தமிழ் சினிமாவில் 100 படங்களுக்குமேல் இயக்கிய இயக்குனர்களாக கே.பாலசந்தர், ராம. நாராயணன் போன்ற சிலரே கொண்டாடப்படுகிறார்கள். இதில் ராம.நாராயணன் 125 படங்களை இயக்கி முதலிடத்தில் இருக்கிறார். பாலசந்தர் இயக்கிய, கடைசி படம் பொய். அது அவரின் 100 வது படம். அதேசமயம், தமிழில் 100க்கும் அதிகமான படங்களை தயாரித்த நிறுவனங்கள் குறைவு.
ஏவி.எம் நிறுவனம் 175 படங்களை தயாரித்துள்ளது. மார்டன் தியேட்டர் 100க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளது. படம் தயாரிப்பது ரிஸ்கான வேலை என்பதால், பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக இயங்க முடிவதில்லை. சில தோல்விகள் வரும்போது கடையை மூடிவிட்டு சென்று விடுகிறார்கள். அதனால்,ஒரு நிறுவனம் 100 படங்களை தயாரிப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது.
இப்போது சூப்பர் குட் நிறுவனம் தனது 98வது படத்தை வரும் ஜூலை மாதம் வெளியிட உள்ளது. மாரீசன் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பகத்பாசில், வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். மாமன்னன் படத்துக்குபின் வடிவேலு, பகத்பாசில் கூட்டணியில் இதில் இணைந்துள்ளது. வடிவேலு இருப்பதால் இது காமெடி படம் அல்ல. படத்தின் போஸ்டரில் வடிவேலு ரத்த காயங்களுடன் காட்சி தருகிறார். அதேசமயம், தனது 99 படத்தை சூப்பர் குட் தயாரித்து வருவதாகவும் தகவல். அது குறித்த அறிவிப்பு விரைவில் வர உள்ளது. சரி, சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படம் எது? இயக்குனர் யார் என்று விசாரித்தால் ‘‘சூப்பர் குட் நிறுவனம் 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் அவர்களின் முதல் படம். சூப்பர் டூப்பர் ஹிட். அதை தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பல வெற்றி படங்களை ஆர்.பி.சவுத்ரி தயாரித்தார். சின்ன பட்ஜெட், நல்ல கதை, புதுமுக இயக்குனர் என்பது அவரின் பாலிசியாக இருந்தது. சூப்பர்ஹிட் படங்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. ஆனால், இப்போதைய சினிமா நிலவரம், நடிகர்களின் சம்பளம் காரணமாக அவர்கள் இப்போது படங்களை தயாரிப்பதை குறைத்துவிட்டார்கள். ஆனாலும், 100வது படத்தை பிரமாண்டமாக எடுக்க வேண்டும். பெரிய ஹீரோவை வைத்து உருவாக்க வேண்டும் என்பது தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, அவரின் வாரிசுகள் கனவாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்குமுன்பு சூப்பர் குட் நிறுவனம் தனது 100வது படத்தில் விஜயை நடிக்க வைக்க அவர்கள் விரும்பியது.