No menu items!

தம்பதிகளின் வயது வித்தியாசம் Sex Lifeஐ பாதிக்குமா?

தம்பதிகளின் வயது வித்தியாசம் Sex Lifeஐ பாதிக்குமா?

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் பப்லு – ஷீத்தல் திருமணங்களைத் தொடர்ந்து ‘ஏஜ் கேப் ரிலேசன்ஷிப்’ சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆனது. 24 வயதாகும் ஷீத்தலை திருமணம் செய்துகொண்டதைக் குறித்து, 54 வயதாகும் பப்லு, “காதலுக்கு வயதில்லை” என்றதுடன், “தினம் எனக்கு பெண் சுகம் தேவைப்படுகிறது” என்கிறார். ஆனால், இருவருக்கும் இடையே 30 வருடங்கள் வயது வித்தியாசம் உள்ளது. இது சரியா? மகிழ்ச்சியான செக்ஸ் லைஃபுக்கு ஆண் – பெண் இடையே எவ்வளவு வயது வித்தியாசம் இருக்கலாம்?

விளக்கமளிக்கிறார் பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் நாராயணரெட்டி…

“நம்முடையது ஆணாதிக்க சமுதாயம். கணவனை விட மனைவி வயது குறைவாக இருந்தால்தான், கணவன் பேச்சை கேட்பாள் என்று மனைவி வயது குறைவாக இருக்கும்படி வைத்துள்ளார்கள். ஆனால், இதற்காக இருவர் இடையே மிக அதிக வயது வித்தியாசம் இருப்பது தலைமுறை இடைவெளியாக மாறி குடும்ப வாழ்வை பாதிக்கலாம். மேலும், செக்ஸ் வாழ்க்கையையும் இது பாதிக்கும். எனவே, இருவர் இடையே 5 வருடங்களுக்கு மேல் வித்தியாசம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஆனால், பப்லு – ஷீத்தல் போல் கணவனும் மனைவியும் நல்ல புரிதலுடன் இருந்தால் பிரச்சினை இல்லை.

சரி, ஆணும் பெண்ணும் எத்தனை வயதுக்குள் திருமணம் செய்துகொள்வது நல்லது?

ஆணுக்கும் பெண்ணுக்கும் DHA (Mother Of All Hormones) 25 வயதில்தான் உச்சத்தில் இருக்கும். அதன்பின்னர் இறங்கத் தொடங்கும். இதனால் செக்ஸில் ஈடுபடும் செயல்திறனும் குறையும். பெண்களுக்கு மெனோபாஸ் நின்ற பின்னர் சில பிரச்சினைகள் வரும்; குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பும் குறையும். இதுபோல் ஆண்களுக்கும் வயதாக வயதாக விந்தணு எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். எனவே, தாமதமான திருமணங்கள் குழந்தை பிறப்புக்கான வாய்ப்புகளை குறைக்கும். இன்று கருத்தரிப்பு மருத்துவமனைகள் அதிகரிக்க தாமதமான திருமணங்களும் ஒரு காரணம். எனவே, பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி 25 வயதுக்குள் திருமணம் நடந்துவிடுவது நல்லது.

திருமணமாகும் புதிதில் கணவன் – மனைவி இருவருக்குமே செக்ஸில் அதிக நாட்டம் இருக்கும். 5 – 10 வருடங்கள் கடக்கும்போது இந்த நாட்டம் குறையத் தொடங்கும். குறிப்பாக குழந்தைகள் வளர்ப்பு, அவர்கள் படிப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் நம் கவனத்தையும் நேரங்களையும் ஆக்கிரமித்துவிடும். குறிப்பாக குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள், பெண் குழந்தை வயதுக்கு வந்துவிட்டது என்றால் நமக்கு வயதாகிவிட்டது, செக்ஸுக்கு நாம் தூரமாக இருக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு, நமது உடலுக்குத்தான் வயதாகியுள்ளது; மனதுக்கு வயதாகவில்லை. மனதுக்கு வயதும் கிடையாது.

வயதாகிவிட்டது என நினைத்து செக்ஸை கட்டுப்படுத்துவது வேறு விளைவுகளுக்கு காரணமாகிவிடும். குழந்தைகளை வயதானவர்கள் பாலியல்ரீதியாக தொந்தரவு செய்வதற்கு பின்னால், கட்டுப்படுத்த செக்ஸ் முக்கிய காரணமாக இருக்கிறது” என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.

தொடர்ச்சியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...