No menu items!

டிஜிட்டல் வணிகத்தில் தமிழகம் 3-வது இடம்!

டிஜிட்டல் வணிகத்தில் தமிழகம் 3-வது இடம்!

இந்திய அளவில் டிஜிட்டல் வணிகத்தில் தமிழகம் 3-வது பெரிய அடித்தளம் கொண்ட மாநிலம் ஆகும். மேலும் இந்தியாவில் மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் டிஜிட்டல் வணிகம் மக்களின் பொருளாதார வளர்ச்சியிலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலோட்டமாக பார்த்தால் இது எளிதாக செயல் என்று தோன்றலாம். ஆனால் இது ஒரு சிக்கலான வேலை ஆகும்.

வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குவதால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மேலும் எந்திரங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவையும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அந்த எந்திரங்கள், தொழில்நுட்பங்களை உருவாக்குவோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இப்படி ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு உள்ளது.

நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவின் கடைகோடி பகுதிகளுக்கும் இந்த டிஜிட்டல் வணிகம் சென்றடைந்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது..சுமார் 6 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் வணிகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் 25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இந்த டிஜிட்டல்வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

நகர்ப்புறம்-தொலைதூர பகுதிகளுக்கு வேலைவாய்ப்பை ஊக்குவித்தல்

சில்லரை வணிகம், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்சாதன பொருட்கள், சரக்கு வர்த்தகம், தொழில்நுட்பம் வாடிக்கையாளர் சேவை, சந்தைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த டிஜிட்டல் வணிகம் வெற்றி அடைந்துள்ளது, ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி டிஜிட்டல் வணிகம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி வருகிறது.

பொருட்களின் தரம், எளிய முறையில் பணம் செலுத்துதல், அவர்களின் வசதிக்கேற்ப பொருட்களை வாங்குதல், பாதுகாப்பு மற்றும் விரைவாகவும், குறித்த நேரத்திலும் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்தல், விற்பனைக்கு பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல் ஆகிய காரணிகள் மூலம் டிஜிட்டல் வணிகம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பிளிப்கார்ட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி மிக விரைவாக பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்திட பிளிப்கார்ட் தளத்தில் ‘பிளிப்கார்ட் மினிட்ஸ்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்களின் வேகமான வாழ்க்கை முறையில் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக பிளிப்கார்ட்டின் மினிட்ஸ் திட்டம் அமைந்திருப்பதாக பலரும் அங்கீகரித்துள்ளனர். பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், பலருக்கு வேலைவாய்ப்பையும், சிறு நிறுவனங்களுக்கு உறுதுணையாகவும் இந்த திட்டம் உள்ளது. மேலும் இந்த திட்டம் பிளிப்கார்ட்டில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வீட்டு வருமானத்தை உயர்த்தவும், அவர்களின் வாழ்க்கை தரம் உயரவும், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையவும் உறுதுணையாக இருக்கிறது.

ற்போது விரைவு வணிகம் மூலம் பிளிப்கார்ட்டில் 3.25 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.. அவர்கள் குடோன்களிலும், பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 10 மற்றும் 12-ம் படித்தவர்களுக்கு, அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டில் 5 முதல் 5.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சியில் பிளிப்கார்ட் ஈடுபட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு அதிநவீன செல்போன்களை பயன்படுத்தவும், டிஜிட்டல் கல்வி அறிவும், பொருட்களை விரைவாக கொண்டு சேர்ப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை டீம்லீஸ் அமைப்பு சேகரித்து கொடுத்துள்ளது.

மேலும் இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் டிஜிட்டல் வணிகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி கணக்கில் அடங்காத வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. சரக்கு வர்த்தகம், பொருட்களை கொண்டு சேர்க்கும் நபர்களுக்கும், குடோனில் பணியாற்றுவோருக்கும் என பெரிய அளவில் வேலைவாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்க்கத்தினருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். தனிநபரால் நடத்தப்படும் சிறு நிறுவனம் கூட பிளிப்கார்ட்டுடன் இணைந்து போதுமான மூலதனம், தொழிநுட்பம், சந்தை ஆகியவற்றை பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்மூலம் அவர்களுக்கும், உலக சந்தைக்கும் இடையே பிளிப்கார்ட் பாலமாக விளங்குகிறது.

