No menu items!

பதான் பராக் பராக்

பதான் பராக் பராக்

2018-ல் வெளியான ‘Zero’ படத்திற்குப் பிறகு தனது மவுசு ஸூரோ ஆகிவிட்டதா என கடந்த நான்காண்டுகளாக மனக்குமுறலில் இருந்தார் ஷாரூக்கான்.

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகு சரியான, தரமான படங்கள் இல்லாததால், பான் – இந்திய படங்களாக வெளியான தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு ஹிந்தி சினிமாவில் பெரும் வரவேற்பு. இதனால் என்ன செய்வது என்று குழப்பத்தில் துவண்டுப் போயிருந்தது பாலிவுட்.

தொடர்ந்து டக் அவுட் ஆகிப்போய் ஃபார்ம்மை இழந்த பேட்ஸ்மேன், ஒரே மேட்ச்சில் அதிரடியாக 200 ரன் அடித்து, அந்த ஆட்டம் தோல்வியின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அணியை மீட்டெடுக்குமானால் அதை கிரிக்கெட் ரசிகர்கள் எப்படி ஆரவாரமாக கொண்டாடுவார்களோ அதைப் போலவே இருக்கிறது பாலிவுட் ரசிகர்களின் கொண்டாட்டம்.

ஒரேயொரு படம்தான். இன்று பாலிவுட் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸின் விதியை மாற்றியிருக்கிறது.

அந்தப் படத்தின் பெயர் ‘பதான்’

படம் வெளியான 4 நாட்களிலேயே The King is back and how! என்று ஷாரூக்கானை சிம்மாசனத்தில் உட்கார வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது ஹிந்தி சினிமா உலகமான பாலிவுட்.

‘சென்னை எக்ஸ்ப்ரஸ்’ படத்திற்குப் பிறகு ஷாரூக்கானுக்கு ஒரு ஹிட் கூட இல்லை. அடுத்து மகன் ஆர்யன் பிரச்சினை. போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்று ஆர்யனை உலுக்கி எடுத்துவிட்டார்கள். இதிலிருந்து ஷாரூக்கானால் வெளியே வர முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் ஷாரூக்கானுக்கு முதலில் தேவையாய் இருந்தது ‘பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா’ நான் தான் என்று சொல்லிக் கொள்ள ஒரு ப்ளாக் பஸ்டர்.

வழக்கமாக ஷாரூக்கானின் படங்களில் எமோஷன் அதிகமிருக்கும். கூடவே கொஞ்சம் ஆக்‌ஷன் இருக்கும். ஆனால் இந்த முறை ஆக்‌ஷனை அதிகரித்து விட்டு எமோஷனுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காத ஸ்கிரிப்ட்டில் தயாரான ‘பதான்’ படத்தில் கமிட்டானார். . இந்த முறை அவர் அதிகம் நம்பியது இயக்குநர் சித்தார்த் ஆனந்தை. ஸ்பை த்ரில்லர் வகையறா படம் எடுப்பதில் கில்லாடி என ஏற்கனவே ஹிர்த்திக் ரோஷன் நடித்த ’வார்’ படத்தை தனது ஷோ ரீல்லாக காட்டியிருந்தார் சித்தார்த் ஆனந்த்.

‘Ek Tha Tiger’ (2012), ‘Tiger Zinda Hai’ (2017), அடுத்து ‘War’ (2019) என அடுத்தடுத்து ஸ்பை த்ரில்லர் படங்களை எடுத்த யாஷ் ராஜ் ஃப்லிம்ஸ் இந்த முறையும் சித்தார்த் ஆனந்த் ப்ளஸ் ஸ்ரீதர் ராகவன் கூட்டணியில் ’பதான்’ படத்தில் இறங்கியது.

பட வேலைகள் முடிந்து, ரிலீஸூக்கு தயாரான நேரத்தில்தான் ‘பதான்’ படக்குழு ‘பேஸ்ஷரம்’ பாடலை இணையத்தில் வெளியிட்டது.

