ஒரு இந்தியப் படம், ‘பெஸ்ட் ஒரிஜினல் சாங்’ எனப்படும் சிறந்த அசல் பாடல் பிரிவுல் ஆஸ்கர் விருதை வென்றிருப்பது இதுவே முதல் முறை.
‘ஆர்,ஆர்,ஆர்,’ படத்தின்’ நாட்டு நாட்டு’ இப்போது க்ளோபல் ஹிட்.
இந்த நாட்டு நாட்டு பற்றி அறியாத டாப் – எட்டு சமாச்சாரங்கள் இதோ.
- நான்கரை நிமிடம் ஓடக்கூடிய இந்தப் பாடலை எழுதிய சந்திரபோஸ், 90% பாடலை அரை நாளில் எழுதி முடித்துவிட்டார். ஆனால் மீதி 10% பாடல் வரிகளை எழுதி முடிக்க 19 மாதங்கள் பிடித்திருக்கிறது.
- இப்பொழுது ஆஸ்கர் விருதை அடித்து தூக்கியிருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடலின் ட்ராக்கை இதுதான் ஃபைனல் என முடிவு செய்ய 19 மாதங்கள் ஆகியிருக்கிறது.
- இசையமைப்பாளர் கீரவாணி, இந்தப் பாடலுக்காக ஏறக்குறைய 20 ட்யூன்களை தயார் செய்திருந்தார், இந்த இருபதில் இருந்து எதை எடுப்பது எதை விடுப்பது என்ற உருவான குழப்பத்தை தீர்க்க, ஒட்டெடுப்பை நடத்தியிருக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர் படக்குழுவில் அதிகம் பேர் வாக்களித்த ட்யூன்தான் இப்போது ஆஸ்கரை வென்றிருக்கிறது.
- நடன இயக்குநர் ப்ரேம் ரக்ஷித், ராம் சரண், ஜூனியர் என்,டி,ஆர். ஆடும் அசத்தல் மூவ்மெண்ட்களுக்காக மொத்தம் 110 ஹூக் ஸ்டெப் மூவ்மெண்ட்களை கம்போஸ் செய்திருந்தார். ராஜமெளலி தேர்ந்தெடுத்த டான்ஸ் மூவ்மெண்ட்தான் இப்போது வைரலாகி இருக்கிறது.
- ’நாட்டு நாட்டு’ பாடலில் எல்லோரும் ஆடும் போது பின்னணியில் தெரிவது பிரம்மாண்டமான செட் அல்ல. உக்ரைன் நாட்டில் கிவ் நகரில் இருக்கும் ஒரு உண்மையான மாளிகை. அதன் பெயர் மரின்ஸ்கி பாலஸ். உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வமான மாளிகை இது.
- ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் ஆடும் ஹூக் ஸ்டெப்பை 18 முறை ஷூட் செய்திருக்கிறார் ராஜமெளலி. ஆனால் கடைசியில் இரண்டாவதாக எடுத்த டேக்கைதான் ஓகே செய்திருக்கிறார் ராஜமெளலி.
- ’நாட்டு நாட்டு’ பாடலை ராகுல் சிப்லிகுஞ்ச், கால பைரவா இருவரும் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் கோல்டன் க்ளோப் விருது, கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது, ஹெச்.சி.ஏ விருது, ஹட்சன் ஃப்லிம் க்ரிட்டிக்ஸ் சொசைட்டி விருது என பல முக்கிய விருதுகளை ஏற்கனவே வென்றிருக்கிறது.
’லேடி வில்லன்’ ஆன ’லேடி சூப்பர் ஸ்டார்’!
நயன்தாராவின் நிழலை விட சர்ச்சைகள்தான் அவரை அதிகம் பின் தொடர்கின்றன.
காதல் சர்ச்சைகள், தன்னுடையப் படங்களின் விளம்பரங்களுக்கு வராமல் எஸ்கேப் ஆகும் சர்ச்சைகள், வாடைகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தைகள் பெற்றதில் உண்டான சர்ச்சைகள் என சர்ச்சைகள் ஏராளம்.
