No menu items!

2028-ம் ஆண்​டுக்​குள் பெண்​களே பெரும்பான்மையான முதலீட்​டாளர்​கள்

2028-ம் ஆண்​டுக்​குள் பெண்​களே பெரும்பான்மையான முதலீட்​டாளர்​கள்

இந்​தி​யப் பெண்​கள் பணத்தை தெளி​வான இலக்​கு​களு​டன் அவர்​கள் முதலீடு செய்ய தொடங்​கி​யுள்​ளனர்.

நாட்​டின் நிதி சூழலை மாற்​றியமைப்​ப​தில் பெண் முதலீட்​டாளர்​கள் முக்​கிய பங்கு வகிக்​கின்​றனர்.

இதுதொடர்​பாக டிஜிட்​டல் வெல்த் மேனேஜ்மென்ட் முதலீட்டு தளமான பின்​எட்ஜ் மேற்​கொண்ட ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த 2012-ல் புதிய முதலீட்​டாளர்​களில் பெண்​களின் பங்கு 18%-​மாக மட்​டுமே இருந்​தது. இன்று 42% அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக, கடந்த மூன்று ஆண்​டு​களில் மட்​டும் முதலீட்டு நடவடிக்​கை​களில் பெண்​களின் பங்​கேற்பு 50% அதி​கரித்​துள்​ளது. மேலும், 2028-ம் ஆண்​டுக்​குள் அனைத்து புதிய முதலீட்​டாளர்​களி​லும் பாதிக்​கும் மேற்​பட்​ட​வர்​கள் பெண்​களாக இருப்​பார்​கள்.

பெண்​கள் இப்​போது பணி​யிடத்​தில் சிறந்து விளங்​கு​கிறார்​கள். இதனால், அவர்​களிடம் நிதி சுதந்​திரம் மற்​றும் விழிப்​புணர்வு பெரு​மள​வில் ஏற்பட்டுள்​ளது.

குறிப்​பாக, ஓய்​வூ​தி​யத் திட்​ட​மிடல் ஒரு முக்​கிய முன்​னுரிமை​யாக அவர்​களிடம் உரு​வெடுத்​துள்​ளது, மேலும், 30.82% பெண்​கள் தங்​களது குழந்​தைகளின் கல்விக்கு அதிக முக்​கி​யத்​து​வம் கொடுத்​து முதலீடு செய்​வ​தாக தெரி​வித்​துள்​ளனர்​. இவ்வாறு பின்எட்ஜ் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...