நாணயத்தைப் பற்றி மேலும் சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்…
புதிய 75 ரூபாயின் எடை 35 கிராம். விட்டம் 44 மில்லிமீட்டர். இந்த நாணயத்தைச் சுற்றி
50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் தாமிரம், 5 சதவீதம் நிக்கல் மற்றும் துத்தநாகத்தால் இந்த நாணயம் செய்யப்படுகிறது.
இந்த நாணயத்தின் ஒரு புறம் புதிய நாடாளுமன்ற கட்டிடமும்,மறுபுறம் அசோக சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.