No menu items!

சீரியல் நடிகை விடியோ

சீரியல் நடிகை விடியோ

அராத்து

ஒரு குழந்தையை குரூரமாகக் கொல்லும் விடியோ என்றாலும் எழுத்தாளர்கள் பார்க்கத்தான் வேண்டும். சமூகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாமல், அல்லி மலரையும், பட்டாம்பூச்சியையும், காதோரம் ஆடும் லோலாக்கையும் , எளிய மக்களின் கள்ளமில்லா அன்பையும் , நீதானடி என் உயிர்க்கூட்டு தேவதை போன்றவைகளையும் எழுதி பஜனை செய்துகொண்டிருந்த காலம் போய்விட்டது. ஒரு மருத்துவர் பிரேத பரிசோதனை செய்வதைப் போலத்தான் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அனைத்து கொடூரங்களையும் எழுத்தாளர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு வகையில் போஸ்ட்மார்ட்டம் ஆஃப் தி சொசைட்டி.

இப்போது சமூகத்தில் பல பேரலல் (parallel) சமூகங்கள் உருவாகி விட்டன. விதம் விதமான கம்யூனிட்டிகள் உருவாகி ரகசியமாக செயல்படுகின்றன. இவையெல்லாம் எங்கோ டெல்லி, மும்பை, சென்னை போன்ற மாநகரங்களில் என்று நினைக்க வேண்டாம். சின்ன டவுன்கள் முதற்கொண்டு ஆட்கள் இதில் இருக்கிறார்கள்.

பாலிக்யூல் என்பது அதில் ஒரு கம்யூனிட்டி (விரிவாக புருஷன் – 2 இல்) .

இந்த சீரியல் நடிகை சம்மந்தப்பட்ட விடியோ மிக மிக சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம். இது ஜஸ்ட் இன்னுமொரு ஸ்கேண்டல் அல்ல. இது ஜஸ்ட் மற்றுமொரு பார்ன் மட்டுமல்ல. சைக்காலஜிக்கலாக விசித்திரமாக இருக்கிறது. டிரக் ஆ அல்லது வேறு ஏதேனும் கற்பனை செய்யமுடியாத அளவுக்கான ராக்கெட்டா என்றெல்லாம் பல அனுமானங்கள் எனக்குத் தோன்றினாலும், தனிப்பட்ட நடிகை சம்மந்தப்பட்டிருப்பதால் அதை எல்லாம் சொல்லாமல் தவிர்க்கிறேன். அதே போல அன் யூஷுவலான விஷயங்கள் அனைத்தையும் தவிர்க்கிறேன்.

ஆனால் ஒன்று சொல்ல முடியும். வேறு எங்குமே இல்லாத அளவுக்கு இன் செக்யூரிட்டி நிலவும் துறை சினிமா, டிவி மற்றும் மாடலிங் துறை. வெளியே தன்னம்பிக்கையாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளே பூஞ்சையாக, எளிதில் உடைந்து விடக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்தத்துறை அப்படி மாற்றி விடும். ரஜினி மற்றும் கமலுக்கே இன்னும் இன் செக்யூரிட்டி இருக்கிறதென்றால் மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம்?

அதே போல இந்தத்துறைகளில் இப்போது நடந்துகொண்டிருப்பது தொழிலோ , வியாபாரமோ அல்ல. கேம்ப்ளிங் என்று கூட சொல்ல முடியாது. அதையெல்லாம் தாண்டி எந்த லாஜிக்கும் இல்லாமல் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. சினிமாவுக்கு சம்மந்தம் இல்லாத யார் யாரோ இன்வால்வ் ஆகியிருக்கிறார்கள். கற்பனையே செய்ய முடியாத பெரும் பணம் புழங்குகிறது. ஒரு இருட்டு அறையில் 20-30 பேர் அமர்ந்துகொண்டு சிவக்கணத்தில் இருப்பதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம்.

இதையெல்லாம் தாண்டி , எக்ஸ்க்ளூஸிவ் போர்னோகிராஃபி, ஹை ப்ரொஃபைல் ப்ராஸ்டிட்டியூஷன் , பொலிட்டிக்கல் லாபி, இன்னும் இன்னும் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்கள் நடக்கக்கூடும். பொது சமூகத்திடம் இருக்கும் பணத்துக்கு சம்மந்தமே இல்லாத அளவுக்கு பெரும் பணம் கொட்டினால், அதை வைத்திருப்பவர்களுக்கு ஹேண்டில் செய்வது சிரமம். அப்படி திடீரென சிலரிடம் பெரும் பணம் கொட்டினால் கற்பனைக்கு எட்டாத புதுப்புது பழக்கங்கள், புதுப்புது க்ரைம்கள் உருவாகும்.

இதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, இதை ஒரு ஸ்கேண்டல் போலவோ, போர்னோ கிராஃபி போலவோ அலட்சியப்படுத்தி விட்டுக் கடக்காமல், தானாகவே வழக்கு பதிவு செய்து, உரிய சைக்யாட்ரிஸ்ட் உதவியுடன் நிதானமாக விசாரிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் வேறு ஏதோ ஆழமான விசித்திரமான பிரச்சனை இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...