விஜயின் ‘வாரிசு’ வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்து இருக்கிறார்கள்.
இதனால் விஜய் இதுவரை இல்லாத வகையில் கடும் போட்டியை சந்திக்க இருக்கிறார்.
பொங்கலுக்கு இங்கே அஜித்தின் ‘துணிவு’ வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் – விஜய் படங்கள் நேரடியாக மோதவிருக்கின்றன. இதனால் இரு படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவும். பாக்ஸ் ஆபிஸில் யாருடைய படம் வசூலை அள்ளப் போகிறது என்பதிலும் பலத்த போட்டியும் எதிர்பார்பும் இருக்கிறது.
இங்கே நிலவரம் இப்படியென்றால், தெலுங்கில் மாஸ் காட்டும் மூன்று ஹீரோக்களுடன் மோத இருக்கிறார் விஜய்..
விஜயின் ‘வாரிசுடு’ தெலுங்கில் சங்கராந்திக்கு வெளியாகிறது.
’வாரிசுடு’ படத்தைப் பார்க்கும் போது தமிழ்ப்படம் போன்று இருக்க கூடாது என்பதற்காகவே, மிகுந்த கவனத்துடன் வசனங்களை இயக்குநர் வம்சி படிபள்ளி எழுதியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் சங்கராந்திக்கு சிரஞ்சீவியின் ’வால்டர் வீரய்யா’, அடுத்து பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ம ரெட்டி’ அடுத்து பிரபாஸின் ‘ஆதிபுரூஷ்’ ஆகிய படங்கள் களத்தில் இறங்க இருக்கின்றன.
தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, பிரபாஸ் என மூன்று முக்கிய ஹீரோக்களுக்கு இருக்கும் பெரும் மாஸ் இருப்பதால், நேரடியாக களத்தில் இறங்கும் விஜய்க்கு இந்த சங்கராந்தி ஒரு ஆசிட் டெஸ்ட் போல இருக்குமென தெரிகிறது.
பின் குறிப்பு : ‘வாரிசு’ படத்தின் திரையரங்கு உரிமையை தமிழ்நாட்டில் லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ பெரும் தொகைக்கு வாங்கியிருப்பதாக கூறுகிறார்கள். விஜயின் அடுத்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க இருக்கிறது என்பது கூடுதல் செய்தி.
ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தமன்னா
தமிழில் ஒரு பெரிய ரவுண்ட் அடித்த தமன்னா, கீர்த்தி சுரேஷ், ப்ரியங்கா மோகன், கீர்த்தி ஷெட்டி போன்ற இளவட்டங்களின் வருகையால் படங்கள் இல்லாமல் சைலண்டாகி போனார்.
அப்பொழுதும் கூட ஒரு ஓரமாக ஒதுங்கி ஒடிடி-யில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆடித்தள்ளுபடி பாணியில் சம்பளக் குறைப்பு சமாச்சாரத்தையும் வைத்து வாய்ப்புகளுக்கு வலை வீசினார். ஆனால் அந்த யுக்தி எல்லாம் செல்லுப்படியாகவில்லை. இதனால் ரொம்பவே மூட் அவுட்டில் இருந்த தமன்னா இப்பொழுது உற்சாகத்தில் இருக்கிறார்.
காரணம் ’புஷ்பா- 2’ படத்தில் ஏறக்குறைய கமிட்டாகி இருப்பதுதான்.
முதல் பாகத்தில் ’ஊ சொல்றீயா’ என்று கிறங்கடிக்கும் ஆட்டம் போட்ட சமந்தா இரண்டாம் பாகத்தில் இல்லை. ஹிந்திப் படங்களில் கவனம் செலுத்துவதால் ‘நோ சொல்லிவிட்டு இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
இதனால் யாரை கமிட் செய்யலாம் என்று படக்குழுவினர் யோசித்தபோது தமன்னா க்ளிக் ஆகியிருக்கிறாராம்.
பாடல் மட்டுமின்றி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தமன்னா மேனேஜர் தரப்பில் சொல்லப்படுகிறது.
அமலா பாலிடம் விவாகரத்து கேட்கும் பவ்நிந்தர் சிங்
அமலா பாலுக்கும் அவரது நண்பர் பவ்நிந்தர் சிங்கிற்கும் இடையில் திருமணம் நடைபெற்றதா இல்லையா என்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டே இருக்கிறது.
அமலா பாலும், பவ்நிந்தர் சிங்கும் நெருங்கி பழகினர். இதனால் இருவருமே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறுகிறார்கள்.
இதையடுத்தே இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய தரப்பில் கூறப்படுகிறது.
இருவருக்குள்ளேயும் பிரச்சினை எழவே, அமலா பால் புகார் கொடுக்க, பவ்நிந்தர் சிங்கை காவல்துறை கைது செய்தனர்.
பவ்நிந்தர் சிங் காவல்துறையில் கைது படலத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்.
இருவருக்கும் பிரச்சினை எழுந்தவுடன் சம்பிரதாயமாக செய்து கொண்ட திருமணத்தை அமலா பால் ‘அது நிச்சயதார்த்தம் மட்டுமே. திருமணம் இல்லை’ என்று அமலா பாலுக்கு நெருங்கிய நண்பர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் பவ்நிந்தர் சிங், ’என் சமூக மக்கள் முன் நடைபெற்ற அவ்விழாவில் எல்லோரும் அதற்கு சாட்சி. இப்போது இருவரும் பிரிந்து விட்டாலும், என் எதிர்கால வாழ்க்கையில் பெரும் பாதிப்பு உண்டாகி இருக்கிறது. இதனால் சட்டரீதியாக நான் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் வாழவேண்டுமென்றால், அமலா பாலிடமிருந்து முறைப்படி விவாகரத்து வேண்டும். அதன்பின்னரே என் வாழ்க்கை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்’ என்று கோரிக்கை வைத்திருப்பதாக ஒரு பேச்சு அடிப்படுகிறது.