No menu items!

இந்தியர்களின் திருமணத்தால் துருக்கிக்கு பிரச்சனை

இந்தியர்களின் திருமணத்தால் துருக்கிக்கு பிரச்சனை

ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை கண்டித்து பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை நம் நாட்டின் சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் எடுத்துள்ளனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. அந்த வரிசையில் நம் இந்தியர்கள் கேன்சல் செய்யும் திருமணத்தால் துருக்கிக்கு சுமார் ரூ.770 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதையடுத்து நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை பந்தாடியது. நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தான் உள்ளே புகுந்து தாக்கியது.

பயங்கரவாதிகளின் 9 முகாம்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. நம் நாட்டின் இந்த பதிலடி தாக்குதலுக்கு பல உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன. அதோடு பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு நேரடியாகவும், வெளிப்படையாகவும் துருக்கி, அஜர்பைஜான் ஆதரவை அறிவித்தன.

இதில் துருக்கி என்பது நம் நாட்டுக்கு பெரும் துரோகம் செய்தது. துருக்கி சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்றது. நம் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் துருக்கி சென்று வருகின்றன. அதேபோல் 2023ம் ஆண்டில் துருக்கியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் நம் நாடு துருக்கிக்கு உதவிகளை வழங்கியது. நம் நாட்டில் இருந்து மீட்பு படையினர், டாக்டர்கள், நர்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் அதையெல்லாம் துருக்கி மறந்துவிட்டு பாகிஸ்தான் பக்கம் சென்றது. அதோடு நம்மை கண்டித்தது. அதுமட்டுமின்றி ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் நம்மை தாக்க ட்ரோன் மற்றும் அதனை ஆபரேட் செய்யும் ஆபரேட்டர்களை வழங்கி துருக்கி நம்பிக்கை துரோகியானது. இதனால் துருக்கிக்கு நம் மக்கள் பாடம் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கியை புறக்கணிக்கும் முடிவை சுற்றுலா பயணிகள் எடுத்துள்ளனர். அதேபோல் வர்த்தகர்களும் துருக்கி நாட்டின் பொருட்களை இறக்குமதி செய்வதையும், துருக்கிக்கு ஏற்றுமதி செய்வதையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது துருக்கியின் பொருளாதாரத்தில் பெரும் அடியை கொடுக்க உள்ளது.

இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது துருக்கி சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற இடம் என்பதால் நம் நாட்டை சேர்ந்த பணக்காரர்கள் துருக்கியில் வைத்து திருமணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதன்மூலம் துருக்கி கல்லா கட்டி வந்தது. தற்போது நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டால் பலரும் துருக்கியில் திருமணம் செய்ய எடுத்த முடிவை கைவிட்டுள்ளன. இதன்மூலம் துருக்கிக்கு நேரடியாக ரூ.770 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று அந்த பிரிவை நன்கு அறிந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‛‛கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் துருக்கியில் வைத்து நம் நாட்டை சேர்ந்தவர்களின் 50 திருமணம் நடந்தது. இதில் ஒவ்வொரு திருமணத்துக்கான செலவு என்பது ரூ.25 கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த திருமணம் என்பது துருக்கியில் ஹோட்டல் பிசினஸை மட்டும் வளர்க்கவில்லை. அலங்காரம் செய்யும் ஊழியர்கள், மலர் விற்பனையாளர்கள், உணவு வழங்கும் நிறுவனங்கள், டிராவல் ஏஜென்ட், இசை கலைஞர்களுக்கும் வலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

துருக்கியில் வரும் நாட்களில் 50 திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 30 திருமணங்கள் தொடர்பான பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பலரும் துருக்கிற்கு பதில் நம் நாட்டில் ராஜஸ்தான், கோவா, கேரளா, உதய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் வைத்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது. இது துருக்கிக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் துருக்கியில் நடக்கும் இந்தியர்களின் திருமணத்தால் அந்த நாட்டுக்கு ரூ.1,170 கோடி வரை வருமானம் கிடைக்கும். தற்போது அந்த வருமானம் பெருமளவில் பாதிக்கப்படும்” என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...