நடிகர் எஸ்.வி. சேகர் மகள் டாக்டர் அனுராதா சேகர் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி இது. அனுராதா சேகர் டைப் 2 சர்க்கரை நோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளவர். மேலும் புகைப்படக் கலைஞர், பாடகர், கதை சொல்லி, யூ டியூப்பர் என பன்முகம் கொண்டவர். இனி அனுராதா சேகர்…
உங்கள் தந்தை எஸ்.வி. சேகர் உங்களைப் பற்றி ஒரு பேட்டியில், “அவர் என் நினைவில் நிற்கிறாரோ இல்லையோ, அவரோட நினைவில் நான் நின்றாகணும்?’ என்று சொல்லியிருக்கிறார். உங்கள் தந்தை பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?
சின்ன வயசுல எங்கள் படிப்புக்கும் அப்பாவுக்கும் சம்பந்தமே கிடையாது; அம்மாதான் அதையெல்லாம் பார்த்துக்குவா. ஆனால், கையெழுத்து அப்பாட்டதான் வாங்குவோம். ஏன்னா, கொறைச்ச மார்க்னாலும் அப்பா ஒன்னும் சொல்லமாட்டா. அப்பாவைப் பொறுத்தவரைக்கும் படிப்பு இரண்டாம் பட்சம்தான்; ஒழுக்கம்தான் முக்கியம். படிப்பு சம்பந்தமா ஸ்கூலில் இருந்து எதாவது கம்ப்ளைண்ட் சொன்னாக்கூட, “அதையெல்லாம் நீங்கதான் பார்த்துக்கணும்; படிப்பை பொறுத்தவரைக்கும் ஓரளவுதான் நாங்க கண்காணிக்க முடியும். மற்றபடி டிசிப்ளினா இருக்காங்களான்னுதான் நாங்க பார்த்துக்க முடியும். அதில் எதாவது குறை இருந்தா மட்டும் எங்கிட்ட சொல்லுங்க” என்பா.
அதேநேரம் அப்பா அவ்வளவு ஸ்ரிக்ட்டும் கிடையாது. டிசிப்ளின் விஷயத்துல… அதுவும் ஒரு இடத்துக்கு போகும்போது டைம்முக்கு நாங்க ரெடியாகலைன்னா திட்டுவா. “நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்; மற்றபடி நீங்க பார்த்துங்க” அப்படின்னுதான் சொல்லுவா. ஜென்ரல் அட்வைஸ்தான் கொடுப்பா. எனக்கும் சரி, என் தம்பிக்கும் சரி ஃபுல் ஃபிரீடம் இருந்தது.
செலிபிரிட்டி கிட்ஸ் மாதிரி அப்பா எங்களை வளர்க்கலை. ஆரம்பத்துல இருந்து ஸ்கூலுக்கு போறதுக்கு சைக்கிள் அல்லது ஆட்டோதான். பக்கத்துல எங்காவது போகணும்னா நடந்துதான் போகணும். அப்பா டீ டோட்லர்னால பார்ட்டி போன்றும் போகமாட்டா. நாங்க போனதும் கிடையாது. அதனால மற்ற செலிபிரிட்டி கிட்ஸ்கூட பழகுற ஆப்பர்சூனிட்டியும் எங்களுக்கு இல்ல. வெளியூர்களில் அப்பா டிராமா போடுறச்ச நாங்க எல்லாரும் சேர்ந்து பஸ்ல போவோம்.
அந்த பேட்டியிலேயே “என் பெண்ணையும் சரி, பையனையும் சரி, நான் கைநீட்டி அடிச்சதே இல்லை. அட்வைஸ் சொல்லியே அறுத்துடுவேன்னு பயந்துக்கிட்டு அவங்களே நல்லா படிச்சிடுவாங்க” என்று சொல்லியுள்ளார். அவ்வளவு அட்வைஸ் சொல்வாரா?
ஆமாம், உண்மைதான். நாங்களே அத சொல்லுவோம். “ஏம்பா, யாராவது எதாவது ஜென்ரல்லா உங்ககிட்ட கேட்டாகூட ஒரு அட்வைஸ் கொடுக்கிறேளே, போரடிக்காதா. கொஞ்சம்… பரவால்ல… போதும்பா”ன்னு சொல்லுவோம். “ஒரு ஆப்பர்சூனிட்டி கிடைக்கிறச்ச சொல்றேன். கேட்றவா அத எடுத்துப்பா, இல்லைன்னா ஐ எம் நான் பாதர்ட்”ன்னு அப்பா சொல்வா.
அப்பா இப்போ எப்படியிருக்கார்?
எப்பவும் இருக்கிற மாதிரிதான் இப்பவும் இருக்கா. சில பேருக்கு வொர்க் பண்ணாதீங்கன்னு சொன்னாதான் அவாளுக்கு கை ஒடைஞ்ச மாதிரி இருக்கும். அப்பாக்கும் அப்படித்தான்.
அப்பா உங்களுக்கு நிறைய அட்வைஸ் சொல்லியிருப்பார். நீங்க இப்போ அப்பாவுக்கு சொல்ல விரும்புகிற அட்வைஸ் என்ன?
பாலிடிக்ஸ்தான்… ஏன்னா, அது என்ன ராசின்னு தெரியல, அப்பா எதுவும் தப்பா சொல்லாட்ட கூட எங்க வீட்டுல வந்து கல்லெறிவாங்க; நாங்க அதுக்குதான் கட்டி வைச்ச மாதிரி. அதனாலே ரீசண்ட் டைம்ல அப்பா அதிகமா பேசுறதும் கிடையாது. அப்பாவுடைய யூ டியூப் சேனல்லகூட அதிகமாக மகா பெரியவா, ஸ்பிரிச்சுவல் தான் அப்பா அதிகம் பேசுறா. அதையும் கூட கொறைச்சுருங்கோ, பாலிடிக்ஸ் வேண்டவே வேண்டாம் நம்மளுக்குன்னுதான் நாங்க சொல்லுவோம். ஆனால், அப்பா என்ன செய்ய விரும்புகிறாளோ அதைத்தான் செய்வா.
தப்பு பண்றவாட்ட, “நீ தப்பு பண்றே”ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி அப்பா சொல்லிடுவா. அதை யார் விரும்புவா. இங்க எம்.எல்.ஏ.வா இருக்கறச்ச கூட யார்ட்டயும் ஒன்னுமே காசு வாங்கல. அவ்வளவு நேர்மையா இருக்கிறவாளுக்கு பாலிடிக்ஸ்ல சர்வைவ் பண்றது கஷ்டம். மக்கள் அப்படிப்பட்டவர்களை விரும்புறதில்ல. அதான் அப்பாவுக்கு பாலிடிக்ஸ் வேண்டாம்னு சொல்றோம். முடிவு அப்பா சாய்ஸ்தான்.
தொடரும்