No menu items!

கூலி படத்தில் ரஜினியோடு நடிக்கும் நடிகர்கள் அப்டேட்

கூலி படத்தில் ரஜினியோடு நடிக்கும் நடிகர்கள் அப்டேட்

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கூலி திரைப்படத்தின் ஒவ்வொரு கட்ட அப்டேட்டுகளும் அதிர வைக்கின்றன. லோகேஷ் கனகராஜின் திரைக்கதை அமைக்கும் பணியே பல கட்டமாக திருத்தப்பட்டு படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறது. ரஜினியின் சின்னச்சின்ன ஆலோசனைகளை தங்கள் திரைக்கதைக்கு பலமாக மாற்றியிருக்கிறது படக்குழு. வழக்கமாக இது எல்.சி.யூ. என்கிற ஐடியாவில் இல்லாமல் தனிக்கதையாகவே தயாராகி வருகிறது.

இதற்காக பல கெட்டப்புகளை போட்டு ரஜினிக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தப் பார்த்தார் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு முடிவான ஒரு வேடம் ரஜினி ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமாக இருக்கிறது. அதைத்தான் தற்போது இணையத்தில் ரசிகர்கல் பகிர்ந்து வருகிறார்கல். ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாராகும் இந்தப்படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு முக்கியமான நடிகர்கள் படத்தில் பங்கெடுக்க இருக்கிறார்கள். இதனை லோகேஷ் தேர்ந்தெடுத்து ரஜினி ஆலோசனைக்குப் பிறகு நடிக்க வைக்க இருக்கிறார். அதன் படி தமிழுக்கு புதிய வரவாக பல முன்னணி நடிகர், நடிகைகள் கூலியில் வர இருக்கிறார்கள்.

ரஜினிக்கு படு ஸ்டைலான உடைகளும் அவர் அணியும் வாட்ச், நகைகள் கோட் என்று எல்லாம் அசத்தலாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மிரட்டலாக வந்திருக்கும் இந்தக் கதையில் ரொம்பவும் ஆர்வாமாக்கியிருக்கிறார் ரஜினி. இதனால் படப்பிடிப்புக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரஜினி.

இதுவரைக்கும் வேறு எந்த படத்திற்கும் இத்தனை நாள் கால்ஷீட் கொடுத்ததவில்லை. இதனால் குஷியாகியிருக்கும் லோகேஷ் கூலியை 2 பாகங்களாக எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் இத்தனை நாட்கள் அவர் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அவரோடு சேர்ந்து சில முக்கிய நடிகர்கள் நடிகைகளின் கால்ஷீட்களையும் அதிக நாட்கள் வாங்கியிருக்கிறார்களாம். இந்த முறை அனிரூத் வேறுமாதிரியான வித்தியாசமான பாடல்களை கொடுக்க லோகேஷிடம் டியூன்களை போட்டுக் காட்டியிருக்கிறார். எல்லாமே அசத்தலாக வந்திருப்பதில் செம திருப்தியாகியிருக்கிறார்.

இந்த மகிழ்ச்சியில் கூலி படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு பற்றி லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது இன்று மாலை 6 மணிக்கு, கூலி படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

அதில் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறார். கூடவே சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.. ஃபஹத் ஃபாசிலின் பெயரும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஒரு மீன்பிடி துறைமுகத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது எனவும், ஆகஸ்ட் – 25 முதல் ரஜினிகாந்த் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும், இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 நாட்கள் நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...