இந்தப் பாடல் வெளியான இரண்டே நாட்களில் புது சர்ச்சை கிளம்பியது. தீபிகா படுகோன் காவி நிற நீச்சல் உடையில் ஆட்டம் போட்டது, சில கோணங்களில் ஆபாசமாக இருக்கிறது, இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. அந்த காட்சிகளை நீக்காவிட்டால், மத்திய பிரதேசத்தில் இப்படம் வெளியாவது குறித்து முடிவு செய்யப்படும் என அம்மாநில அமைச்சர் கர்ஜித்தார்.

இதனால் ‘பதான்’ படத்திற்கு பாலிவுட்டின் லேட்டஸ்ட் சைபர் சவாலாக இருக்கும் #Boycott ஹேஷ்டேக் பிரச்சினை எழுந்தது.

இந்த #Boycott ஹேஷ்டேக் அமீர்கான் நடித்த ‘லால் சத்தா’ படத்தை நன்றாகவே பதம்பார்த்துவிட்டதால். யாஷ் ராஜ் ஃப்லிம்ஸ், ஷாரூக்கான், தீபிகா படுகோன் என அனைவரும் அப்செட்.

கொஞ்சம் பயத்துடனேயே ’பதான்’ படத்தை வெளியிட்டார்கள்.

உலகம் முழுவதிலும் 7500-க்கும் அதிகமான ஸ்கிரீன்களில், விடுமுறை அல்லாத புதன் கிழமையில் ’பதான்’ வெளியானது.

படம் வெளியான முதல் காட்சியிலேயே ’பதான்’ பட்டையக் கிளப்பியது.
வசூலில் புதிய அத்தியாயத்தைப் படைத்திருக்கிறது.

பதான் பட த்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ்

இந்திய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் நிலவரம்

நாள் வசூல்

முதல் நாள் இந்திய வசூல் 57 கோடி
முதல் நாள் ஒட்டுமொத்த வசூல் 127 கோடி



நாட்கள் வாரியாக பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்


நாள் தேதி வசூல்

நாள் 1 25-ஜனவரி 2023 (Wed) ₹57 கோடி

நாள் 2 26-ஜனவரி 2023 (Thu) ₹70 கோடி



சினிமா தியேட்டர்கள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்

திரையங்கு பெயர் வசூல்

PVR 26.35 கோடி
INOX 21.58 கோடி
Cinepolis 11.55 கோடி


உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் நிலவரம்

நாள் வசூல் [அமெரிக்க டாலர்கள்]

முதல் நாள் 4.50 மில்லியன்

ஒட்டுமொத்த ஒவர்சீஸ் வசூல் 6.50 மில்லியன்



உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்


பாக்ஸ் ஆபீஸ் வசூல்

இந்திய பாக்ஸ் ஆபீஸ் நெட் 127 கோடி
இந்திய பாக்ஸ் ஆபீஸ் க்ராஸ் 151.19 கோடி
ஒவர்சீஸ் க்ராஸ் 52.92 கோடி
உலகளாவிய வசூல் க்ராஸ் 204.11 கோடி


’பதான்’ வெளியான முதல் நாளில் வசூலித்திருக்கும் வசூலானது பல ரிக்கார்ட்களை
உடைத்திருக்கிறது.

படம் வெளியான முதல் நாளில் அதிக வசூலைக் குவித்திருக்கும் ஹிந்திப்படங்கள்

பதான் – 55 கோடி
கேஜிஎஃப் 2 – 53.95 கோடி
வார் – 51.60 கோடி
தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் – 50.75 கோடி


கேஜிஎஃப்2 ஹிந்தி டப்பிங் வசூலித்ததை பதான் ஒவர்டேக் செய்திருக்கிறது. அதேபோல் யாஷ் ராஜ் ப்லிம்ஸ் தயாரித்த ஸ்பை த்ரில்லரான ‘வார்’ படத்தின் வசூலையும் மிஞ்சியிருக்கிறது.

