விஜய்யின் 50 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் ரத்தனானம், அன்னதானம் என்று ரசிகர்கள் தொண்டர்களாக மாறிய பிறகு அசத்தி விட்டனர். இது அனைத்தையும் விஜய் தனது ஐடி விங் மூலம் பார்த்து தெரிந்துகொண்டிருக்கிறார். அதிக அளவிலான நலப்பணிகளில் ஈடுபட்டவர்களை குறித்து வைத்து அவர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்டும் உண்டாம்.
இதர்கிடையில் விஜய் தனக்கு சொந்தமான சில சொத்துக்களில் சில மாற்றங்களை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. விஜய்க்கு சொந்தமாக இருந்த ஷோபா திருமண மண்டபத்தை தனியார் நிறுவனத்திடம் கொடுத்து தற்போது துணிக்கடைக்கு கொடுத்திருக்கிறார். இது நாள் வரைக்கும் இது விஜய்யின் அம்மா ஷோபாவின் பெயரில் இருந்து வந்தது. அதன் அருகில் இருந்த காலி இது நாள் வரைக்கும் புல் வெளியில் அடர்ந்து வளர்ந்து கிடந்தது. அதனை சரி செய்து வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி வாடகைக்கு விட்டிருக்கிறார்.
அங்கேயே இருந்த இன்னொரு திருமண மண்டபத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார். இதேபோல இன்னொரு திட்டத்தையு செய்ய திட்டமிட்டு வருகிறார் விஜய். சென்னையில் தனது கட்சிக் கூட்டங்களை நடத்த வசதியாக திருமண மண்டபம் போன்ற ஒரு இடம் வேண்டும் என்பதற்காக நீலாங்கரை அருகிலேயே பிரமாண்டமான ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற பேச்சை எடுத்திருக்கிறார். அதனால் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அந்த கட்டிடப்பணியை முடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.
இதே போல மிகப்பிரமாண்டமான தியேட்டர் ஒன்றை கட்டவும் ஐடியா செய்திருக்கிறார் விஜய். அரசியல் பயணத்திற்கு இடையே தியேட்டர் கட்ட வேண்டும் என்கிற இந்த யோசனையை அவருக்கு ஏற்பட்ட காரணம் அதற்குப் பின்னாலும் இருக்கும் அரசியல் திட்டம்தான் என்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு தமிழகம் மட்டுமல்லாமல் பாண்டிச்சேரியிலும் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது வளர்ச்சித் திட்டங்களுள் ஒன்றாக இருக்கிறதாம். அங்கும் ஒரு தலைமையகம் கட்ட வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாக இருக்கிறது. அதற்கு வெறும் தலைமையகமாக மட்டுமல்லாமல் கூட்டம் நடத்த வசதியாகவும் தியேட்டராக இருக்க யோசித்து வருகிறார். அதன்படி ஆன்ந்தின் கட்டுப்பாட்டில் தியேட்டரை கொண்டு வர இருக்கிறார் என்கிறார்கள்.
இந்த பணிகள் எல்லாம் அடுத்த பொதுதேர்தலுக்குள் நடக்க வேண்டும் என்று சொல்லி முக்கிய நிர்வாகிகளிடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பதாக தெரிகிறது. இதற்கான இடம் தேர்வு, கட்டுமான நிறுவனம் என்று தேடுதல் வேட்டை ஒரு பக்கம் நடபெற்றுக் கொண்டிருக்கிறது. கடுமையான தேர்தல் பணிகளுக்கிடையே இந்த திட்டத்தை எப்படி கவனிக்கப்போகிறார் விஜய் என்பதே அவரை சுற்றி உள்ளவர்களிடம் இருக்கும் கேள்வியாக இருக்கிறது இதற்கு விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்.