No menu items!

Wow Weekend: Ottயில் என்ன பார்க்கலாம்?

Wow Weekend: Ottயில் என்ன பார்க்கலாம்?

Goodbye (இந்தி) – நெட்பிளிக்ஸ்

மகன்களும் மகளும் பல்வேறு ஊர்களில் வேலைபார்க்க வீட்டில் தனியாக இருக்கிறார்கள் அமிதாப் பச்சனும் அவரது மனைவியும். ஒரு நாள் எதிர்பாராத விதமாக மனைவி இறந்துபோக, வீட்டில் அவரது உடலை வைத்துக்கொண்டு மகன்களுக்காகவும், மகளுக்காகவும் காத்திருக்கிறார் அமிதாப் பச்சன். இறுதிச் சடங்குக்காக ஊருக்கு வரும் அவரது மகன்களுக்கும், மகளுக்கும் இறுதிச் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. இதனால் அவர்களிடையே சில முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பின்னால் பல்வேறு சம்பவங்களால் அந்த முரண்பாடுகள் மரைந்து ஒற்றுமை ஏற்படுகிறது அனைவரும் இணைந்து இறந்துபோனவருக்கு குட்பை சொல்கிறார்கள்.

செண்டிமெண்டான இந்த கதையை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள். அதேநேரத்தில் ஒருசில இடங்களில் அழவைக்கவும் செய்கிறார்கள். குறிப்பாக மனைவியின் அஸ்தியை கரைக்கும்போது மனைவி இல்லாமல் எப்படி வாழப் போகிறேன் என்று அமிதாப் பச்சன் புலம்பும் காட்சி கண்களில் நீரை வரவழைக்கும். ஃபீல் குட் வகை கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.

ஜெய ஜெய ஜெய ஹே (மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்

பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக பொங்கி எழுந்து வாக்கையில் வெற்றி பெறும் ஒரு பெண்ணின் கதைதான் ‘ஜெய ஜெய ஜெய ஹே’. கொஞ்சம் பிசகினாலும் சீரியசான புரட்சிக் கதையாக மாறக்கூடிய படத்தை, ஒரு சிறந்த காமெடி படமாக எடுத்திருக்கிறார்கள். கோபம் வரும்போதெல்லாம் தன்னை அடிக்கும் கணவனை ஒரு மனைவி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

தியேட்டர்களில் பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம் இப்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இப்படத்தை தமிழிலும் பார்க்கலாம்.

ரத்த சாட்சி (தமிழ்) -ஆஹா

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் நக்சல்பாரி இளைஞர் அப்பு. ஒருகட்டத்தில் போலீஸார் அவரை தீவிரமாக தேட, தன்னால் தொழிலாலர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக சரணடைய முடிவெடுக்கிறார். போலீஸார் அவரை என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

தமிழகத்தில் நக்சல் இயக்கம் தோன்றி அழிந்த காலத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

The Elephant Whisperers (தமிழ்) – நெட்பிளிக்ஸ்

இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு செல்ல தகுதி பெற்றுள்ள The Elephant Whisperers டாக்குமெண்டரி திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்போது வெளியாகி உள்ளது.

தெப்பக்காடு வனப்பகுதியில் தாயை இழந்த இளம் யானைக்குட்டிக்கு ஆதரவாக இருந்து அதை வளர்த்துவரும் பொம்மன், பெல்லி ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த டாக்குமெண்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. 41 நிமிடங்கள் ஓடும் இந்த டாக்குமெண்டரி படம் யானைகளைப் பற்றி மட்டுமின்றி மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் படம்பிடித்து காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...