No menu items!

இந்து கோயில்களில் சாய்பாபா சிலையா? கிளம்பும் எதிர்ப்பு!

இந்து கோயில்களில் சாய்பாபா சிலையா? கிளம்பும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களில் பலரும் வணங்கும் மகான்களில் ஒருவர் சாய்பாபா. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் சாய்பாபாவுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

தனிக் கோயில்கள் மட்டுமின்றி, சமீப காலங்களில் கட்டப்பட்ட சில இந்துக் கோயில்களிலும் சாய்பாபாவுக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் கோயில்களில் சாய்பாபாவின் சன்னதிகளை அமைக்க எதிர்ப்பு எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் இந்துக் கோயில்களில் இருந்து சாய்பாபாவின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சாயிபாபாவின் பெற்றோரைப் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் இருக்கிறது. அதாவது அவரது தந்தை ஒரு ஏழை முதியவர் அல்லது புனித தந்தை அல்லது துறவி தந்தை என்கிறார்கள். சாயிபாபாவின் உண்மையான பெயர் கூட தெரியவில்லை. அவரை இஸ்லாம் சமயத்தவர்கள் பலரும் பின்பற்றும் நிலையில், அவரது மத அடையாளம் குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

சாயிபாபா அடிக்கடி பாரசீக வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். சாய்பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளில் அல்லாஹ், மற்றும் குரானைப் பற்றி பேசுகிறார். ‘நம்மிடம் இருப்பதில் திருப்தியடைவோம், நம் விருப்பத்தை அல்லாஹ்விடம் சமர்ப்பிப்போம் (அல்லாஹ் ரக்கேகா வையா ரஹேனா)’ என்ற சொற்றொடரை சாய்பாபா அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். அவரே சில சமயங்களில் இந்துக் கடவுள்களைப் பற்றியும் பேசுகிறார்.

சாய்பாபா வழிபாடு இந்து மதத்தில் மட்டும் இல்லை என்பதால், அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை இந்து சமய அறநிலையத்துறை துறையினர் நிர்வகிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
ஷீரடி சாய்பாபாவின் சிலைகள் இந்து கோவில்களில் தாராளமாக நிறுவப்படுகின்றன. அவர் இஸ்லாம் மற்றும் இந்து மதம் இரண்டையும் போதித்த நபராக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் ஷீரடி சாய்பாபாவின் வெள்ளை பளிங்கு சிலைகள் இந்து மதத் தளங்களில் இருக்கிறது. மேலும், இது ஆகமங்களுக்கு எதிராக நந்திக்கு அருகில் நிறுவப்படுகிறது.

இந்து கோவில்களில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலைகளை அகற்றவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிலைகள் இந்த கோவில்களில் நிறுவப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை துறையிடம் இருந்து மட்டும் இரண்டு வாரங்களுக்குள் அறிவுறுத்தல்களைப் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...