நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படமாக (Profile picture) தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். சிலர் இதை வரவேற்க, சிலர் இதை விளம்பர ஸ்டண்ட் என்று புறக்கணித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வேண்டுகோளுக்கு திரைத்துறையில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்…
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படமாக தேசியக் கொடியை வைத்துள்ளார்.
ரஜினிக்கு அடுத்ததாக நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் தேசிய கொடியை புரொபைல் படமாக வைத்துள்ளார்.
தமிழ் திரைப்பிரபலங்களான கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, சிலம்பரசன், கார்த்தி, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டவர்கள் யாரும் தங்கள் சமூக வலைதலங்களில் தங்கள் புகைப்படத்தை மாற்றவில்லை.
இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், கங்கனா ரானாவத், அஜய் தேவ்கன், சுஷ்மிதா சென் போல பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் முகப்பு படத்தை தேசிய கொடியின் படமாக மாற்றியுள்ளனர். ஆனால் அமிதாப் பச்சன், முகப்பு படத்தில் இன்னும் தேசியக் கொடியை வைக்கவில்லை.
தெலுங்கு திரையுலக பிரபலங்களில், நடிகர் பிரபாஸ், மகேஷ் பாபு, ஆகியோர் சுதந்திர தினம் குறித்து பதிவுகள் வெளியிட்டுள்ளனர். ஆனால் படத்தை மாற்றவில்லை.
மலையாள திரையுகில், நடிகர் மம்முட்டி, மோகன்லால், உன்னி முகுந்தன், சுரேஷ் கோபி ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தேசியக் கொடியாக வைத்திருக்கிறார்கள்.