No menu items!

மிஸ் ரகசியா – ரஜினி கொடுத்த 101 தங்கக் காசு

மிஸ் ரகசியா – ரஜினி கொடுத்த 101 தங்கக் காசு

“மகாராஷ்டிராவுல சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை ஷிண்டேவுக்கு ஒதுக்கினதுல எடப்பாடி அணி ரொம்பவே சந்தோஷமா இருக்காம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

 “ஷிண்டே பிரிவுக்கு சிவசேனாவோட சின்னம் கிடைச்சதுக்கும், எடப்பாடி அணி சந்தோஷப்படறதுக்கும் என்ன சம்பந்தம்?”

 “சிவசேனா விவகாரத்துல கட்சி தங்களோடதுன்னு உத்தவ் தாக்கரே பிரிவும், ஷிண்டே பிரிவும் தேர்தல் கமிஷன்ல வாதம் செஞ்சிருக்காங்க. இதுல ஷிண்டே அணிகிட்டத்தான்  சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகமா இருக்காங்க. இந்த காரணத்தால அவங்களுக்குதான் சிவசேனா கட்சி சொந்தம்னு தேர்தல் கமிஷன் சொல்லி இருக்கு. அந்த வகையில பார்த்தா இப்ப எடப்பாடி பழனிசாமி பிரிவுலதான் அதிகமா சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்காங்க. அதனால அந்த அளவுகோலை பயன்படுத்தி நமக்கு சாதகமா தேர்தல் கமிஷன் தீர்ப்பு வரும்னும் கட்சியும் சின்னமும் தங்களுக்குதான் கிடைக்கும்னு எடப்பாடி அணி சந்தோஷமா இருக்காங்க. ஆனா ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதுக்கு வேற கணக்கு சொல்றாங்க. மகாராஷ்டிராவுல பாஜக சொல்றதைக் கேட்டு ஷிண்டே செயல்படறாரு. அதனால அவங்களுக்கு ஆதரவா தேர்தல் கமிஷன் தீர்ப்பு வழங்கி இருக்கு. ஆனா இங்க ஓபிஎஸ்தான் பாஜகவுக்கு அனுசரணையா இருக்கு. அதனால நமக்கு ஆதரவாத்தான் தீர்ப்பு வரும்னு ஓபிஎஸ் தரப்பு சொல்லிட்டு இருக்காங்க.”

 “ஈரோடு தேர்தல் நிலவரம் எப்படி இருக்கு?”

“ஈரோடு பிரச்சாரத்துல ஆம்பிளையான்னு  கேட்டு எடப்பாடி பேசினது  முதல்வரை உசுப்பி விட்டிருக்கு. இதனால கோபமான முதல்வர், இந்த இடைத் தேர்தல்ல அதிமுக உட்பட எந்த கட்சியும் டெபாசிட் வாங்கக் கூடாதுன்னு மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்காராம்.   ஈரோடு கிழக்கில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் இருக்கு. அந்த பூத் முகவர்களை தொடர்புகொண்டு பேசின முதல்வர், நடுநிலையாளர்களோட வாக்குகளை வாங்க கவனமா பிரச்சாரம் செய்யுங்கன்னு சொல்லி இருக்கார். முதல்வரே   பூத் முகவர்கிட்ட பேசினது  ஈரோடு கிழக்கு தொகுதியில பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு. அதேநேரத்துல தங்கள்கிட்ட முதல்வரே பேசினாருங்கிறதால பூத் நிர்வாகிகளும் உற்சாகமா வேலைபார்க்கத் தொடங்கி இருக்காங்க.”

 “இப்பவே இப்படின்னா 24-ம் தேதி முதல்வர் நேரடியா பிரச்சாரம் செய்ய வந்தா அவங்க இன்னும் உற்சாகமாயிடுவாங்களே?”

 “இந்த தேர்தல்ல 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிப்போம்னு முதல்வர்கிட்ட அமைச்சர்கள் சொல்லி இருக்காங்க. ஆனால் உளவுத்துறை அதிகாரிங்க 25 ஆயிரத்துல இருந்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல திமுக ஜெயிக்கும்னு சொல்லி இருக்காங்க. தன்னோட பிரச்சாரத்துக்கு முன்னால இதுபத்தி அமைச்சர்கள்கிட்ட முதல்வர் பேசுவார்னு சொல்றாங்க. இந்த சந்திப்புக்கு பிறகு தங்களுக்கு இன்னும் கவனிப்பு கூடும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க.”

 “அதிமுகவுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்ய ஒரு வழியா அண்ணாமலை வந்துட்டாரே?”

