விஜயுடன் சேர்ந்து கொடுத்த ‘பீஸ்ட்’ படத்தின் முடிவைப் பார்த்து, ரஜினி தனது அடுத்தப்படத்தை இயக்க நெல்சனுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார் என்று முணுமுணுப்பு கிளம்பியது.
ஆனால் ரஜினி தனது முடிவில் இருந்து கடைசிவரை பின்வாங்கவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனமும் ரஜினியின் முடிவுக்கு எதிராக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை.
இதனால் இப்போது ‘ஜெயிலர்’ படம் ஷூட்டிங் ஏறக்குறைய முழுவதும் முடிவடைந்துவிட்டது. இப்போது அப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜெயிலருக்கு பிறகு நெல்சன் யாருடன் இணைந்து படம் பண்ண போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
நடிப்பில் அசுரனான மாப்பிள்ளை பொதுவாகவே தனது முன்னாள் மாமனாரின் உடல் மொழியை, வசன உச்சரிப்பை அப்படி இப்படி உல்டா அடிப்பது வழக்கம். மாப்பிள்ளையின் படங்களைப் பார்த்தால் அந்த சமாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக புரியும்.
இப்போது விஷயம் என்னவென்றால், மாமனார் படத்தை இயக்கியிருக்கும் நெல்சனுடன் முன்னாள் மாப்பிள்ளை படம் பண்ண விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம்.
மாமனாரின் சக்ஸஸ் ரூட்டான காமெடியில் கமர்ஷியல் படம் என்ற பாதையில் தானும் நடிக்கவேண்டுமென மாப்பிள்ளை விரும்புகிறாராம்.
இதனால் நெல்சனுடன் தனுஷ் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இது தனுஷின் 50-வது படமாக அமையலாம் என்று தெரிகிறது.
வெறுத்துப் போன முன்னணி ஹீரோக்கள்!
இன்றைய நிலவரப்படி, பான் – இந்தியா ஹீரோக்கள் இமேஜை பெற்றிருக்கும் ஹீரோக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஹீரோக்கள்தான்.
பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், அல்லு அர்ஜூன், நானி, விஜய் தேவரக்கொண்டா என எல்லோரும் தெலுங்கு ஹீரோக்கள்தான்.
இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தாலும், இவர்களால் பக்கத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் தங்களது மார்க்கெட்டை விரிவுப்படுத்த முடியவில்லை. இங்கே மக்களிடம் சென்றடைய முடியவில்லை.
இப்பொழுது உள்ள ஹீரோக்கள் தங்களது படங்களை தமிழிலும் வெளியிட விரும்பி முயற்சி செய்து வருகிறார்கள். இப்பொழுது நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்கள். ஆனாலும் இப்படம் இங்கே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. படம் ஃப்ளாப்.
அதேபோல் சாய் தேஜ், தனது ‘விருபாக்ஷா’ திரைப்படத்தை தமிழில் வெளியிட்டார். இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அவரும், ஹீரோயின் சம்யுக்தாவும் வந்து இங்கு பேட்டிகள் கொடுத்தனர். ப்ரமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தினர். ஆனாலும் விருபாக்ஷா இங்கே எடுப்படவில்லை.
அதேபோல் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தசரா’ படமும் இங்கே கொண்டாடப்படவில்லை.
லிங்குசாமி இயக்கத்தில் ராம் போத்னேனி, கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வாரியர்’ படமும் இங்கே செல்லுப்படியாகவில்லை.
இந்தப் படங்களில் ஒரு படத்தை தவிர மற்றப்படங்கள் தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.