ரஜினிகாந்த தற்போது வேட்டையன், கூலி ஆகியு படங்களில் நடித்து வருகிறார். வேட்டையன் முடிவந்திருகிறது. கூலி படப்பிடிப்பு நடந்து வருகிறது. கூலியில் ரஜினிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் நெகடிவ் பாத்திரம் ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் தங்கம் கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்க அவர் எடுக்கும் அவதராம்தான் கூலி. பல காவல்துறை அதிகாரிகளின் கண்களுக்கு சிக்காமல் இருக்கும் கடத்தல்காரன் யார் என்று தெரிய வரும்போது தியேட்டரே அதகளப்படும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடிப்பதாக இருந்த படம் ராணா. பிரமாண்டமாக பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தில் தீபிகா படுகோனே நடிக்க இருந்தார். கே.எஸ்.ரகுமார் இயக்கத்தில் வருவதாக இருந்தது. ரஜினிக்கு திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்து விட்டன. எப்போதாவது ரவிகுமாரை சந்திக்கும் போது ரஜினி ராணா கதை பற்றி பேசுவதுண்டு. அந்த அளவுக்கு ராணா கதை ரஜினிக்கு பிடித்திருந்தது. அந்தப்படம் தொடங்கும்போது பூஜை அன்று ரஜினி சினிமாவில் தனக்கு ஒவ்வொரு கட்டத்திலும் உதவியாக இருந்த பலரையும் அழைக்க வேண்டும் என்று விரும்பினார். கே.பாலசந்தர், பஞ்சு அருணாச்சல்ம், ஆர்.சி,சக்தி கே.ஆர்.ஜி., வாலி என்று பலரையும் மேடையில் அமர வைத்தார்., தனக்கு ராணா என்ற வரலாற்றுப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் அவர் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். முதல் நாள் பூஜையில் ரஜினி தேங்காய் உடைப்பது போன்ற காட்சியை எடுத்து விட்டு ரஜினியை அனுப்பி வைத்தார் கே.எஸ்.ரவிகுமார். ரஜினி சென்ற பிறகு ரஜினிக்கு பிறகு டூப் வைத்து புளு மேட் தொழில்நுட்பத்தில் பாடல் காட்சியை படமாக்கினார். அதில் தீபிகா படுகோனேவை நடிக்க வைத்தார். இப்படியாக முதல் பாடல் காட்சி இப்போதும் தயாராக இருக்கிறது.
பாகுபலி என்ற படம் வருவதற்கு முன் தயாரான இந்தப்படம் வந்திருந்தால் சினிமாவில் வந்த அதிக டெக்னாலஜியுடன்ன் வந்த வரலாற்றுப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும். படம் கைவிடப்பட்டபிறகு இதில் பணியாற்ற இருந்த சி.ஜி. பணியாளர்கள் பலரும் ராஜமவுலியின் பாகுபலி படத்தில் பணியாற்ற சென்று விட்டனர். படத்தில் ராணா சேனா என்ற கேரக்டரில் ரஜினி நடிக்க இருந்தார். அவரது அப்பா கதாபாத்திரமாக கோச்சடையான் என்ற பாத்திரத்தை வைத்துத்தான் அனிமேஷன் படம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நாள் ரவிகுமார் ரஜினியை சந்தித்துப் பேசியிருக்க்றார். அப்போது ரஜினி ராணா திரைப்படம் பற்றி பேசி அந்த கதையை எனக்கு மறுபடியும் சொல்லுங்களேன் என்று கேட்க, ரவிகுமார் மறுநாள் ஸ்கிரிப்டுடன் சென்று கதையை சொல்லியிருக்கிறார்.
கதையில் மயங்கிபோனன்ரஜினி இந்த கதையில் நான் இனிமேல் நடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இதை அப்படியே விடவும் மனமில்லை. வேறு இளம் நடிகர்களை வைத்து நீங்களே இயக்குங்கள் கதையில் சிறிய மாற்றம் செய்து நானும் அதில் பங்கேற்கிறேன் என்று கூறியிருப்பதாக தெரிகிறது. அதனால் ராணா பேச்சு மீண்டும் சூடு பிடித்திருக்கிறது என்கிறார்கள்.
ராணா மீண்டும் வந்தால் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.