’புஷ்பா’ என்ற ஒரேயொரு படம்தான். தெலுங்குப் படமாக வெளியானாலும் இதன் ஹிந்தி, தமிழ், மலையாளம் டப்பிங், அந்தந்த மொழிகளின் நேரடிப்படங்களை விட வசூலில் பல கோடிகளை லாபமாக அள்ள, அல்லு அர்ஜூனின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு போயிருக்கிறது.
இதைப் புரிந்து கொண்ட இயக்குநர் சுகுமாரன், ‘புஷ்பா 2’ வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். தயாரிப்பு நிறுவனமும் ’புஷ்பா 2’-க்கு எதிர்பார்ப்பு இருக்குமென்பதால், பட்ஜெட் விஷயத்தில் தாராளம் காட்டி வருகிறது.
பெரும் லாபம் கிடைக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதியாக நம்புவதால், சம்பள விஷயத்திலும் கெடுபிடி இல்லாமல் அள்ளி இறைத்து வருகிறதாம். இதுதான் இப்போது டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் பல முன்னணி நடிகர்களுக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருக்கிறதாம்.
அதாவது ‘புஷ்பா 2’ திரையரங்கு, ஒடிடி, சேட்டிலைட், ட்ப்பிங், ஆடியோ உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய படத்தின் ரிலீஸூக்கு முன்பான வியாபாரத்தில் கிடைக்கும் தொகையில் 33% அல்லு அர்ஜூனுக்கு கொடுக்கப்படுமாம்.
இந்த வியாபாரம் சுமார் 500 கோடி வரை போகும் என்றால் குறைந்தப்பட்சம் 165 கோடி, அதுவே 1000 கோடியை எட்டினால் சுமார் 330 கோடி அல்லு அர்ஜூனுக்கு கிடைக்கும்.
இங்கே சம்பள விஷயத்தில் கெத்து காட்டும் ரஜினிகாந்த் ஜெயிலருக்கு 210 கோடி சம்பளம் வாங்கினார் என்று கூறப்படுகிறது. பான் – இந்தியா ரிலீஸ் என்ற அடிப்படையில் மார்க்கெட் இருக்கும் ஷாரூக்கான், சல்மான் கான், பிரபாஸ் போன்ற நடிகர்கள், பிற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்கும் போது 150 கோடி முதல் 200 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்கள்.
இதனால் அல்லு அர்ஜூன் இந்த எல்லா மெகா ஸ்டார்களையும் ஒரே படத்தில் பின்னுக்குத் தள்ளிவிடுவார் என்று கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் கணக்குப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.