தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக தயாராகும் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போகும் போது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும்.
சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இப்படத்திற்கு அதிகப்படியான நெகடிவ் விமர்சனங்கள் வர காரணம் அதன் திரைக்கதை மற்றும் இசை தான். இசை மிகவும் இறைச்சலாக உள்ளதாகவும், உப்பு சப்பு இல்லாத திரைக்கதையும் தான் கங்குவா படத்தின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் கங்குவா படம் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், அப்படத்தை போல் தன்னிடம் மேலும் 6 கதைகள் இருப்பதாக இயக்குனர் சிறுத்தை சிவா பேட்டி ஒன்றில் பேசி உள்ளது மிகவும் வைரலாகி வருகிறது.
“சினிமாவில் எனக்கு இரண்டு விஷயம் உடன்பாடு இல்லை. ஒன்று எனக்கு கம்பேரிசன் பிடிக்காது. மற்றொன்று எனக்கி அழுத்தம் கொடுத்தால் பிடிக்காது. வாழ்க்கையில் நான் எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவேன். என்னோட நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேறி இருக்கிறது. என்னுடைய கெரியரில் எனக்கு ரொம்ப பிடிச்ச ஜனரஞ்சகமான திரைப்படங்களை நான் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்கிறேன். அதுவும் வெற்றிப்படங்களாக அமைகிறது.
தற்போது எனக்கு பெரிய பட்ஜெட் படங்கள் பண்ண வேண்டும் என ஆசை வந்திருக்கிறது. அதனால் கங்குவா பண்ணி உள்ளேன். நாளை எனக்கி சயின்ஸ் பிக்சன் படம் பண்ணனும்னு ஆசை இருந்தால் அதையும் பண்ணுவேன். என்னை பொறுத்தவரை ஒரு டைரக்டருக்கு ஒரு ஜானர் தான் என பிக்ஸ் பண்ண முடியாது. இதுவரை ஜனரஞ்சகமா படம் எடுத்து அதை வெற்றிகரமாக பண்ணினேன். இப்போ பீரியட் பிலிம் பண்ணிருக்கேன். ஒரு இயக்குனராக எனக்கு எல்லா ஜானரும் பண்ண முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகமா இருக்கு.