இந்திய சினிமாவில் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக தேசிய திரைப்பட விருதுகள் கருதப்படுகிறது. அந்த வகையில், 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
‘சூரரைப் போற்று’ படத்துக்கு 5 விருதுகள்
சிறந்த படம் – சூரரைப் போற்று
சிறந்த நடிகர் – சூர்யா (சூரரைப் போற்று)
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ் (சூரரைப் போற்று)
சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர் (சூரரைப் போற்று)
‘மண்டேலா’ திரைப்படத்துக்கு 3 விருதுகள்
சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது – மடோன் அஷ்வின் (மண்டேலா)
சிறந்த வசனம் – மடோன் அஷ்வின் (மண்டேலா)
சிறந்த திரைக்கதை – மடோன் அஷ்வின் (மண்டேலா)
(சிறந்த திரைக்கதைக்கான விருது ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர் மற்றும் ‘மண்டேலா’ படத்துக்காக மடோன் அஷ்வின் – மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.)
‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்துக்கு 3 விருதுகள்
சிறந்த மாநில மொழி திரைப்படம் (தமிழ்) – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த படத்தொகுப்பாளர் விருது – ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த உறுதுணை நடிகர் (பெண்): லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் சில பெண்களும்)
சிறந்த Non-Feature Film இயக்குநர் விருது தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வி. ரமணிக்கு ‘ஓ தட்ஸ் பானு’ படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
‘அய்யப்பனும் கோஷியும்’ மலையாள படத்துக்கு 4 விருதுகள்
சிறந்த இயக்குநர் – சச்சி (அய்யப்பனும் கோஷியும்)
சண்டைப் பயிற்சி – ராஜசேகர், சசி, சுப்ரிம் சுந்தர் (அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த பின்னணி பாடகி – நஞ்சியம்மா (அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த துணை நடிகர் – பிஜு மேனன் (அய்யப்பனும் கோஷியும்)
மேலும்,
சிறந்த நடிகர் – அஜய் தேவ்கன் ((Tanhaji: The Unsung Warrior, இந்தி)
(சிறந்த நடிகருக்கான விருது ’சூரரைப் போற்று’ படத்துக்காக சூர்யாவுக்கும் ‘Tanhaji: The Unsung Warrior’ படத்துக்காக அஜய் தேவ்கனுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.)
சிறந்த இசையமைப்பாளர் – தமன் (அலா வைகுந்தபுரம், தெலுங்கு)
சிறந்த இசையமைப்பாளர் (Non-Feature Film) – விஷால் பரத்வாஜ்
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) – ராகுல் தேஷ் பாண்டே (மீ வசந்தராவ், மராத்தி)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ஷப்டிகுன்ன காளப்பா
சிறந்த புலனாய்வுப் பிரிவு படம் – சேவியர் பிரிகேடியர் ப்ரீதம் சிங்
சிறந்த மாநில மொழி திரைப்படம் (மலையாளம்) – திங்கலஞ்ச நிச்சயம்
சிறந்த மாநில மொழி திரைப்படம் (தெலுங்கு) – கலர் போட்டோ
சிறந்த மாநில மொழி திரைப்படம் (மராத்தி) – அவன்சித்
கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம்: டிரீமிங் ஆப் உட்ஸ் (மலையாளம்)
சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம்: பபுங் ஷியாம் (மணிப்புரி)
திரைப் படங்களுக்கு உகந்த மாநில விருது – மத்தியப்பிரதேசம்
திரைப்படங்கள் தொடர்பான சிறந்த புத்தகம் – கிஷ்வர் தேசாய் எழுதிய ‘தி லாங்கஸ்ட் கிஸ்’ மற்றும் மலையாளப் புத்தகமான ‘எம்டி அனுபவங்களுடே புஸ்தகம்’, ஒடியா புத்தகமான ‘காலி பைனே கலிரா சினிமா’ ஆகியவை சிறப்பு விருதுகளையும் வென்றன.
சிறந்த வர்ணனை விருது – ஷோபா தரூர் சீனிவாசன்
ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருதுகளுக்காக 30 மொழிகளில் இருந்து மொத்தம் 305 படங்கள் அனுப்பப்பட்டன. அதில் மேற்கண்டவை சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சிறந்த சினிமா விமர்சகர் விருது – இந்த வருடம் யாருக்கும் அறிவிக்கப்படவில்லை.
பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. முதல்நாள் முதல் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி தொடர்ந்து எதிர்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. இதனால் அவையில் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதும், அதுகுறித்த விவாதங்கள் நடத்துவதிலும் ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் மூத்த அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், புதிய மசோதாக்கள் நிறைவேற்றம், புதிய ஜனாதிபதியாக தேர்வான திரவுபதி முர்மு, வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.4 % மாணவர்கள் தேர்ச்சி
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் தற்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. http://cbse.result.nic.in/ என்ற இணைய தளம் வாயிலாக தங்களுடைய தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று வெளியான முடிவுகளில் நாடு முழுவதும் தேர்வு எழுதிய 20,93,978 மாணவர்களில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 94.4 % ஆகும். நாட்டில் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.68% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 98.78% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தேசிய அளவில் 93.80% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.95.21% மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி உடலை நாளை காலை பெற்றுக்கொள்கிறோம்: பெற்றோர் தரப்பு தகவல்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “எப்போது உடலை பெற்றுக்கொள்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் புதிய புதிய பிரச்சனைகளை எழுப்புகிறீர்கள். மருத்துவ குழுவை அமைக்க நீங்களோ நானோ நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல” என மாணவியின் பெற்றோர் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பள்ளி மாணவியின் உடலை நாளை காலை 6 -7 மணிக்குள் பெற்றுக்கொள்கிறோம் என பெற்றோர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு நாளையே அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி கூறீனார். அப்போது, இறுதி ஊர்வலத்தின் போது காவல்துறை பாதுகாப்பு அவசியமில்லை என பெற்றோர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.