No menu items!

ஆதாரம் இல்லாமல் பேட்டி கொடுத்தது ஏன்? சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதாரம் இல்லாமல் பேட்டி கொடுத்தது ஏன்? சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதாரம் இல்லாமல் திருப்பதி லட்டு பற்றி பத்திசிகைகளுக்கு பேட்டி கொடுத்தது ஏன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, திருப்பதி லட்டு தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக அம்மாநிலத்தின் இப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியியிருந்தார். திருப்பதி லட்டு தயாரிக்க மீன் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்ட நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக ஆய்வக பரிசோதனையில் உறுதியானதாகவும் ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கலப்பட நெய்யால் லட்டு தயாரித்த்தால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க ஹோம்ம் உள்ளிட்ட பல்வேறு பரிகாரங்கள் செய்யப்பட்டன.

கலப்பட நெய் தொடர்பாக விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெகன் மோகன் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி, வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர். இதற்குப் பதில் அளித்த திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, ‘இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என பதில் அளித்தார்.

“அப்படியானால் உடனடியாக இது குறித்து ஏன் பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டும்? மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று நீதிபதி கவாய் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த சித்தார்த் லுத்ரா, லட்டு ருசி சரியில்லை என்று மக்கள் புகார் கூறியதாகக் குறிப்பிட்டார்.
“அப்படியானால், லட்டுவில் அசுத்தமான பொருள் உள்ளதா என்பதைக் கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் நீதிபதி விஸ்வநாதன், “அசுத்தமான நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “இந்த மனுக்கள் (இறை) நம்பிக்கை அற்றவர்களின் மனுக்கள் அல்ல. முந்தைய ஆட்சியின் தவறு, தற்போதைய அரசாங்கத்தைத் தாக்குகிறது” என்று வாதிட்டார்.
முகுல் ரோஹத்கிக்கு பதில் அளித்த நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்கள், மதத்தை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதனை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. ஆந்திர அரசு, சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. முடிவு வரும் வரை காத்திருக்காமல் பத்திரிகைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

எஸ்.ஐ.டி., குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எங்கே? தற்போதைய நிலையில் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நெய் லட்டு தயாரிக்க பயன்படுத்தவில்லை என்பது தெரிய வருகிறது. தொடர்ந்து புகார் கிடைக்கபெற்றிருந்தால் நெய் டேங்கர்கள் அனைத்திலும் மாதிரி எடுத்திருக்க வேண்டும்” என்று கடுமையான கருத்துகளை தெரிவித்தார்.

மேலும் திருப்பதி லட்டு விவகாரத்தை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.டி., விசாரிப்பதா? அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரிப்பதா? என்பதை மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...