ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தின் கெட்டப் எப்படியிருக்கலாம் என்பது பற்றி ரஜினி சமீபத்தில் ஒரு டிஸ்கசன் நடத்தியிருக்கிறார்.
அதில் புதிய விக், கருப்பு, வேட்டி சட்டை கழுத்தில் துளசி மாலை என்று புகைப்படங்களை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகைப்படங்களை லோகேஷ் இணைய தளத்தில் பதிவிட்டார். இதைப்பார்த்த ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால் இது கிட்டதட்ட காலா படத்தின் கெட்டப் போலவே இருப்பதாக ரசிகர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். உண்மையில் இது கூலி படத்திற்கான கெட்டப் இல்லை என்றும் அப்படி எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இதை ரசிகர்களுக்கு காண்பித்தால் என்ன என்றுதான் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். கூலியின் நிஜமான கெட்டப் இன்னும் அதிரடியாக இருக்கும் என்கிறார்கள்.
கூலி படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜெய்லர் 2 ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நெல்சன் ரஜினிக்கு சொன்ன கதை திருப்தியாக இருந்ததால் அதற்கான பணிகளை தொடங்குமாறு சொல்லியிருக்கிறார். இதனால் ரசிகர்களுக்கு ஜெய்லர் டபுள் ட்ரீட்டாக அமைய இருக்கிறது, இந்த படத்தில் பாலிவுட் தெலுங்கு கன்னட மலையாள திரையுலகிலிருந்து முதல் பாகத்தில் நடிக்காதவர்களை இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக அவ்வப்போது ரஜினியை சந்தித்து நெல்சன் ஆலோசனை செய்து வருகிறார்.
ரஜினி வாழ்க்கையில் இதுவரைக்கும் சினிமாவிற்கென்று சில கொள்கைகளை கடைபிடித்து வந்திருக்கிறார்;. அதில் ஒன்று இரண்டாம் பாகம் எடுத்தால் நடிப்பதில்லை என்பது. அதே போல இன்னொரு பாலிஸி மொழி மாற்று படங்களுக்கு டப்பிங் குரல் கொடுப்பதில்லை. , பிற மொழி படங்களிலும் நடிப்பதில்லை என்பது என்று இந்த கொள்கைகளை இன்று வரைக்கும் கடைபிடித்து வந்திருக்கிறார். முதல் முறையாக அந்த பாலிஸியை தளர்த்தியிருக்கிறார் ரஜினி.
இதற்கு முன்பு படையப்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று பேசப்பட்டபோது அதை கண்டிப்பாக மறுத்து விட்டார். அது அந்த கதைக்கான பாத்திரம் அதன் கம்பீரத்தைக் கெடுக்கக்கூடாது என்று சொல்லி நிராகரித்திருக்கிறார். ஆனால் இன்று ஜெய்லர் கதையில் சில காட்சிகளை மாற்றி எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சிலர் சொன்ன ஆலோசனையால் நெல்சனை அழைத்துப் பேசியிருக்கிறார். அவரும் அடுத்த பாகத்திற்கான கதை செய்வதில் ஆர்வமாக இருந்ததால் ஓகே. சொல்லி அதன் வேலையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கு அடுத்து அவர் தளர்த்திர்யிருக்கும் இன்னொரு கொள்கைதான் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ரஜினி பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த செய்தி மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு வேலைக நடந்து வருகிறது. முதலில் இதற்கான டெக்னீசியன்களை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்க இருப்பவர் கே.எஸ். ரவீந்தர பாபி என்பவர் இவர் சிரஞ்சீவியை வைத்து வால்டர் வீரய்யா படத்தை எடுத்தவர்.
ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் இது. இதன் படப்பிடிப்பு நேரத்தில் சிரஞ்சீவியிடம் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். அது ரஜினிகாக எழுதப்பட்ட கதை என்றவுடன் சிரஞுசீவி தாராளமாக ரஜினியிடம் நானே சொல்கிறேன் என்று ரஜினிக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.
ஒரு நல்ல நாளில் சென்னை வந்த ரவீந்தர பாபி ரஜினியை சந்தித்து கதையை சொல்லியிருக்கிறார். கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டது. படத்திற்கு 800 கோடி பட்ஜெட் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு முன் ரஜினி கே.பாலச்ந்தர் இயக்கிய அந்துலேனி கதா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இது 1976ம் ஆண்டு வெளிவந்திருந்தது, அதன் பிறகு 48 வருடங்கள் கடந்து இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இது நேரடியான தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிஸிகளை தளர்த்தி பணத்தை சேர்க்கும் திட்டம்.