No menu items!

வாரிசு Vs துணிவு – பரபரக்கும் பின்னணி அரசியல்

வாரிசு Vs துணிவு – பரபரக்கும் பின்னணி அரசியல்

தமிழ் சினிமாவில் இப்போது ஏகப்பட்ட புகைச்சல்.

ஏறக்குறைய 8 வருடங்களுக்குப் பிறகு அஜித் – விஜய் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகி இருப்பதால்தான் இந்த புகைச்சல்.

இரண்டுப் படங்களும் ஒரே நாளில் வெளியானால் யார் அதிகம் கல்லா கட்டுவது என்பதில் இரு தயாரிப்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி.

முதலில் ’வாரிசு’ 12-ம் தேதி வெளியாகும் என்றுதான் பேச்சு அடிப்பட்டது. அதேநாளில்தான் தெலுங்கிலும் ‘வாரிசு’ ரிலீஸாகும் என தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது.

இதைப் பார்த்து ’துணிவு’ படத்தயாரிப்பாளர் போனி கபூர், எங்கள் படம் ஒரு நாள் முன்னதாக 11-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்.

ஒரு நாள் முன்பாக ரிலீஸாவதால் என்ன லாபம்/?

’வாரிசுக்கு’ முன்னாடி ’துணிவு’ வெளியானால், எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க படையெடுப்பார்கள். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக கண்டிப்பாக வருவார்கள். இதனால் முதல் நாள் கலெக்‌ஷன் பெரும் அளவில் இருக்கும். அதை கைப்பற்றதான் ஒரு நாள் முன்னதாக வெளியிட போனிகபூர் திட்டமிட்டார்.

ஆனால் போனி கபூரின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட 7 ஸ்கீரின்ஸ் லலித் வாரிசும் 11-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்க பரபரப்பு தொற்றிக் கொண்டது.

’வாரிசு’ படம் ரிலீஸ் தேதியை லலித் முடிவு செய்திருப்பதாக கூறினாலும், இதன் பின்னணியில் இருப்பது விஜய்தான் என்கிறார்கள்.

துணிவு வெளியாகி படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் வாரிசு மீதான விமர்சனங்கள் கலவையாக இருக்க வாய்ப்புகள் உருவாகும். அடுத்து முதல் ஒரு நாள் கலெக்‌ஷன் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த கலெக்‌ஷனில் இருப்படங்களுக்கிடையே பெரும் வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காட்டுவார்கள். இது பிஸினெஸ் சம்பந்தப்பட்டதாக இருந்தாலூம், இதன் பின்னணியில் இரு ஹீரோக்களுக்கும் இடையே இருக்கும் மார்க்கெட் வேல்யூவில் யார் பெரியவர் என்ற கேள்வி எழும்.

அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி இருந்தால்தான், அவர்களது ரசிகர்கள், மார்கெட், பிஸினெஸ் எல்லாமே போட்டித்தன்மையுடன் இருக்கும்.

இதையெல்லாம் மனதில் வைத்தே விஜயின் கண்ணசவில் லலித் வாரிசு ரிலீஸ் தேதியை திட்டமிட்டதற்கு முன்கூட்டியே வைத்திருக்கிறார் என்கிறார்கள்.


சமந்தா ரிட்டர்ன்ஸ்!

மையோசிடிஸ் என்னும் ஆட்டோஇம்யூன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா, அப்பிரச்சினையில் இருந்து மீள எதிர்பார்த்த காலத்தைவிட அதிக காலம் பிடிக்கும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் அவர் நடித்திருக்கும் ‘ஷாகுந்தலம்’ என்ற தெலுங்குப் படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் ப்ரமோஷனுக்கு சமந்தா வரமாட்டார் என்று நம்பப்பட்ட நிலையில், எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் சமந்தா.

’நாம் நடக்கும் போது, பேசும் போது, ஓடும் போது, அழும் போது கூட உங்களுக்கு இருக்கும் மவுசு, குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கவனமாக நம்முடைய அந்த வசீகரத்தை கைவிட்டு விடக்கூடாது. ஆனால் இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. இதனாலேயே ஷாகுந்தலம் படத்தில் நடிக்கும் போது அந்த கதாப்பாத்திரத்தை சரியாக வெளிக்கொண்டு வரவேண்டுமென்பதற்காக டான்ஸ் மாஸ்டரிடம் பயிற்சி எடுத்தேன். எப்படி நடப்பது, சிரிப்பது முதல் கொண்டு எல்லாவற்றையும் பயிற்சி எடுத்தேன்.’’ என்று சொல்லும் சமந்தா, ஒரு சிக்கென்ற உடையில் ஷாகுந்தலா மாதிரி போஸ் கொடுத்து ரீஎண்ட்ரி ஆகியிருக்கிறார்.

இந்த போஸ் கொடுத்த அடுத்த நாட்களிலேயே மும்பைக்கு பறந்திருக்கிறார். அதாவது 5 மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக வெளி வந்திருக்கிறார்.

மும்பை ஏர்போர்ட்டில் இவரை அடையாளம் கண்டுகொண்ட பாப்பராசிகள் புகைப்படங்களாக எடுத்து தள்ளிவிட்டனர். செம ஸ்டைலாக இருக்கும் சமந்தாவைப் பார்த்ததும், சமந்தா பேக் டு ஃபார்ம் என்று கமெண்ட் அடித்திருக்கிறார்கள் புகைப்படக் கலைஞர்கள்.

‘தான் கமிட்டான ஹிந்திப் பட தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் சந்தித்து பேசவே மும்பைக்குச் சென்றிருக்கிறார். கொடுத்த கால்ஷீட் தேதிகள் மாறியிருப்பதால், எப்படி சமாளிப்பது என்பது குறித்து பேசவே இந்த மும்பை சந்திப்பு என்கிறார்கள்.


சம்பளத்தைக் குறைக்க மறுக்கும் மக்கள் செல்வன்

அடுத்தடுத்து ஃப்ளாப் கொடுத்தாலும் அசராமல் இருக்கிறார் மக்கள் செல்வன்.

சமீபத்தில் அவர் நடித்த ‘டிஎஸ்பி’ படமும் வந்த வேகம் தெரியாமல் திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டது.

முன்பெல்லாம் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதாலேயே தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட விஜய் சேதுபதி சமீபகாலமாக சம்பளத்தை மட்டுமே குறிவைத்து படங்களை ஒப்புக்கொள்கிறார் என்று கமெண்ட்கள் அதிகம் அடிப்பட ஆரம்பித்திருக்கின்றன.

இதற்கு உதாரணமாக அவர் ஹீரோவாக நடித்தப் படங்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார்கள்.

இப்பொழுதும் அவரை கால்ஷீட் கேட்டு அணுகினால் கதை என்ன என்று கேட்பதை விட, சம்பளம் எவ்வளவு என்றுதான் முதலில் கேட்கிறாராம். போன வருஷம் அதிக ஹிட் கொடுத்தது நான் என்று அவர் வில்லனாக நடித்தப் படங்களை எடுத்துவிடுகிறாராம். இந்த படங்களின் பெயரைச் சொல்லிவிட்டு சம்பளம் இவ்வளவு என்று பெரும் தொகையைக் கேட்கிறாராம். 25 கோடி கேட்பதாகவும் ஒரு கிசுகிசு அடிப்படுகிறது.

படம் எதுவும் ஓடாமலே இப்படி அதிக சம்பளம் கேட்பது நியாயமா? என்று முணுமுணுப்போடு இடத்தைக் காலிசெய்துவருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...