நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்தித்தார். அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்தித்தார். சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்காக நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
இந்திய – சீன ராணுவத்தினர் மோதல்: மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்
அருணாச்சல பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள இந்திய – சீன எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் விளக்கமளித்தார்.
”டிசம்பர் 9 2022 அன்று, தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதியில் உண்மையான எல்லைக் கோட்டை (Line of Actual Control) தன்னிச்சையாக மீறி, அங்கிருந்த நிலையை மாற்ற சீன ராணுவத்தினர் முயன்றனர். நமது ராணுவத்தினர் சீனாவின் இந்த முயற்சியை உறுதியுடன் எதிர்த்தனர். இந்திய ராணுவம், மக்கள் விடுதலை ராணுவத்துடன் (சீன ராணுவத்தை) சண்டையிட்டு அவர்களை வெளியேற்றியது. எல்லையில் அமைதியைக் கடைபிடிக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் வெளியுறவு அதிகாரிகள் மட்டத்திலும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை; தீவிரமான காயங்களும் யாருக்கும் ஏற்படவில்லை” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஓடிடி ஆப் உருவாக்க திட்டம்
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிறுவனத்தின் எதிர்கால செயல்திட்டம் குறித்து கேட்டறிந்து, வணிக திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தினார். மேலும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்குவது குறித்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV வழங்கக் கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை அடுத்த ஆறு மாத காலங்களில் வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மேலும் அதிக சந்தாதாரர்களைச் சேர்த்து, ஒரு முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்படவும் ஆலோசனை வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிரவு முதல்… மனைவியுடன் இருந்த அந்தரங்க நேரங்களை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட கணவர்
மத்திய பிரதேசம் குவாலியரின் மச்லி மண்டி பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் 25 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அந்த வாலிபர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தேனிலவு முதல் படுக்கையறை வரை அனைத்தையும் அந்த வாலிபர் வீடியோ எடுத்து வைத்து இருந்தார். இந்த நிலையில் இந்த தம்பதியினர் படுக்கையறையில் எடுத்த அந்தரங்க வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோக்கள் குறித்து பெண்ணுக்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பெண் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண், “திருமணத்துக்குப் பிறகு என்னுடைய ஒவ்வொரு சிறிய, பெரிய விஷயத்தையும் எனது கணவர் வீடியோ எடுப்பது வழக்கம். நான் மறுக்கும் போது யாரிடமும் காட்ட மாட்டேன் என கூறிவிடுவார். ஆனால், அவர் இதையெல்லாம் ஒரு சதித்திட்டத்துடன் தான் செய்திருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.