‘வேட்டையன்’ படத்தை முடித்த கையோடு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தயாராகி விட்டார். ஆனால் ‘கூலி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் என்கிறார்கள்.
இந்த தாமதம்தான் இப்போது பல சந்தேகங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறது.
பொதுவாகவே ரஜினி கதை கேட்கும் பொழுது தனக்குள்ள சந்தேகங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கேட்பார். இயக்குனரிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்தப் பிறகு கதையில் என்னென்ன மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்பதையும் சொல்வார். அந்தந்த மாற்றங்களை செய்த பிறகு, கதை, திரைக்கதை முன்னேற்றத்தில் அடுத்த கட்டம் என்ன என்று கேட்டு தெரிந்து கொள்வார். கதை இதுதான் என்று முடிவான பிறகு படப்பிடிப்பிலோ மற்ற நேரங்களிலோ எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார். இது ரஜினியின் வழக்கம்.
அதாவது ரஜினிக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையில் திருப்தி இல்லை என்றும் அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றும் ரஜினி கூறியதாக கிசு கிசுக்கிறார்கள். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் கூறிய கதையில் சின்ன திருத்தங்கள் பற்றி கூறிய பிறகும் அதில் ரஜினிக்கு திருப்தி ஏற்படவில்லை என்றும் முணுமுணுகிறார்கள்.
தாமதம் குறித்த பல செய்திகள் உலா வரும் நிலையில் அடுத்த வாரம் ’கூலி’ படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என படக்குழுவினர் தரப்பில் தெரிவித்து இருக்கிறார்கள்.
ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஷூட்டிங் எந்தவித தாமதமும் இல்லாமல் அவருக்கு சௌகரியமான வகையில் நடக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதனால் சூட்டிங் நடக்கவிருக்கும் லொகேஷன்களுக்கான அனுமதி வாங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறதாம்.
சில லொகேஷன்களில் படப்பிடிப்புக்கான அனுமதி வாங்கிய பிறகு அடுத்த வாரம் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மற்றபடி வேறு எந்த பிரச்சினையும் இல்லை. லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும் அவர் உற்சாகமாக நடிக்க இருப்பதாகவும் படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.
ரஜினிக்கும் சன் பிக்சர்ஸ்ஸூக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான உறவின் காரணமாக இப்படத்திற்கு சிறப்பு கவனிப்பு கொடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டிருக்கிறதாம். இதனால் வேலையில் மலம் அளவான நடந்து வருகின்றன. இதனால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ’கூலி’ படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனுஷ்காவுக்கு சிரிப்பு வியாதி?
சினிமா நட்சத்திரங்களுக்கு இது ஒரு சோதனையான காலகட்டம் போல இருக்கிறது. தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது, சமந்தாவுக்கு மையோசிடிஸ் எனும் ஆட்டோஇம்யூன் பிரச்சனை வந்தது. இதனால் மொத்தமாக நிலைக்குழைந்து சுருண்டுபோன சமந்தாவின் இன்னும் மீண்டும் வரவே முடியவில்லை. ஏறக்குறைய ஒன்னரை ஆண்டு இடைவெளி எடுத்த பிறகும் கூட அவரால் இன்னும் முழுமையாக மையோசிடிஸ் பாதிப்பில் இருந்து விடுபட முடியவில்லை.
இந்நிலையில் நடிகை அனுஷ்காவும் ஒரு அபூர்வமான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தகவல் வெளியாகி உள்ளது.
அனுஷ்காவிற்கு ஸூடோபுல்பார் என்ற வியாதி இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறதாம். இது ஒரு அரிய வகை மரபணு நோய் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அது என்ன ஸூடோபுல் பார் [Pseudobulbar Affect (PBA)]?
அரிய வகை மரபணு நோயான ஸூடோபுல் பார் என்பது ஒரு வில்லங்கமான வியாதி என்கிறார்கள்.
ஸூடோபுல் பார் நோய் பாதிப்பு இருந்தால் ஒருவரால் சிரிப்பையோ அல்லது அழுகையோ கட்டுப்படுத்தவே முடியாது. சிரிக்க ஆரம்பித்து விட்டால் நிமிடங்கள் 20 அல்லது 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்து கொண்டே இருப்பார்கள். அதேபோல் அழுதால் அந்த அழுகை பல நிமிடங்களுக்கு நீடிக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நினைத்தாலும் கூட அவர்களால் சிரிப்பையோ அழுகையையோ கட்டுப்படுத்தவே முடியாது.
இந்த சிரிப்பும் அழுகையும் கூட அவர்கள் இருக்கும் சூழ்நிலைக்கோ, அவர்களுடைய உண்மையான உணர்ச்சிகளுக்கோ சம்பந்தம் இல்லாத ஒன்றாகவே இருக்கும். இது நரம்பில் உண்டாகும் பிரச்சனைகளாலோ அல்லது மூளையில் உருவாகும் காயங்களால் உண்டாகக்கூடிய ஒரு பிரச்சினையாக இருக்கிறதாம்.
இதனால் சில நேரங்களில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுவெளியில் சங்கடமாகவும் பதட்டமாகவும் இருக்கும். இதற்கு காரணமாக அவர்கள் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தனியே இருப்பதற்கான சூழலும் உருவாகிவிடுவதாக கூறுகிறார்கள். இது அன்றாட வாழ்க்கையை பாதிப்பதுடன் சமூகத்தில் அவர்கள் தனித்து விடப்படுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி விடுகிறது.
சூழ்நிலைக்கு தகுந்தவாறு நகைச்சுவையாக கமெண்ட் அடிப்பதில் கில்லாடியான அனுஷ்கா, ஷூட்டிங்கில் சில காமெடி காட்சிகள் எடுக்கும் பொழுது, தனடு சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். சிரிக்க ஆரம்பித்து 20, 30 நிமிடங்கள் வரை அவரால் சிரிப்பு நிறுத்த முடியாமல், தரையில் உருண்ட சம்பவங்களும் நடந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இதனால் சில நேரங்களில் சிரிப்பு அடக்க முடியாமல் படப்பிடிப்பை கூட ரத்து செய்து இருக்கிறாராம்.
அனுஷ்கா தனது நட்சத்திர அந்தஸ்தையும் தாண்டி தன்னுடைய பிரச்சனை பற்றி வெளிப்படையாக கூறி இருப்பது இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய அன்பையும், ஆதரவையும், அவர்களை புரிந்து கொள்வதற்கான முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வைத்திருக்கிறது.