தொலைகாட்சி தொடர்களில் சினிமாவை மிஞ்சும் காட்சிகள் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் பின்னணி இசையை ஆங்காங்கே பயன்படுத்துகிறார்கள். சில பாடல்களில் வரும் இடையிசையையும் காதல் காட்சிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இதையெல்லாம் காப்பி ரைட் சட்டத்திற்குள் வராமல் புத்திசாலித்தனமாக சில டெக்னிக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதுநாள் வரைக்கும் இதனை திரைத்துறையிலிருந்து யாரும் எதிர்க்கவில்லை. இந்த நிலையில் சீரியல்களில் காதல் காட்சிகளிலும், கணவன் மனைவி நெருக்கமான காட்சிகளில் இளசுகளை ஈர்க்கும் வகையில் அதிக க்ளாமர் காட்டும் வகையில் எடுத்து வருகிறார்கள்.
இதனால் சீரியலுக்கு ரேட்டிங் அதிக அளவில் கிடைத்து வருகிறது. இதனால் திரைப்படங்களுக்கு நிகரான வரவேற்பை, டிவி தொடர்களும் பெற்று வருகின்றன. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக டி ஆர் பி-யில் பட்டையை கிளப்பி வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது
இந்த நிலையில் கார்த்திகை தீபம் தொடரில் நடித்து வந்த அர்த்திகாவை தொடரிலிருந்து நீக்கியிருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டிஆர்பி-யில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள ‘கார்த்திகை தீபம்’ சீரியல், இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில்… இந்த தொடரின் இரண்டாவது சீசனில் இருந்து கதாநாயகி அர்த்திகா நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து, அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள அர்த்திகா, ‘கார்த்திகை தீபம் 2’ தொடரில் இருந்து என்னை திட்டம் போட்டு நீக்கி உள்ளனர். இதற்கு காரணம் அண்மையில் தான் எனக்கு திருமணம் நடந்து முடிந்தது. இதனால் நெருக்கமான காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது. இதையெல்லாம் மனதில் வைத்து என்னை இந்த சீரியலில் இருந்து நீக்கி உள்ளனர். இதற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை இதுநாள் வரை எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். எனினும் கூடிய விரைவில் அர்த்திகா புது சீரியலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.