மக்கள் வளர்ச்சியில் டிஜிட்டல் வணிகம்

மக்களின் பொருளாதாரத்தை செம்மைப்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டிஜிட்டல் வணிகம் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயிகள், நெசவாளர்கள், கைவினைஞர்கள்உள்பட பல்வேறு பிரிவு மக்களுடன் இந்த டிஜிட்டல் வணிகம் கைகோர்த்து அவர்களை ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் பிளிப்கார்ட் பெரிய அளவிலான சங்கிலித்தொடர் இணைப்பை உருவாக்கி, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்து பொருளாதார செயல்பாடுகள், வேலைவாய்ப்பு ஆகியவற்ரை வழங்கி, பெரிய தொழில் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. சென்னை முதல் கோயம்புத்தூர் வரை பிளிப்கார்ட் நிறுவனம் பெரிய அளவில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அதன் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை கொண்டு வந்துள்ளது. சரக்கு வர்த்தக நிறுவனங்கள், பார்சல் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட பலருக்கும் வேலைவாய்ப்பையும், அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் பிளிப்கார்ட் நிறுவனம் உயர்த்தி உள்ளது.

அவர்களின் வளர்ச்சி மற்றும் அதற்கான பொறுப்பை ஒருங்கிணைத்து பிளிப்கார்ட் நிறுவனம் கையில் சேர்க்கிறது. அந்த வகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்காக ‘விவித்தா’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கி அவர்களுக்கு உதவவும், அவர்களது வாழ்க்கை தரம் உயரவும் பிளிப்கார்ட் சிறந்த பணியை செய்து வருகிறது. கோயம்புத்தூரில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் காய்கறி உள்ளிட்ட பல்பொருள் அங்காடியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உணவு, போக்குவரத்து வசதி ஆகியவற்றை வழங்கி வருகிறது.

மேலும் ‘சமர்த் கிருஷி’ நிகழ்ச்சி மூலம் திறன் மேம்பாடு, அறிவு பகிர்தல், பயிற்சி அளித்தல், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை ஊக்குவித்தல், விவசாய உற்பத்தி அமைப்பு தொடங்கி அதன்மூலம் விவசாயிகள் தரமான பொருட்களை உற்பத்தி செய்திட ஊக்குவித்தல், உணவு பாதுகாப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் பிளிப்கார்ட நிறுவனம் தமிழகம் முழுவதும் செய்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று பலரும் டிஜிட்டல் வணிகம் மூலம் பயனடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.

மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய ஊக்குவித்தல்

இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களிடம் உள்ள திறமைகளை வைத்து வீட்டு வருமானத்தை உயர்த்திட இந்த டிஜிட்டல் வணிகம் வழிவகுக்கிறது. இதன்மூலம் அவர்களது திறமை, தொழிலாக மாறி வருமான ஈட்டுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி சொந்தக்காலில் நிற்க உதவுகிறது. அவர்கள் தாங்கள் வாழும் இடத்தில் இருந்தே முன்னேற வழிவகுக்கிறது. அவர்களைக் கண்டு அதுபோல் பலரும் இந்த டிஜிட்டல் வணிகத்தில் இணைய ஊக்குவிக்கிறது. இதன்மூலம் சாதாரண மக்கள் முன்னேறுவது மட்டுமல்லாமல்
இந்த சமூகமும் வளர்ச்சி அடையும்.

திருப்பூரைச் சேர்ந்த பாலாஜி மனோகரன் என்பவருக்கு சொந்தமான போலோ டிரன்ட்ஸ் என்ற ஆயத்த ஆடை நிறுவனம் தற்போது இந்திய அளவில் பிரபலம் அடைந்துள்ளது. அவர் எந்தவித பின்புலமும் இல்லாமல் இந்த தொழிலை டிஜிட்டல் வணிகத்தில் தொடங்கினார். தற்போது அவர் தினமும் 600 முதல் 700 ஆர்டர்கள் வரை செய்து கொடுக்கிறார். அவரது நிறுவனம் தற்போது 25 ஆயிரம் ஆடைகளை இருப்பு வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. பண்டிகை காலங்களில் தனக்கு தினமும் 10 ஆயிரம் ஆர்டர்கள் வருவதாக பாலாஜி மனோகரன் பெருமிதத்துடன் கூறுகிறார்.

பிளிப்கார்ட் செயலியை தமிழிலும் வாடிக்கையாளர்கள் பார்த்து பயன்படுத்தலாம். அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பெரிய அளவில் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட பிளிப்கார்ட் நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கை, மரியாதை கொண்டுள்ளனர். இதன்மூலம் பிளிப்கார்ட்டுடனான அவர்களது தொடர்பு பிணைக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...