No menu items!

திருப்பதி லட்டுவில் புகையிலை – புதிய சர்ச்சை

திருப்பதி லட்டுவில் புகையிலை – புதிய சர்ச்சை

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுவில் புகையிலை இருந்ததாக பக்தர் ஒருவர் புகார் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி ஏழுமாலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த லட்டுவில் நெய்யுடன் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலக்கப்பட்ட்தாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு சில நாட்களுக்கு முன் கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து லட்டுவை ஆய்வு செய்ததில், அவர் கூறியது உண்மை என்று தெரியவந்தது.

லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்ததால் ஏற்பட்ட தீட்டை கழிக்க, திருப்பதி கோயிலில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் இப்போது புதிதாக திருப்பதி லட்டுவில் புகையிலை கிடந்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கம்மம் மாவட்டம் – கார்த்திகேயா டவுன்ஷிப்பை சேர்ந்த பத்மாவதி, கடந்த 19-ம் தேதி திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். வீடு திரும்பும் போது அங்கிருந்து பிரசாதமாக லட்டு வாங்கி வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் அக்கம் பக்கத்தினருக்கு லட்டுவைப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளார். அப்போது அதில் வித்தியாசமான வாசம் வந்துள்ளது. தொடர்ந்து அதை உடைத்து பார்த்தபோது, லட்டுவுக்குள் ஒரு காகிதத்தில் புகையிலை சுருட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி அவர் புகார் அளித்துள்ளார்.

லட்டுவில் புகையிலை கிடந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பத்மாவதி, “திருப்பதியில் இருந்து லட்டுவை வாங்கிவந்த நான், அதை விநியோகிப்பதற்காக பிரித்தேன். அப்போது அதற்குள் ஒரு சிறு காகிதத்தில் புகையிலை சுருட்டாப்பட்டு கிடந்தது. அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். புனிதமான லட்டுவுக்குள் புகையிலை கிடந்தது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.

லட்டுவில் புகையிலை கிடந்ததாக எழுந்துள்ள புகார் திருப்பதி கோயில் பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும், திருப்பதி கோயில் நிர்வாகம் லட்டு தயாரிப்பு பணியில் செலுத்தும் தரம் சார்ந்த நடவடிக்கை குறித்த கேள்வியையும் இது எழுப்பி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...