No menu items!

அதிர்ச்சி தரும் தங்கம் விலை

அதிர்ச்சி தரும் தங்கம் விலை

தங்கம் விலை இன்று  ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.81.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்​தது. குறிப்​பாக, அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபாய் மதிப்பு சரிவு உள்​ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை மேலும் உயர்ந்​து, நாள்​தோறும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது.

அந்த வகை​யில், கடந்த 6-ம் தேதி பவுன் தங்​கம் ரூ.80 ஆயிரத்தை தாண்​டி, வரலாறு காணாத புதிய உச்​சத்தை அடைந்​தது. அதன் பின்னரும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்​சி​யாக, சென்​னை​யில் இன்று ஆபரணத் தங்​கத்​தின் விலை மேலும் உயர்ந்​து, மீண்​டும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது.

அதன்படி சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கும் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூரூ. 81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.142-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,42,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...