No menu items!

CSK – Finals போகுமா? வாய்ப்புகள் என்ன?

CSK – Finals போகுமா? வாய்ப்புகள் என்ன?

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்தாலும் ஒவ்வொரு போட்டியையும் திகிலோடுத்தான் பார்க்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை மட்டுமே பார்த்துவந்த சிஎஸ்கே ரசிகர்கள் இப்போது மற்ற அணிகள் ஆடும் ஆட்டத்தைக்கூட கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கிறார்கள். ஆட்டம் முடிந்த பிறகு பாயிண்ட்ஸ் டேபிளில் சிஎஸ்கே இன்னும் 2-வது இடத்தில்தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் நிம்மதியாக தூங்கச் செல்கிறார்கள்.

சிஎஸ்கேவின் இந்த பதற்றத்துக்கு காரணம் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதுதான். இந்த போட்டியில் தோற்றதால் சனிக்கிழமை (மே 20) நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சிஎஸ்கே. அப்படி ஜெயித்தால் சிஎஸ்கேயின் புள்ளிகளின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துவிடும். யார் தயவும் இல்லாமல் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடலாம்.

ஆனால் கடைசியாக நடந்த 6 போட்டிகளில் சிஎஸ்கே அணி 2-ல் மட்டுமே வென்றிருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி அணி நிச்சயம் ஜெயிக்கும் என்று கண்மூடித்தனமாக நம்ப சிஎஸ்கே ரசிகர்கள் தயாராக இல்லை. இதனால்தான் டெல்லியிடம் தோற்றாலும் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல என்ன செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்டு வருகிறார்கள்.

இந்த கணக்கின்படி சென்னையின் இடத்தை உடனடியாக நெருங்கும் அணியாக மும்பை இந்தியன்ஸ் இருந்தது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் நேற்று மும்பை ஜெயித்திருந்தால் அந்த அணியின் புள்ளிகள் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்திருக்கும். இரண்டாவது இடத்தில் இருந்து சென்னையை தட்டிவிட்டு அவர்கள் சொகுசாக உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் ஸ்டோனிசின் புண்ணியதால் அது நடக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் தோற்றுப் போய் 14 புள்ளிகளிலேயே தங்கியது.

நேற்றைய போட்டியில் தோற்றாலும் சிஎஸ்கே அணிக்கு ஒரு நல்ல விஷயத்தை மும்பை இந்தியன்ஸ் செய்து கொடுத்துள்ளது. அந்த அணி கடைசி வரை போராடியதால் போட்டியில் ஜெயித்தாலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நெட் ரன் ரேட் ஏறவில்லை. இப்போது சிஎஸ்கேவும், லக்னோ அணியும் தலா 15 புள்ளிகளுடன் இருந்தாலும் சிஎஸ்கேவின் நெட் ரன் ரேட் (0.381) லக்னோ அணியின் (0.304) நெட் ரன் ரேட்டை விட அதிகமாக இருப்பதால் சிஎஸ்கே தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.

ஆனால் இந்த இடத்தை தக்கவைக்க சிஎஸ்கே நிறைய தண்ணி குடிக்க வேண்டும். அடுத்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மும்பை ஜெயிக்கக்கூடாதே என்று கடவுளை வேண்டவேண்டும். மீறி ஜெயித்தால் மும்பை இந்தியன்ஸ் 16 புள்ளிகளுடன் நம்மைக் கடந்து சென்றுவிடும். லக்னோ அடுத்த போட்டியில் ஜெயித்தாலும் இதே கதைதான். அவர்கள் 17 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பறந்துவிடுவார்கள். ஆக சிஎஸ்கே ரசிகர்களைப் பொறுத்தவரை அடுத்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தோற்க வேண்டும்.

மும்பை, லக்னோ அணிகளைப் போலவே ஆர்.சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக உள்ளன. இரு அணிகளும் இப்போது 12 போட்டிகளில் ஆடி 12 புள்ளிகளுடன் இருக்கின்றன. இந்த 2 அணிகளும் தாங்கள் ஆடவுள்ள 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் தோற்றால்தான் 14 புள்ளிகளில் நிற்கும். அப்படி நடந்தால் 15 புள்ளிகளுடன் இருக்கும் நாம் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கால் வைக்கலாம்.

இப்படி பல அணிகள் தோற்று சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றை நெருங்குவதைவிட, கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வென்று ப்ளே ஆஃப் சுற்றில் நுழைவதுதான் தோனிக்கும் அவரது சகாக்களுக்கும் பெருமை.

ரசிகர்கள் அதற்குதான் விசில் போடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...