செல்வராகவன் – தனுஷ் ‘மயக்கம் என்ன’ படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் கைக்கோர்த்திருக்கும் படம் ‘நானே வருவேன்’.
பொஸசிவ்னெஸ் பொங்கும் காதல், தணியாத காமம், கேர்ஃப்ரீயாக திரியும் கேங்ஸ்டர், உறவில் உதற வைக்கும் இருண்ட பக்கங்கள் என படமெடுத்தே பழக்கப்பட்ட இந்த காம்பினேஷன், நீண்ட வருடங்களுக்குப் பின் இணைவதால் இந்த முறை பேய்த்தனமான படமெடுக்க வேண்டுமென பாராநார்மல் களத்தை கையிலெடுத்து இருக்கிறார்கள் போல.
ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் இருக்கும் இரட்டையர்கள். இவர்களில் அண்ணனை தம்பி கொல்ல வேண்டும். இப்படியொரு ஒரு அதிரிபுதிரியான கண்டிஷனை போடுகிறது ஒரு குட்டி பயலின் ஆவி.
இரட்டையர்களில் அண்ணனின் மகன்தான் இறந்து போன அந்த குட்டிப் பையன். சொந்த அப்பாவையே தனது சித்தப்பாவை வைத்து கொல்ல துடிக்கிறது பொடியனின் ஆவி.
இப்படியொரு லைனை பிடித்ததிலிருந்தே வழக்கமான கான்செப்ட்களிலிருந்து விடுப்பட்டு படமெடுக்க செல்வராகவன் முயன்றிருப்பது புரிகிறது.
இரட்டையர்களில் அண்ணன் கதிர். ஒரு சைக்கோபாத். தம்பி பிரபு. எதற்கும் பயப்படுகிற பிஸிபெலாபாத். இப்படி இரண்டு எதிரெதிர் குணாதிசயங்களை கொண்ட கதாப்பாத்திரங்களை களமாட தனுஷூக்கு ஆடுகளம் அமைத்து கொடுத்திருக்கிறார் செல்வராகவன்.
ஒரு சூழலில் இருவரும் பொடியன்களாக இருக்கும் போதே அண்ணன் அப்பாவைக் குத்தி கொன்றுவிடுகிறான். ஜோசியர் இந்த இரண்டு பேரும் சேர்ந்து இருந்தால், ஒருத்தன் மற்றவனை கொன்றுவிடுவான் என்று சொல்லி வைக்கிறார்.
அம்மா கதிரை ஒரு குளக்கரையில் விட்டுவிட்டு பிரபுவுடன் கிளம்பிவிடுகிறார். பிரபு மனைவி, குழந்தை நல்ல வேலை என சந்தோஷமாக செட்டிலாகி விடுகிறான். குடும்பத்தோடு வட இந்தியாவில் இருக்கும் சோப்தாவுக்கு செல்கிறான்.
அங்கே பிரபுவின் மகளுக்கு என்னவோ ஆகிறது. ஊருக்கு திரும்பிய பின்னும் மகள் நார்மலாக இல்லை. தனியறையில் யாரும் இல்லாத போதும் பேசிக்கொண்டிருக்கிறாள். மகள் அறையில் படுக்கும் அம்மாவுக்கு யாரோ மேலிருந்து அழுத்துவது போன்ற உணர்வு. மகளைக் கேட்டால் இதற்கு காரணம் ‘சோனு’ என்கிறாள்.
இப்படி நகரும் முதல் பாதியில் ஒரு பக்காவான பாராநார்மல் படமாக பதைப்பதைக்க வைக்கிறது.
சோனுவின் ஃப்ளாஷ்பேக்கில் முதல் இரண்டு ரீல்களுக்குப் பிறகு காணாமல் போன அண்ணன் கதிரின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. கதிரின் வாழ்க்கையில் நடப்பது ஒரு
இதன் பிறகு சைக்கோபாத் கதிரை வெகுஜனத்தில் ஒருத்தனாக வாழ்க்கையை ஓட்டும் இந்த காமன் மேன் பிரபு என்ன செய்ய முடிந்தது என்பதை க்ளைமாக்ஸில் காட்டியிருக்கிறார்கள்.
அப்பா மகள் சென்டிமெண்ட்டில் தனுஷ் எமோஷனலாக நடித்திருந்தாலும், கலவர கதிராக காட்டும் வில்லத்தனத்திற்கு அப்ளாஸ் அள்ளுகிறது. செல்வா என்றால் தனுஷூக்கு அல்வா போல. நடிப்பில் கூடுதல் நேர்த்தி.
பொதுவாகவே செல்வராகவன் படத்தில் ஹீரோ அல்லது ஹீரோயின் இவர்களில் யாராவது ஒருவர் கொஞ்சம் சிரீயஸாகவே இருப்பார்கள். இந்த முறை இந்துஜா. கொஞ்சம் சிரீயஸாகவே நடித்து இருக்கிறார்.
யோகிபாபு, பிரபு, எல்லி எவிஆர் ராம் இவர்கள் செல்வாவின் மீட்டரை விட்டு மீறாமல் நடித்திருக்கிறார்கள். ஹியா தாவே, பிரணவ், பிரபவ் என பொடிசுகள் நடிப்பில் பட்டாசு போல அசத்தியிருக்கிறார்கள்.
படத்தில் செல்வராகவன் – தனுஷ் காம்பினேஷனின் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. அதிலும் கதிர் வரும் காட்சிகளில் வரும் பிஜிஎம், ஹாலிவுட்டின் எம்ஜிஎம் படங்களில் இருக்கும் தரம்.
இந்த மாதிரியான ஒரு த்ரில்லருக்கு என்ன தேவையோ அதை மிகச்சரியாக தனது ஒளிப்பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஓம் பிரகாஷ்.
பக்கத்துவீட்டு சிறுமியின் பாவாடையில் தீ வைக்கும் சிறுவன் கதிர். எவ்வளவு அடித்தும் மிரட்டியும் கூட ஸாரி சொல்லாத அவனது கேரக்டரை என ஒரு சைக்கோபாத்தின் டீடெய்ல்களுடன் காண்பித்திருப்பதன் மூலம் அந்த கதாபாத்திரத்தின் மீதான ஒரு கலவரத்தை ஆரம்பத்திலேயே நமக்குள் உருவாக்கி விடுகிறார் செல்வராகவன்.
வட இந்தியாவில் சோப்தாவுக்கு டூர் அடிக்கும் போது, அங்கே இறந்த சோனுவின் ஆவி தனுஷ் மகள் உடம்பில் புகுவது போல் காட்டியிருப்பது லாஜிக்.
க்ளைமாக்ஸில் பிரபு மலை கீழிலிருந்து மேலே ஏறி வர, ‘’நீங்களே மேலே வந்துட்டீங்கன்னா எங்கப்பா…’ என்று கதிர் மகன் அடிக்கும் கமெண்ட் செல்வராகவனின் வழக்கமான நக்கல்
ஆனால்..
முதல் பாதியைப் பற்றி 17 வரிகளில் சொல்லிவிட்டு, இரண்டாவது பாதியை மட்டும் 5 வரிகள் சொன்னால் நியாயமா என்று உங்களுக்குள் ஏதாவது ஒரு யோசனை ஓடலாம்.
பரபரப்பான ஒரு பாராநார்மல் படமாக முதல்பாதியை காண்பித்துவிட்டு, விறுவிறுப்பாக காட்சிகள் நகர்வதற்கு வாய்ப்புகள் இருந்தும் சட்டென்று சப்பென்ற க்ளைமாக்ஸூக்கு வந்துவிட்டால்….