பொங்கலுக்கு விஜய் – அஜித் என தமிழ் சினிமாவின் இருபெரும் கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் வெளியாகின. பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘வாரிசு’, ‘துணிவு’ என இவர்களது படங்கள் வெளியானதால், பாக்ஸ் ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தி யார் என்று கடும் போட்டி நிலவியது.
இந்த கலெக்ஷன் கலவரம் தணிவதற்குள்ளாகவே, எதையும் கண்டுகொள்ளாமல் தனது அடுத்தப்படமான ‘லியோ’ ஷூட்டிங்கில் மும்முரமாகி விட்டார் விஜய்.
தொடர் ஹிட்களை கொடுத்த லோகேஷ் கனகராஜூவுடன் விஜய் மீண்டும் இணைவதால் எதிர்பார்பு. எகிறியிருக்கிறது. . அடுத்து த்ரிஷா, சஞ்சய் தத். மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதாக ப்ரமோஷனில் இறங்கி அடித்தது லியோ படக்குழு.
இப்போது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டத. அஜித் 62 படத்தை குறித்து செய்திகள் வரத் தொடங்கிவிட்டன.
அஜித்ம் 62 படத்தை இயக்கப் போவது மகிழ்திருமேனி என்பது முடிவாகிவிட்டது.
ஆனால் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?’அஜித் ரசிகர்கள் ஆர்வம் காட்டும் அஜித் 62’ ப்ராஜெக்ட்டின் பின்னணியில் நடந்தது என்ன?
’துணிவு’ படத்தின் ஷூட்டிங் நடைபெறும் போதே அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.
ஆனால் ’துணிவு’ படத்தின் பெரும் வெற்றியும், பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனும், அஜித்தையும், இப்படத்தை தயாரிக்க இருக்கும் லைகா நிறுவனத்தையும் ரொம்பவே யோசிக்க வைத்து விட்டதாம்.
இதுவரையில் அஜித் நடித்த படங்களிலேயே மிக அதிக வசூலை ’துணிவு’ பெற்றிருப்பதால், இப்பொழுது அவரது ’அஜித்62’ பற்றிய எதிர்பார்பு சினிமா பிஸினெஸ் வட்டாரத்தில் அதிகமாகி இருக்கிறது.
மேலும் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி பக்கா ஆக்ஷன் படமாக எடுப்பதில் குறியாக இருப்பதால், அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹை- ஆக்டேன் ஆக்ஷன் படமாக எடுத்தால்தான் பாக்ஸ் ஆபீஸ் தாக்குப்பிடிக்க முடியுமென லைகா தரப்பிலிருந்து அஜித்திடம் சொல்லப்பட்டதாம்.
அஜித்திற்கு இதே எண்ணம் இருந்ததால் உடனடியாக ஓகே சொன்னதோடு, ’யார் டைரக்டர் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ’என்று ,லைகா சுபாஷ்கரனிடம் அஜித் கூறியிருக்கிறார்.
விக்னேஷ் சிவன் லைகாவிடம் சொன்ன இரண்டு கதைகளில் ஒன்று உணர்வுப்பூர்வமான காதல் கதை. மற்றொன்று ஆக்ஷன் கதை. இதனால் விக்னேஷ் சிவன் சொன்ன அந்த காதல் கதைக்கு இப்போது வாய்ப்பில்லை என்று லைகா தரப்பில் ரெட் சிக்னல் கொடுக்கப்பட்டது. இரண்டாவது கதையின் க்ளைமாக்ஸ் மிகப்பெரியது. அதை டீடெய்லிங் செய்யவும், ஷூட் செய்யவும் அதிக நாட்கள் பிடிக்கும் என்பதால், அதை தள்ளி வைத்துவிட்டார்கள். இதுதான் விக்னேஷ் சிவன் விஷயத்தில் நடந்தது.
அப்படியானால் டைரக்டர் யார் என்ற கேள்வி எழ, மகிழ் திருமேனியை டிக் செய்தது சுபாஷ்கரன்தான் என்கிறார்கள். டைக்ரடர் யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று அஜித் முழு சுதந்திரம் கொடுத்ததால், மகிழ் திருமேனிக்கு ஒரு கோடி அட்வான்ஸூம் கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.
அட்வான்ஸை வாங்கிய வேகத்தில் ஸ்கிரிப்ட்டில் அஜித்தின் இமேஜூக்கு தேவையான ஆக்ஷன் சமாச்சாரங்களை மளமளவென சேர்த்து, ஷூட்டிங்கிற்கு தயாராகி விட்டார் மகிழ் திருமேனி.
மியூசிக் அனிருத், சினிமட்டோக்ராஃபர் நீரவ் ஷா என இந்த இரு டெக்னீஷியன்களும் அஜித்62 டீமில் சேர்ந்துவிட்டார்கள்.
இப்படத்தில் நடிக்கவிருக்கும் ஆர்டிஸ்ட்கள் செலக்ஷன் மிக தீவிரமாக நடந்து வருகிறது.
‘துணிவு’ படத்தின் ஹிந்தி டப்பிங் ஒடிடி-யில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்த பிஸினெஸ் வாய்ப்பை அஜித்62-க்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என லைகா தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இப்பொழுது வில்லனாக நவாஸூதின் சித்திக் மாதிரியான பாலிவுட் நட்சத்திரத்தை நடிக்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். அதேநேரம் அர்விந்த் சுவாமியையும் வில்லனாக நடிக்க வைக்கும் யோசனையும் இருக்கிறதாம்.
ஹீரோயினும் பாலிவுட்தான் என்று கூறப்படுகிறது. அஜித்தின் ஹீரோயினாக காத்ரீனா கைஃப் அல்லது திபீகா படுகோன் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஐஸ்வர்யா ராயையும் இப்படத்திற்காக அணுகியிருப்பதாகவும் செய்திகள் அடிப்படுகிறது. கால்ஷீட் பிரச்சினை இல்லாவிட்டால் இந்த இருவரில் ஒருவர் நிச்சயம் என்கிறார்கள்.
‘அஜித் 62’-ல் அதர்வா, அருண் விஜய் நடிக்கிறார்கள் என்பது ஆச்சர்யம். தனி ஹீரோக்களாக நடிக்கும் இவர்கள் அஜித்துக்காக இந்தப் படத்தில் இணைகிறார்கள். இருவரும் லைகா உடனும், மகிழ் திருமேனியுடனும் ஏற்கனவே படம் பண்ணியிருப்பதால், இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இத்தனை செய்திகள் பரவிக் கொண்டிருந்தாலும் ஆனால் லைகா தரப்பில் இந்தப் படம் பற்றி எந்த தகவலும் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
ஆர்டிஸ்ட் செலக்ஷன் முடிந்ததும், மார்ச் முதல் வாரத்தில், அஜித்62 பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, ஷூட்டிங் கிளம்ப லைகா தரப்பில் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
ஆயுத பூஜை அல்லது தீபாவளிக்கு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி உறுதியாகிவிட்டதால், அஜித் நடிக்கும் படத்தையும் அதே நாட்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
மகிழ்திருமேனி இயக்கும் அஜித் 62-க்குப் பிறகு அஜித் 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அஜித் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.