No menu items!

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

சிவகங்கை அரசு பொது நல மருத்​து​வர் அ.ப.பரூக் அப்​துல்லா கூறிய​தாவது: முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

எனவே குளிர்ந்த தரை​யில், பாய், தலை​யணை உள்​ளிட்ட விரிப்பு இல்​லாமல் படுப்​ப​தை​யும், ஒரு பக்க கன்​னத்தை நேரடி​யாக குளிர்ந்த தரை​யில் வைத்​துப் படுப்​ப​தை​யும் முதியவர்கள் தவிர்க்க வேண்​டும்.

நேரடி​யாக முகத்தை தரை​யில் வைத்து படுப்​ப​தன் வாயி​லாக, முக நரம்பு அழுத்​தப்​பட்டு முக​வாதம் ஏற்பட வாய்ப்பு உள்​ளது. அதேபோல் கார், பேருந்​து, ரயில் பயணங்​களில் அதிக நேரம் குளிர்ந்த காற்று காது, கன்​னத்​தில் படு​மாறு பயணித்​தா​லும், முக​வாதத்தை ஏற்​படுத்​தும்.

‘ஏசி’ பயன்​பா​டாக இருந்​தா​லும் நேரடி​யாக குளிர்ந்த காற்று முகத்​தில் படா​மல் பார்த்​துக்​கொள்ள வேண்​டும்.இப்​பா​திப்​பில் கண்​கள் திறந்தே இருக்​கும் என்​ப​தால், வறண்டு விடா​மல் இருக்க சொட்டு மருந்து பயன்​படுத்​தலாம்.

மேலும் பகலில் கண்​ணாடி​யும், இரவில் மூடு கவச​மும் அணி​ய​லாம். திரவ, திட உணவாக இல்​லாமல், கரைத்த கஞ்​சி​யாக உட்​கொள்​ளலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...