சூர்யாவின் சினிமா பயணத்தில் மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘கங்குவா’.
இதன் பட்ஜெட் சுமார் 150 வரை இருக்கலாம் என்கிறார்கள்.
சூர்யாவின் சம்பளம் 30 கோடி என்றும், பட்ஜெட் 100 என்றும் படம் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
ஆனால் இதன் பட்ஜெட் எகிறியது எப்படி?
சிறுத்தை சிவா படமெடுக்க ஆரம்பித்ததுமே, இப்படம் பற்றிய பேச்சு அதிகம் அடிப்பட ஆரம்பித்தது. அராதர், வெங்கடேர், மந்தான்கர், முகாதர், பெருமனந்தர் என சூர்யாவுக்கு 5 கதாபாத்திரங்கள். 10 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படி பல விதமான செய்திகள் வெளிவரவே, ஒடிடி-யில் வியாபாரம் பேச முன்வந்தன சில ஓடிடி தளங்கள்.
இறுதியில் அமேசான் ப்ரைம் அதன் ஒடிடி ‘கங்குவா’ படத்தின் ஒடிடி உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. இதன் ஒடிடி மதிப்பு மட்டும் சுமார் 80 கோடிக்கு விலைக்கு போயிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
பத்து மொழிகளுக்கான உரிமையை சேர்ந்து வாங்கியிருப்பதால், இந்தளவிற்கு விலை போயிருப்பதாகவும் தெரிகிறது. இதனால் திட்டமிட்ட பட்ஜெட்டில் பாதி கையில் வந்துவிடவே, மிக தைரியமாக பட்ஜெட்டை அதிகரித்து இருக்கிறார்கள்.
இருந்தாலும் 70 – 80 கோடி பட்ஜெட்டில் படமெடுப்பது என்பது இன்றைய சூழலில் பெரும் சவால் என்பதால்தான், இதுவரையில் சூர்யா வேறெந்த படத்திலும் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். ’கங்குவா’ வெளியான பிறகே அடுத்தப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
‘கங்குவா’ பெரும் வெற்றி பெற்றால், ஹிந்தியில் நன்றாக ஓடினால், இனி சூர்யாவின் கவனம் ஹிந்தியிலும் அதிகமாகுமாம். இப்பொழுது ஹிந்தியில் இணைத்தயாரிப்பாளராகவும் சூர்யா களமிறங்கி இருக்கிறார்.
இதனால் சூர்யாவின் சினிமா பயணத்தில் ‘கங்குவா’ ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என சூர்யா தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.