 “ஆனால் அண்ணாமலை பிரச்சாரத்தை அதிமுகவினர் ரசிக்கலனு சொல்றாங்க”

“நீ இப்படி சொல்ற…ஆனா முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன்லாம் அண்ணாமலை கூட போயிருக்காங்களே?”

“பாஜக தரப்புலருந்து அதிமுககிட்ட பேசியிருக்காங்க. கூட்டணினு காட்டணும் இல்லாட்டி நல்லாருக்காதுனு கேட்டுக்கிட்டதானால வேலுமணி, செங்கோட்டையன்லாம் போனாங்களாம். எடப்பாடி பழனிசாமிக்கு அத்தனை விருப்பம் இல்லையாம்”

”ஒபிஎஸ் குரூப் என்ன பண்ணிக்கிட்டு இருக்கு?”

“எடப்பாடி அணி டெபாசிட் வாங்கக் கூடாதுனு திமுக கூட்டணி நினைக்கிற மாதிரியே ஓபிஎஸ் குரூப்பும் நினைக்குது. பணத்தை செலவழிச்சாவது எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை தோக்கடிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க”

”சபாஷ்…சரியான போட்டி, சரி, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர் பதவி கொடுத்ததுக்கு காங்கிரஸ் கட்சிக்காரங்க புலம்பறதா ஒரு செய்தி வந்துச்சே?”

 “காங்கிரஸ் கட்சி மத்தியில ஆட்சியில இருந்தப்ப நமக்கு கட்சி மேலிடம் இப்படியெல்லாம் செய்யலியேங்கிற வருத்தம் அவங்களுக்கு. காங்கிரஸ் கட்சி ஆட்சியில இருந்தப்ப  குமரி அனந்தன் உள்பட பலர் ஆளுநர் பதவி கேட்டு சோனியா,  ராகுல் காந்திகிட்ட போயிருக்காங்க. ஆனா  எதுவும் நடக்கலை. இப்ப  பாரதிய ஜனதா தமிழ்நாட்ல இருந்து 3 பேரை கவர்னரா நியமிச்சு இருக்கு. இதனாலதான் அந்த கட்சி வளருதுன்னு காங்கிரஸ் தலைவர்கள் புலம்பறாங்களாம்.”

”இப்ப புலம்பி என்ன பயன்?  பாஜகவுலயும் புலம்பல் சத்தம் இருக்குனு சொல்றாங்களே?”

“கரெக்டா சொல்றீங்க. அங்க எச்.ராஜாவுக்கு அந்த வருத்தம் இருக்குது. இத்தனை வருடங்கள் கட்சில இருக்கிறேன். ஆனா இதுவரை எந்தப் பதவியும் எனக்கு வந்ததில்லனு ரொம்ப வேண்டியவங்ககிட்ட புலம்புனதா தகவல் இருக்கு. அவரை சமாதானபடுத்தியிருக்காங்க. அடுத்த வருஷம் நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிட்டு மத்திய அமைச்சராயிடலாம்னு சொல்லியிருக்காங்களாம்”  

”பாவம்தான் அவரு..”

“ரஜினி பத்தி ஒரு நியூஸ் சொல்றேன் கேட்டுக்குங்க”

“அவருக்கும் அமைச்சர் பதவி தேடி வருதா?”

“அவர் அதையெல்லாம் கடந்தவர். சமீபத்துல அவருடைய அண்ணன் சத்யநாராயணனுக்கு எண்பதாவது பிறந்த நாள் விழா நடந்திருக்கு.  கூடவே அவர் மகனுக்கு 60வது பிறந்த நாள். இந்த ஃபங்க்‌ஷன்ல ரஜினி கலந்துக்கிட்டாரு. கூட லதாவும் ஐஸ்வர்யாவும் போயிருக்காங்க”

“ரஜினி அண்ணன் வீட்டு பக்கம் நடக்கிற விசேஷங்களுக்கு லதா வர மாட்டாங்களே..”

“அதெல்லாம் அந்தக் காலம். இப்ப எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வராங்களாம். இந்த முறை கூடவே ஐஸ்வர்யாவும் வந்திருக்காங்க”

“ஆச்சர்யமா இருக்கு”

“விஷயம் அதுவல்ல. தன்னோட அண்ணனுக்கு 4 கிராம் மதிப்பிலான 101 தங்கக் காசுகளை ரஜினி கொடுத்திருக்கிறாரு. 80வது பிறந்த நாள் விழாவுல தலையில் தண்ணீர் தெளிக்கிற சடங்கு ஒன்று இருக்கிறது. அப்போது சல்லடையில் ரஜினி இந்தக் காசுகளை போட்டாராம்”

“என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவானு ரஜினி அப்பவே படையப்பாவுல பாடியிருக்கிறார். அது மாதிரி கொடுத்திருக்கிறாரு அண்ணனுக்கு”

சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...