தமிழில் பெரும் ரசிகர் பட்டாளத்தையும், கமர்ஷியல் வேல்யூவையும் வைத்திருக்கும் விஜய்க்கு, தனது பிஸினெஸ்ஸை, மார்க்கெட்டை தெலுங்கு சினிமாவிலும் விரிவுப்படுத்த வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை.
‘வாரிசு’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும், தமிழிலும் எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவே இல்லை. ஆனால் அதற்குள் அங்கே பாக்ஸ் ஆபிஸில் மகாராஜாவாக இருக்கும் மகேஷின் ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் மல்லு கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு இடையே சோஷியல் மீடியாவில் கடும் போர் நடந்து வருகிறது.
BoycottMaheshBabu, #Boycott***Vijay, #VijayBotsUnderMBfansFoot, #NationalTrollMaterialVijay போன்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் இருவரின் ரசிகர்களும் மாறி மாறி ட்வீட் செய்து வைரல் ஆக்கிவருகிறார்கள்.
இந்த பஞ்சாயத்தை யாருடைய ரசிகர் தொடங்கி வைத்தார் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் இதில் மிக ஆர்வமாக சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்.
மகேஷ் பாபுவுக்கு 12 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். விஜய்க்கு 4 மில்லியன் ஃபாலோயர்கள்தான். ஆனால் விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் ரொம்பவே திவீரம். இதனால் விஜய் ரசிகர்கள் தரப்பில் இந்த பஞ்சாயத்து பற்றி எரிகிறது.
’கில்லி’, ’போக்கிரி’ படங்களின் ஒரிஜினலில் மகேஷ் பாபு நடித்திருந்தார். இப்படங்களின் தமிழ் ரீமேக்கில்தான் விஜய் நடித்திருந்தார். பொதுவாகவே மகேஷ் பாபுவின் மானரிஸ்த்தை விஜய் கொஞ்சம் ஃபாலோ செய்வார் என்பதும் கூடுதல் தகவல்.
கிளமார் ரூட்டுக்கு மாறும் கீர்த்தி சுரேஷ்
தனது குடும்ப பாங்கான முக அழகினால் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட கீர்த்தி சுரேஷ் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்.
ஆரம்பத்தில் இவர் நடித்த படங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அடுத்து நடிகையர் திலகம் ‘சாவித்திரி’ படத்தில் நடித்ததும் பாராட்டுக்கள் குவிந்தன.
இந்தப் படத்திற்கு பிறகு ஹீரோயினை மையமாக கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ். இங்கே ஆரம்பித்தது பிரச்சினை.
அத்தனை படங்களும் ப்ளாப். இதனால் கீர்த்தி சுரேஷூக்கு இருந்த மவுசு டல்லடிக்க ஆரம்பித்தது.
இதனால் இப்போது தனது உடல்வாகு சைஸ் ஸீரோ டைப்பில் இருக்கும் வகையில் எடையைக் குறைத்து, ஒரு போட்டோ ஷூட்டையும் செய்திருக்கிறார். இதுவரையில் கவர்ச்சி காட்டாத கீர்த்தி இப்போது தாராளமயமாக்கல் கொள்கையில் ஆடைகளுக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.
தனது மேனேஜர் தரப்பில் கிளாமர் ரோல் உள்ள கதைகளை தேர்ந்தெடுக்கவும் உத்தரவிட்டு உள்ளாராம். சம்பள விஷயத்திலும் அதிக கெடுபிடி வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறாராம்..
ஷங்கருக்கு சவால் விடும் ராஜமெளலி!
இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஷங்கர் என்ற ஒரே பெயர் மட்டுமே முணுமுணுக்கப்பட்டது.
ஆனால் பாகுபலி வரிசை படங்கள் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்குப் பிறகு இந்த பிரம்மாண்ட இயக்குநர் டைட்டிலுக்கு ராஜமெளலியும் பட்டையைக் கிளப்பி கொண்டிருக்கிறார்.
தற்போது ராஜமெளலி, ஷங்கரின் லேட்டஸ்ட் டெக்னாலஜி மாயாஜாலங்களுக்குப் போட்டியாக புது டெக்னாலஜியில் படத்தை ஷூட் செய்ய திட்டமிட்டு வருவதாக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.
ராஜமெளலி தனது அடுத்தப்படத்தில் ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் ‘அன்ரியல் டெக்னாலஜி’யை [UnReal technology] பயன்படுத்தும் யோசனையில் இருக்கிறாராம். இந்த நவீன தொழில்நுட்பத்துடன், தனது பட ஹீரோவின் உடல் அசைவுகளை மோஷன் கேப்ச்சர் [motion-capture] மற்றும் ரியலிஸ்டிக் சிஜி ரிப்ளிகா [realistic CG replica] மூலம் படம்பிடித்து, அதை பிரம்மாண்டமாக காட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள்.
இந்த தொழில்நுட்பம் மூலம் சண்டைக்காட்சிகளில் அசுரத்தனமாக எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளை எடுக்க இருக்கிறார்களாம்.
இதற்காக ராஜமெளலி பாரீஸூக்கு அடிக்கடி பறந்தவண்ணம் இருக்கிறார். இதன் பலனாக இப்போது ஒரு வெளிநாட்டு ஸ்டூடியோ இந்தியாவில் தனது அலுவலகத்தை திறக்கவும் திட்டமிட்டு உள்ளதாம்.