இப்போது லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது நயன்தாரா பற்றி மம்தா மோகன்தாஸ் அடித்திருக்கும் ஒரு கமெண்ட்.
சமீபத்தில் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் பேட்டி ஒன்றில், ‘ரஜினிகாந்த நடித்த ‘குசேலன்’ படத்தின் [தெலுங்கில் கதாநாயகுடு] பாடல் காட்சியில் நான் நடித்த சில காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. அந்தப் படத்தின் ஹீரோயின் நயன்தாரா. அவர் படத்தயாரிப்பாளரிடம், நான் நடிக்கும் போது, இன்னொரு ஹீரோயின் எதற்கு? என்று கேட்டிருக்கிறார். இதனால் நான் நடித்த காட்சிகளை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டார்கள்’ என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
நயன்தாரா கேட்டுக்கொண்டதால்தான் ‘கதாநாயகுடு’ படக்குழு என் காட்சிகளை நீக்கிவிட்டார்கள் என்று லேடி சூப்பர் ஸ்டார் எப்படி லேடி வில்லன் ஆன பின்னணியை மம்தா மோகன்தாஸ் போட்டு உடைத்ததற்கு நயன்தாரா தரப்பில் இருந்தது எந்தவித பதிலும் இதுவரை வரவில்லை.
ஹாரிஸ் ஜெயராஜை மாட்டிவிட்ட மசராட்டி!
சினிமாவில் புகை, மது போன்ற வகையறா பழக்கவழக்கங்களில் சம்பாதித்ததை அதிகம் செலவிடாத வெகுசிலரில் ஹாரிஸ் ஜெயராஜூம் அடக்கம்.
ஆனால் தான் சம்பாதிக்கும் பணத்தை காஸ்ட்லியான இண்டர்நேஷனல் ப்ராண்டட் வாட்ச், ஆடம்பர சொகுசு கார்கள் மாதிரியான லைஃப் ஸ்டைல் சமாச்சாரங்களில் செலவிடுவது ஹாரிஸ் ஜெயராஜின் பழக்கம்.
இந்த பழக்கம்தான் இப்போது அவரை 11 லட்சத்து 50 ஆயிரத்து 923 ரூபாய்க்கு நுழைவு வரி செலுத்த வேண்டிய பஞ்சாயத்தில் இழுத்து விட்டிருக்கிறது.
2010-ம் ஆண்டில் ஹாரிஸ் ஜெயராஜ் கார் ப்ரியர்களின் கனவுக்கார்களில் ஒன்றான மசராட்டி கிரான்டூரிஸ்மோ [Maserati Gran Turismo]-வை சென்னையில் ரவுண்ட் அடிக்க இறக்குமதி செய்திருந்தார்.
வெளிநாட்டு ஆடம்பர சொகுசு கார் என்பதால் அதை சென்னையில் ஓட்ட, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார் ஹாரிஸ் ஜெயராஜ். ஆனால் இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என்று அந்த மசராட்டியை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்துவிட்டது.
இதனால் ரொம்பவே ஹாரிஸ் ஜெயராஜ் அப்செப். ஆனாலும் பிரச்சினை இன்னும் முடிந்தப்பாடில்லை.
2019-ல் 13 லட்சத்து 7 ஆயிரத்து 932 ரூபாய் நுழைவு வரி செலுத்தவேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நுழைவு வரியோடு அபராதமும் செலுத்த வேண்டுமென உத்தரவு போட்டது.
தமிழ்நாடு அரசோ நுழைவு வரியோடு அபாரதத்தையும் சேர்த்து செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசுக்கு தடைவிதிக்க வேண்டி ஹாரிஸ் ஜெயராஜ், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
2012 ஜூலையில் விற்கப்பட்ட எனது மசராட்டி காருக்கான நுழைவு வரியாக 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாயை ஏற்கனவே செலுத்திவிட்டேன். ஆனாலும் அபாரதத்துடன் செலுத்தவேண்டுமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது விதிகளுக்கு முரணானது என்று ஹாரிஸ் ஜெயராஜின் தரப்பில் சொல்லபட்டு இருக்கிறதாம்.
இந்த மனு வெகுசீக்கிரமே விசாரணைக்கான பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.