இப்படி வசூலில் கெத்து காட்டியிருக்கும் ஷாரூக்கான், சித்தார்த் ஆனந்த் கூட்டணி பதான் மூலம் 10 புதிய ரிக்கார்ட்களையும் உருவாக்கி இருக்கிறது.

அந்த சாதனைப் பட்டியல்

  1. இந்தியாவில் இதுவரையில் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியான திரைப்படம்.
  2. ஹிந்திப் படங்களிலேயே வெளியான முதல் நாள் அதிக வசூலை அள்ளிக்குவித்த படம்.
  3. விடுமுறை அல்லாத நாளில் வெளியான படங்களிலேயே மிக அதிக ஒட்டுமொத்த வசூலைக் குவித்திருக்கும் ஹிந்திப்படம்.
  4. யாஷ் ராஜ் ப்லிம் தயாரித்த படங்களிலேயே முதல் நாளில் 50 கோடிக்கும் அதிக வசூலித்தப் படங்களில் மூன்றாவது படம்.
  5. யாஷ் ராஜ் ஃப்லிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் சினிமாவில் ஏக் தா டைகர், வார் ஆகிய இரு ஸ்பை த்ரில்லர்களுக்கு பிறகு அவற்றை ஒவர்டேக் செய்திருக்கும் படம்.
  6. ஷாரூக்கான் படங்களிலேயே முதல் நாள் ஒட்டுமொத்தமாக வசூலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது பதான்.
  7. தீபிகா படுகோன் நடித்த படங்களிலேயே முதல் நாள் ஒட்டுமொத்தமாக வசூலில் அதிக வசூலைப் பெற்றிருக்கும் படம்..
  8. ஜான் ஆப்ரஹாம் நடித்திருக்கும் படங்களிலேயே முதல் நாள் ஒட்டுமொத்தமாக வசூலில் அதிகம் பெற்றிருக்கும் படம்.
  9. யாஷ் ராஜ் ஃப்லிம்ஸ் தயாரித்திருக்கும் படங்களில் அதிகளவில் ஒட்டுமொத்த வசூலைப் பெற்றிருக்கும் படம் பதான்..
    • சித்தார்த் ஆனந்த் டைரக்‌ஷனில் வெளிவந்திருக்கும் படங்களில் முதல் நாள் ஒட்டுமொத்த வசூலில் அதிக வசூலைக் குவித்திருக்கும் படம்.

      • இப்படி ரிக்கார்ட்களை படைத்து கொண்டிருக்கும் இப்படம் வெளியான மூன்று நாட்களில் 162.50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. வார இறுதி நாட்கள் வசூல் இன்னும் வராத நிலையில், ஹிந்தி சினிமா மார்க்கெட்டில் இதுவரை எந்தப்படமும் பண்ணாத வசூலை பதான் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சனி, ஞாயிறு கிழமைகளில் 80 கோடி வரை வசூல் ஆகலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் இந்த வார இறுதியில் பதானின் வசூல் 240 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள். இதனால் மிக அதிக ஒட்டுமொத்த வசூலை அள்ளிய ஹிந்திப்படம் என்ற பெருமையை ஷாரூக்கானின் பதான் தட்டிச் செல்ல வாய்ப்புகள் மிக அதிகம்.

    ’பதான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா ஷாரூக்கான் வந்திருக்கிறார் பராக் பராக் என்று உரக்கச் சொல்லியிருக்கிறது.

    இதையெல்லாம் தாண்டி, ஐநாக்ஸ் லீய்ஷ்ஷர் லிமிடெட் வெளியிட்டு இருக்கும் ட்வீட் செம ஹைலைட்.

    ’ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஐநாக்ஸ் திரையரங்குகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹவுஸ்ஃபுல் திரையரங்குகளைப் பார்த்திருக்கிறது.’ என்ற ட்வீட் ‘பதான்’ படத்தின் மவுசைக் காட்டுகிறது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Wow அப்டேட்ஸ்

    spot_img

    வாவ் ஹிட்ஸ்

    - Advertisement - spot_img

    You might also like...