No menu items!

பூமியில் விழும் செயற்கைக் கோள்கள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பூமியில் விழும் செயற்கைக் கோள்கள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

விண்வெளியில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையால், விண்வெளிக் குப்பைகளும் அதிகரிக்கின்றன. தற்போது, நாள்தோறும் ஸ்டார்லிங்கின் ஒன்று அல்லது இரண்டு செயற்கைக் கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன.

விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரும் காலங்களில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வரும் ஆண்டுகளில் ஸ்பேஸ்எக்ஸ், அமேசானின் குய்பெர், சீன அமைப்புகளினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இதுகுறித்து, வான் இயற்பியல் நிபுணர் ஜோனதன் மெக்டோவல் கூறுகையில், ஏற்கெனவே மேலே 8,000 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் இருக்கின்றன. அனைத்துமே பயன்படுத்தப்படுவதால், பூமியின் சுற்றுப் பாதையில் 30,000 மற்றும் சீன அமைப்புகளினால் 20,000 என நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயலிழந்த செயற்கைக் கோள்கள், ராக்கெட் பாகங்கள் மற்றும் பிற குப்பைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அது பூமியை கெஸ்லர் சின்ட்ரோம் பாதிப்புக்கு உள்ளாக்கும். விண்வெளியில் உள்ள குப்பைகள் ஒன்றோடு மோதிக் கொண்டு, அது மேலும் குப்பைகளை உருவாக்கி, செயற்கைக் கோள் மற்றும் விண்வெளி பயணத்துக்கே அச்சுறுத்தலாக அமையும்.

ஸ்டார்லிங்க் நெட்வொர்க், உலகளாவிய இணைப்பில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தாலும், அதன் விரைவான வளர்ச்சியோ விரிவாக்கமோ பூமியின் சுற்றுப் பாதையில் நெரிசலை அதிகரிக்கிறது.

வரும் ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான செயற்கைக் கோள்கள் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விண்வெளி போக்குவரத்து மற்றும் குப்பைகளை நிர்வகிப்பது என்பது சவாலாக மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...